பள்ளி பேருந்தில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர் கடைபிடிக்க வேண்டியவை..!!

Written By:

ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி வேன், சைக்கிள் ரிக்‌ஷா போன்றவற்றை விட பள்ளி குழந்தைகளுக்கு அதிக பாதுகாப்பான பயணத்தை பேருந்துகள் தருகின்றன. 

இதனாலேயே குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு பெற்றோர்கள், அங்கு பேருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளதா என்பது தற்போது அவர்களிடம் அடிப்படை கேள்வியாக உள்ளது. 

பேருந்தில் பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஓட்டுநரும், ஹெல்பரும் மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொள்வது மிக முக்கியம் தான். அது அவர்களின் கடமையும் கூட

ஆனால் குழந்தைகள் தாங்களாகவே பாதுகாப்பை உணர வேண்டும் என்பது அதை விட முக்கியம். அதற்கான முயற்சில் பெற்றோர்கள் ஈடுபட வேண்டும்.

அதை செய்வது எப்படி என்பதற்கான வழிமுறைகளை தான் இனி நீங்கள் படிக்க உள்ளீர்கள்.

பள்ளி பேருந்து வருவதற்கு முன்

அவசர கதியில் ஓடிப்போய் பேருந்தில் குழந்தையை ஏற்றுவதை செய்யவே கூடாது. அதை குழந்தையின் உளவியலை பாதிக்கக்கூடும்.

பள்ளி பேருந்து வரும் இடத்திற்கு 5 நிமிடத்திற்கு முன்பாகவே குழந்தையை அழைத்து வாருங்கள். இதை முறையாக பின்பற்ற சரியான திட்டமிடல் அவசியம்.

பள்ளி பேருந்து வந்தபின்

சாலையின் ஓரத்தில் குழந்தையை வைத்து நிற்காமல், சாலையில் இருந்து 10 அடி தள்ளி நிற்பது மிக முக்கியம்.

பேருந்து வந்தபிறகு ஓட்டுநர் ஏறலாம் என்று சொன்ன பிறகு குழந்தையை பேருந்தில் ஏற்றுங்கள். முந்திசென்று சீட் போடுவது எல்லாம் வேண்டாத வேலை.

பேருந்தில் ஏறும் போது

பேருந்திற்கு பின்னர் இருந்து ஏறுவதற்கு வாய்ப்பு வந்தாலும் தவிர்த்து விடுங்கள். குழந்தைக்கு எப்போதும் ஓட்டுநர் பார்க்கும் பகுதியில் இருந்து ஏற கற்றுக்கொடுங்கள்.

பேருந்தில் ஏறுவதற்கு முன்னதாக, படிக்கட்டு அருகில் அல்லது பேருந்தை நெருங்கும் வேளையில் வாகனம் ஏதாவது வருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஜுனியர் பள்ளிக்குழந்தைகளுக்கு வழி விட்ட பின்னர், சீனியர் மாணவ மாணவியர் பேருந்தில் ஏறுவது ஏற்புடைய ஒன்று.

பேருந்தில் உட்கார்ந்த பிறகு

பேருந்து இயக்கத்தில் இருக்கும் போது கையில் இருக்கும் பொருள் கீழே விழுந்தால், அதை குனிந்து எடுக்கும் முன், ஓட்டுநரை அழைக்க குழந்தைக்கு கற்றுக்கொடுங்கள்.

மேலும் ஒட்டுநர் மற்றும் ஹெல்பரின் பெயரை குழந்தைகள் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். இது அவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியம்.

பேருந்து பயணத்தின் போது

ஜன்னல்கள் வழியே வெளிப்புறத்தை பார்க்க குழந்தைகள் அதிக ஆசைப்படுவர். இருந்தாலும் ஜன்னல்களை பிடிப்பதோ, கையை வெளியே நீட்டுவதையோ குழந்தைகள் செய்வதை பார்த்தால், அதை தீவிரமாக கண்டிக்கவும்.

பேருந்து ஓட்டத்தின் போது

மற்ற குழந்தைகளை காயப்படுத்தும் பொருட்களை குழந்தைகள் வைத்திருக்க அனுமதிக்காதீர்கள். மேலும் அவசர கதியில் ஏறினால் குழந்தை ஏறுவதற்கு முன்னர் பேருந்திற்குள் பையை வீசுவதும் பெற்றோர்கள் செய்யக்கூடாது ஒன்று.

குழந்தைகள் இருக்கையை விட்டு எழுவதையோ, அல்லது தண்ணீர் குடிப்பதையோ பார்த்தால் அதை கண்டிக்கவும். மேலும் எந்த நேரத்திலும் குழந்தைகள் ஓட்டுநரின் அருகில் செல்லாமல் இருக்க பார்த்துக்கொள்ள வேண்டும்.

பள்ளிக்கு வந்த பிறகு

குழந்தைகள் பள்ளிக்கு வந்த பின் பேருந்து முழுமையாக நின்றுவிட்டதா என்று பார்த்த பின் தான் இறங்க வேண்டும். இதை பேருந்தில் இருக்கும் ஹெல்பர்கள் குழந்தைக்கு சொல்லி தர வேண்டும்.

பேருந்தில் இருந்து இறங்கும் போது, தரையில் கால் எட்டினால் மட்டுமே ஹேண்டில் பாரை பிடித்து குழந்தையை இறங்கச் சொல்லுங்கள். இல்லையேல் வேண்டாம் என்று கண்டித்துவிட்டு, குழந்தையை நீங்களே இறக்கி விடுங்கள். படியில் இருந்து குதித்து இறங்குவதையோ, குழந்தைகள் பொருட்களை தூக்கி வீசுவதையோ என்றும் அனுமதிக்காதீர்கள்.

பள்ளி வாகனங்கள் இன்று பல பாதுகாப்பான வழிமுறையோடு செயல்பட்டாலும், குழந்தைகளுக்கு எதை செய்யலாம், எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதை உணர்த்துவது பெற்றோர்கள் மற்றும் சுற்றத்தார்களின் முக்கிய கடமை.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Tuesday, June 20, 2017, 15:06 [IST]
English summary
School bus is said to be the safest mode of transportation for students existing today. Here we have Some of the Tips for Kids Safety. Click for Details...
Please Wait while comments are loading...

Latest Photos