மலைச்சாலைகளில் பாதுகாப்பாக கார் ஓட்டிச் செல்வதற்கான வழிகாட்டு முறைகள்!

கோடை விடுமுறை துவங்கிவிட்டது. படித்து ஓய்ந்திருக்கம் குழந்தைகளை காரில் வெளியூர் கூட்டி செல்வதற்கான திட்டங்களில் மண்டையை போட்டு குடைந்து கொண்டிருப்பீர்கள். அதிலும், கோடை வெயிலை சமாளிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல பலர் திட்டம் போட்டு வைத்திருப்பீர்கள்.

இந்த நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பாங்கான ஊர்களுக்கு காரை சொந்தமாக ஓட்டிச் செல்லும்போது மிக கவனமாகவும், பாதுகாப்பாகவும் செல்வது அவசியம். அதிலும், முதல்முறையாக மலைச்சாலைகளில் காரை ஓட்டிச் செல்பவர்கள் மிக கவனமாக செல்ல வேண்டும்.

சாதாரண சாலைகளில் நன்றாக கார் ஓட்டத் தெரிந்திருந்தாலும், மலை சாலைகளில் கார் ஓட்டும்போது சில கூடுதல் யுக்திகளை தெரிந்து வைத்து கொள்வது நல்லது. இதுபோன்று மலைப்பாங்கான சாலைகளில் கார் ஓட்டிச் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய சில விஷயங்களை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம்.

1. ஏற்றமான சாலை

1. ஏற்றமான சாலை

மலையில் ஏறும்போது சரிவான சாலையில் காரை நிறுத்தி, கிளப்பும்போது கிளட்ச், பிரேக், ஆக்சிலேட்டரை கன்ட்ரோல் செய்து காரை கிளப்புவது சற்று கடினமாக இருக்கும். அப்போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி காரை நகர்த்துங்கள். ஆஃப் கிளட்ச் வைத்து ஓட்டத் தெரிந்தாலும், ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி செல்வது மிக பாதுகாப்பாக இருக்கும்.

 2. சரியான கியர்...

2. சரியான கியர்...

மலையில் ஏறும்போதும், இறங்கும்போதும் குறைவான கியரில் வைத்து இறக்குவது நல்லது. மேலே ஏறும்போது எந்த கியரில் செல்வீர்களோ அதே கியரில் இறங்க வேண்டும் என்பதுதான் சூட்சுமம். அதாவது பிரேக் பயன்படுத்துவதை குறைத்து எஞ்சின் வேகத்தை கட்டுப்படுத்தி(எஞ்சின் பிரேக்கிங்) காரை இறக்க வேண்டும்.அதிக டார்க் கிடைக்கும் என்பதால், கார் தரையுடன் அதிக பிடிமானத்துடன் செல்லும். பிரேக்குக்கான வேலை சற்று குறையும். இறங்கும்போது நியூட்ரல் கியரில் வைத்து இறக்குவதை அறவே தவிர்க்கவும்.

3. எந்த கியர் சரி?

3. எந்த கியர் சரி?

குறைந்த சிசி எஞ்சின் பொருத்தப்பட்ட கார்களை 2வது கியரில் வைத்தும், அதிக சிசி திறன் எஞ்சின் கொண்ட கார்களை 3வது கியரில் வைத்து கீழே இறக்கவும். சில கார்கள் அதிவேகத்தில் கட்டுப்பாடு இல்லாமல் அதிக இடத்தை ஆக்கிரமித்து இறங்கி செல்வதை பார்த்திருப்பீர்கள். அதற்கு காரணம், சரியான கியரில் இயக்காமல் டாப் கியரில் வைத்து காரை இறக்குவதே காரணம். இதுபோன்று இறக்கும்போது காரை கட்டுப்படுத்துவது மிக கடினம். குடும்பத்துடன் செல்லும்போது அது ஆபத்தை விலை வாங்கும் விஷயமாகவே இருக்கும்.

