ஹேட்ச்பேக், எஸ்யூவி: இரண்டில் ஒன்றை தேர்வு செய்வது எப்படி?

சிறிய கார்களின் ஆதிக்கம் நிறைந்த நம் நாட்டு மார்க்கெட்டில் தற்போது காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இது பிரிமியம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்தடுத்து புதிய காம்பெக்ட் எஸ்யூவிகள் அணிவகுக்க துவங்கியுள்ளன.

ஹேட்ச்பேக் காரை வாங்கும் முடிவோடு இருந்த பல வாடிக்கையாளர்கள் தற்போது காம்பெக்ட் எஸ்யூவி மாடல்கள் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளனர். இந்த நிலையில், ஹேட்ச்பேக் கார் வாங்குவது சிறந்ததா அல்லது காம்பெக்ட் எஸ்யூவி வாங்குவதா என்பதில் அவர்களுக்கு குழப்பம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

இந்த நிலையில், தேவைகள், பட்ஜெட், பயன்பாடு ஆகியவற்றை பொறுத்து எதை தேர்வு செய்யலாம் என்பதற்கு தீர்வு காணும் வகையில் இந்த செய்தித் தொகுப்பு. முதலில் ஹேட்ச்பேக் கார்களின் சாதக, பாதகங்களையும், அடுத்து எஸ்யூவி கார்களின் சாதக, பாதங்களையும் பார்க்கலாம். இதன்மூலம், எந்த மாடலை தேர்வு செய்வது என்ற குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

எஸ்யூவி மாடல்களை ஒப்பிடும்போது ஹேட்ச்பேக் கார்கள் விலை குறைவானதாகவும், கூடுதல் வசதிகளுடன் கிடைக்கின்றன. உதாரணமாக, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் பேஸ் பெட்ரோல் மாடல் ரூ.5.6 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதைவிட சற்றே கூடுதலான விலையில் டாப் வேரியண்ட் ஸ்விஃப்ட் பெட்ரோல் மாடல் கிடைக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் டாப் வேரிண்ட் ரூ.8 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையிலும், டஸ்ட்டர் ரூ.10 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கிறது. இதைவிட ஒரு லட்ச ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் குறைவான விலையில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஸ்விஃப்ட் அல்லது ஐ20 டீசல் கார்களின் டாப் வேரியண்ட்டை வாங்க முடியும்.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

கார் வாங்கும்போது எரிபொருள் சிக்கனம் என்பது முக்கிய காரணியாக இருக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் டீசல் மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜையும், டஸ்ட்டர் 110பிஎஸ் மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலைஜயும் தருவதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், நடைமுறையில் ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜை எஸ்யூவி மாடல்களால் தர இயலாது என்பதே உண்மை. எனவே, மைலேஜ் தரும் கார்கள் வேண்டுவோர்க்கு ஹேட்ச்பேக் கார்களே பெஸ்ட்.

ஓட்டுதல் தரம்

ஓட்டுதல் தரம்

எஸ்யூவி மாடல்களைவிட ஹேட்ச்பேக் கார்கள் சிறந்த கையாளுமை கொண்டதாகவும், ஓட்டுதல் தரம் மிக்கதாகவும், எளிதானதாகவும் இருக்கும். டஸ்ட்டரைவிட ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஃபியட் புன்ட்டோ கார்களை ஓட்டும்போது இந்த விஷயம் புரியும்.

எளிதான டிரைவிங்

எளிதான டிரைவிங்

மேலும், போக்குவரத்து நெரிசல்கள், குறுகிய சாலைகளுக்கு ஹேட்ச்பேக் கார்கள் சிறந்ததாக இருக்கும். பார்க்கிங் செய்வதும் எளிது. இதெல்லாம் ஒருபுறம்... எஸ்யூவி மாடல்களிலும் ஏராளமான சாதகங்கள் இருக்கின்றன. அதனை பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவோம்.

கிரவுண்ட் கிளியரன்ஸ்

கிரவுண்ட் கிளியரன்ஸ்

எஸ்யூவி மாடல்களின் மிகப்பெரிய பலமே அதன் கூடுதலான கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் காருக்கும், தரைக்குமான இடைவெளிதான். ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் ஆகியவை 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டவை. இதனால், எந்தவொரு சாலைகளிலும் எளிதாக செல்ல முடியும். ஹேட்ச்பேக் கார்களில் சிறிய மேடுபள்ளங்களில் கூட மிக கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டு. மேலும், திடீரென வரும் வேகத்தடைகளும் காரை பதம் பார்க்கும் ஆபத்துக்கள் ஹேட்ச்பேக் காரில் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.

டிரைவிங் பொசிஷன்

டிரைவிங் பொசிஷன்

ஹேட்ச்பேக் கார்களைவிட எஸ்யூவி மாடல்கள் உயரம் கூடுதலாக இருப்பதால், டிரைவிங் பொசிஷன் சிறப்பானதாக இருக்கும். சாலையை தெளிவாக பார்த்து ஓட்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.

இடவசதி

இடவசதி

எஸ்யூவி மாடல்களின் மற்றொரு பலமாக இடவசதியை கூறலாம். ஹெட்ரூம், லெக்ரூம் ஆகியவை சிறப்பாக இருப்பது இதன் பலம்.

எதை வாங்குவது?

எதை வாங்குவது?

பட்ஜெட், மைலேஜை யோசிப்பவர்களுக்கு ஹேட்ச்பேக் கார்களே சிறந்தது. ஹேட்ச்பேக் கார்களைவிட மாதத்திற்கு ரூ.3,000 வரை கூடுதல் மாதாந்திர தவணையை செலுத்த வேண்டும் என்பதோடு, எஸ்யூவி கார்களின் பராமரிப்பு செலவு மற்றும் உதிரிபாகங்கள் விலையும் அதிகம். இந்த செய்தித் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் ஹேட்ச்பேக் காரா அல்லது எஸ்யூவியா என்பதை நீங்கள் எளிதாக முடிவு செய்ய முடியும்.


Most Read Articles
English summary
With increased competition automakers have been forced to introduce products in every price point. As a result we now get hatchbacks, compact sedans and even compact SUVs in the same price range. This poses a dilemma for the buyer. In this post we'll try to help you make the decision before buying. 
Story first published: Monday, August 12, 2013, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X