மலைப் பாதையில் கார் ஓட்டுவதற்கான வழிமுறைகள்

Hill Driving
மலைப் பாதைகளில் கார் ஓட்டுவது கொஞ்சம் கடினமான விஷயம்தான். முதல்முறையாக மலைப்பாதையில் ஓட்டும்போது மிக மிக கவனமாக செல்ல வேண்டும். சாதாரண சாலைகளில் ஓட்டுவது போன்று ஓட்ட இயலாது. எனவே, மலைப் பாதையில் கார் ஓட்டுவதற்கு சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வளைவுகளில் கண்டிப்பாக ஓவர்டேக் செய்யக்கூடாது. முன்னால் செல்லும் வாகனத்தை பின்தொடர்ந்து செல்லுங்கள். எதிரில் வாகனங்கள் வரவில்லை, வளைவுகள் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு பின் ஓவர்டேக் செய்ய வேண்டும்.

சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை பலகைகளில் இருக்கும் எச்சரிக்கைகளை பார்த்துக் கொள்வது அவசியம். மேலும், எச்சரிக்கை பலகையில் குறுகிய வளைவு, சிறிய பாலங்கள் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக ஓவர்டேக் எடுக்கக் கூடாது.

மேலும், மிதமான வேகத்தில் செல்வது சிறந்தது. கொண்டை ஊசி வளைவுகளில் திரும்பும்போது ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்ய வேண்டும். வளைவுகளில் கண்டிப்பாக இடதுபுறத்திலேயே செல்ல வேண்டும்.

ஏறும்போதும், இறங்கும்போது அவசரப்பட்டு கியர்களை ப்ளஸ் செய்யக்கூடாது. குறைந்த கியரிலேயே செலுத்த வேண்டும். மேலே ஏறும்போது எந்த கியரில் செல்வீர்களோ அதே கியரில் இறங்க வேண்டும் என்பதுதான் சூட்சுமம். அதாவது பிரேக் பயன்படுத்துவதை குறைத்து எஞ்சின் வேகத்தை கட்டுப்படுத்தி(எஞ்சின் பிரேக்கிங்) காரை இறக்க வேண்டும்.

சாலையின் பக்கவாட்டில் தடுப்புச் சுவர் இல்லையென்றால் மிக கவனமாக செல்ல வேண்டும். எதிரில் வாகனங்கள் வருவது தெரி்ந்தால் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வழிவிட்டு செல்வது புத்திசாலித்தனம். முன்னேறிச் செல்லக் கூடாது.

கீழே இறங்கும்போது சாலையில் ஜல்லி கற்கள் பரவி கிடந்தால் அந்த இடத்தில் வேகத்தை முழுவதுமாக குறைத்து செல்ல வேண்டும். இருவழிப்பாதையாக இருந்தால் வாகனங்களை கடக்கும்போது வேகத்தை முழுவதுமாக குறைத்து நிதானமாக செல்ல வேண்டும்.

கூடுதல் நபர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. குழந்தைகளை அழைத்துச் சென்றால் சைல்டு சீட்டில் உட்கார வைத்து அழைத்து செல்லுங்கள். நீங்களும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய மறவாதீர்.

(தொழில்நுட்ப பிரச்னையால் கருத்துக்களை அப்டேட் செய்ய இயலவில்லை. விரைவில் பிரச்சினை சரிசெய்யப்பட்டவுடன் கருத்துக்கள் அப்டேட் செய்யப்படும். நன்றி)

Most Read Articles
English summary
Climbing up or down a hill is probably the trickiest driving experience. Drivers need to be careful and follow some steps to ensure a safe trip. Here are some safety trps to our Drivespark readers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X