4. ஓவர்டேக்

4. ஓவர்டேக்

சமதள சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஓவர்டேக் செய்வது போன்று மலைச்சாலைகளில் ஓவர்டேக் செய்வதை அறவே தவிருங்கள். வளைவுகள் நிறைந்த மலைச்சாலைகளில் ஓவர்டேக் செய்வதை தவிருங்கள். டிரக் போன்ற கனரக வாகனங்கள் மெதுவாக முன்னே சென்று கொண்டிருந்தால், ஓவர்டேக் செய்வதற்கு போதிய இடைவெளி உள்ள சாலை வரும்வரை பின்தொடர்ந்து செல்லுங்கள். வளைவுகளில் ஓவர்டேக் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள்.

5. ஹாரன் அவசியம்

5. ஹாரன் அவசியம்

கூர்மையான வளைவுகளில் ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்வது அவசியம். எதிரில் வரும் வாகனம் ஹாரன் அடித்தால், நீங்களும் பதிலுக்கு ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், வாகன வேகத்தையும் குறைத்து போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக காரை வளைவில் திருப்பவும்.

 6. வழி விடுங்கள்

6. வழி விடுங்கள்

பொதுவாக மலைச்சாலைகளில் செல்லும்போது மேலே ஏறும் வாகனங்களுக்கு வழி விடுவது அவசியம். இது எழுதப்படாத விதியும் கூட. எதிரில் வாகனம் வரும்போது காரின் வேகத்தையும் குறைத்துவிடுங்கள்.

7. காரை நிறுத்தும்போது...

7. காரை நிறுத்தும்போது...

மலைச்சாலையில் காரை நிறுத்தும்போது வாகனங்கள் கடந்து செல்ல போதிய இடைவெளி உள்ள இடத்தில் காரை நிறுத்துங்கள். ஹசார்டு லைட்டையும் போட்டு வைக்கவும். சில வேளைகளில் காரை மலைச்சாலையில் சரியான இடத்தில் நிறுத்தவில்லையெனில், விபத்துக்கள் நேரும் ஆபத்து இருக்கிறது.

8. தடுப்புச் சுவர் இல்லையா..

8. தடுப்புச் சுவர் இல்லையா..

சாலையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் இல்லையென்றால் மிக கவனமாக செல்ல வேண்டும். எதிரில் வாகனங்கள் வருவது தெரி்ந்தால் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வழிவிட்டு செல்வது புத்திசாலித்தனம். முன்னேறிச் செல்லக் கூடாது.

9. தடம் மாறாதீர்

9. தடம் மாறாதீர்

மலைச்சாலையில் செல்லும்போது இடதுபுறத்திலேயே காரை ஓட்டுங்கல். பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் விதத்தில் தாறுமாறாக ஓட்டிச் செல்லாதீர். வளைவுகளில் கட் அடித்து சாகசம் செய்யவும் வேண்டாம். இது உயிரை நொடியில் பறிக்கும் அபாயம் உண்டு.

10. எக்ஸ்ட்ரா வேண்டாம்

10. எக்ஸ்ட்ரா வேண்டாம்

கூடுதல் நபர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. குழந்தைகளை அழைத்துச் சென்றால் சைல்டு சீட்டில் உட்கார வைத்து அழைத்து செல்லுங்கள். நீங்களும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய மறவாதீர்.

 11. எச்சரிக்கை பலகை

11. எச்சரிக்கை பலகை

சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பலகைகளில் இருக்கும் எச்சரிக்கைகளை பார்த்துக் கொள்வது அவசியம். மேலும், எச்சரிக்கை பலகையில் குறுகிய வளைவு, சிறிய பாலங்கள் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக ஓவர்டேக் எடுக்கக் கூடாது.

 12. கையில் எமன்

12. கையில் எமன்

இப்போது மொபைல்போன்தான் கார் ஓட்டிகளுக்கும், சாலையில் செல்பவர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கார் ஓட்டும்போது மொபைல்போனில் பேசுவதையும், குறுந்தகவல் டைப் செய்வது, அனுப்புவதையும் தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக, மலைச்சாலையில் கார் ஓட்டும்போது மொபைல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.

13. பயணம் சிறக்க வாழ்த்துகள்

13. பயணம் சிறக்க வாழ்த்துகள்

ஸ்லைடரில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு முறைகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களது பயணம் சிறக்க வாழ்த்துகள்.

Most Read Articles
English summary
In an effort to improve awareness about proper hill-driving etiquette, we have compiled a list of things to keep in mind while driving in the ghats.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X