தினசரி நீங்கள் செய்யும் இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

சிகரெட் பிடிப்பது, நீண்ட நேரம் மொபைல்போனில் கேம் ஆடுவது போன்ற பழக்கங்கள் உடனடியாக பாதிப்பை காட்டாவிட்டாலும்கூட, நாளடைவில் மனிதர்களுக்கு பெரும் உடல் உபாதைகளை தந்து விடுகிறது. அதேபோன்று, கார் ஓட்டும்போதும், பராமரிப்பின்போது தொடர்ந்து செய்யும் சில தவறுகள் உங்கள் காரின் ஆயுளை வெகுவாக பாதிக்கும்.

அனைவரும் பொதுவாக செய்யும் சிறிய தவறுகளையும், அதனால் காருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மேலும், இந்த தவறுகளை போக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் தொடர்ந்து காணலாம்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

மலைச்சாலைகளில் இறங்கும்போதும், சரிவான சாலைகளில் கீழே இறங்கும்போது சிலர் பிரேக்கை பிடித்துக் கொண்டே வேகத்தை குறைத்து காரை இறக்குகின்றனர். காரை கட்டுப்பாடாகவும், பாதுகாப்பாகவும் ஓட்டுவது போன்ற உணர்வை தருவதுபோல் எண்ணுகின்றனர்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

இதுபோன்று செய்வதால் பிரேக் பேடுகள் சீக்கிரமே தேய்ந்து போய் பிரேக் ஃபெயிலியர் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். இறக்கமான பகுதியில் இறங்கும்போது கியரை குறைத்து வேகத்தை கட்டுப்படுத்தி இயக்க வேண்டும். பிரேக்கை தேவையான போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

அடுத்ததாக பலர் செய்யும் பொதுவான தவறு. வேகத்தை சீராக குறைக்காமல் திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவது. இதுபோன்று நிறுத்துவதால் பிரேக் பேடுகளும், பிரேக் ரோட்டர்களும் அதிக பாதிப்புகளை சந்திக்கும். சீக்கிரமே இவற்றை மாற்ற நேரிடுவதால் பாக்கெட்டிற்கு பங்கம் வைப்பது மட்டுமல்ல, இதுபோன்று நிறுத்துவதால் மைலேஜும் வெகுவாக குறையும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

இதனை தவிர்க்க முன்னால் செல்லும் வாகனத்துடன் போதிய இடைவெளி விட்டு செல்லவும். பகல் வேளையில் 4 வினாடிகள் இடைவெளியிலும், இரவு வேளை மற்றும் மழை நேரங்களில் 6 வினாடிகள் இடைவெளியில் காரை இயக்கவும். சீராக பிரேக் பிடிக்க கற்றுக் கொண்டாலே இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

ஸ்டீயரிங் வீலை ஒரு கையால் பிடித்துக் கொண்டு இன்னொரு கையை கியர் லிவர் அல்லது ஹேண்ட் பிரேக் லிவரில் வைத்துக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. நாம் கை வைப்பதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று நினைப்பது இயல்பு. ஆனால், கியர் லிவரில் கையால் ஏற்படும் சிறிய அழுத்தம் கூட அதிக பாதிப்பை உண்டாக்கும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

ஹேண்ட் பிரேக் லிவரின் ஸ்லைடரும் தேய்மானம் ஏற்படும். எப்போதுமே இரண்டு கைகளால் ஸ்டீயரிங் வீலை பிடித்து ஓட்டுவதுதான் பாதுகாப்பானது. நீண்ட தூர பயணத்தின்போது ஹேண்ட்ரெஸ்ட் மீது கையை வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில், ஹேண்ட்ரெஸ்ட் ஒன்று வாங்கி பொருத்திக் கொள்ளலாம்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

நீண்ட தூர பயணங்களின்போது பலர் அதிக பாரத்தை காரில் ஏற்றிச் செல்கின்றனர். இதனால், காரின் சஸ்பென்ஷன், பிரேக்குகள், எஞ்சின் ஆகியவை கூடுதல் சுமையை எதிர்கொண்டு அதிக பாதிப்பை சந்திக்கின்றன. அதிக பாரத்துடன் வேகமாக செல்லும்போது பேலன்ஸ் கிடைக்காது. காரை கட்டுப்படுத்துவதும் சிரமம். எனவே, தேவையில்லாத பொருட்களை இனம் கண்டு தவிர்த்துவிடுங்கள்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

இதுவும் தினசரி பலர் செய்யும் தவறுதான். சிக்னல்களில் காத்திருக்கும்போது ஆக்சிலரேட்டரை கொஞ்சம் கொடுத்துக் கொண்டே க்ளட்ச் மூலமாக கட்டுப்படுத்திக் கொண்ட நிற்பதை காணலாம். க்ளட்ச் ஓவர்ரைடிங் என்று இதனை கூறுவர்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

இதுபோன்று செய்வதால், க்ளட்ச் பிளேட் சீக்கிரமாக தேய்ந்து போக செய்யும். ஹேண்ட்பிரேக்கை போட்டு சற்று க்ளட்ச்சிற்கும், எஞ்சினுக்கும் ஓய்வு கொடுங்கள். கால்களுக்கும் ஓய்வு கிடைக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். க்ளட்ச் ஃபெயிலியர் ஏற்பட்டால் அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து இன்றிலிருந்தே மேற்கண்ட உபாயத்தை கடைபிடியுங்கள்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

குளிர்காலங்களில் காரை ஸ்டார்ட் செய்த உடனே, கிளப்பிக்கொண்டு செல்லாதீர்கள். குளிரில் எஞ்சினில் இருக்கும் ஆயில் கெட்டித் தன்மையடைந்திருக்கும். எனவே, காரை ஸ்டார்ட் செய்து 60 வினாடிகளாவது ஐட்லிங்கில் விட்டு பிறகு கிளப்புங்கள். அப்போதுதான், ஆயில் இளகி எஞ்சின் முழுவதும் சீராக பரவியிருக்கும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

டர்போசார்ஜர் பொருத்தப்பட்ட கார்களை உடனே ஆஃப் செய்யக்கூடாது. எஞ்சினை விட அதிக வேகத்தில் சுற்றும் டர்போசார்ஜர் விசிறிகள் குளிர்ச்சியடைய எஞ்சினைவிட சற்று கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும். உடனே எஞ்சினை ஆஃப் செய்தால் டர்போசார்ஜரில் பாதிப்புகள் ஏற்படும். குறைந்தது 60 வினாடிகள் ஐட்லிங்கில் விட்டு எஞ்சினை ஆஃப் செய்யவும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

பலர் காரை நிறுத்துவதற்கு முன்னரே ரிவர்ஸ் கியரை போட்டுக்கொண்டு அவசரம் அவசரமாக ரிவர்ஸ் எடுக்கின்றனர். கார் முன்னோக்கி செல்கையில் நிறுத்துவதற்கு முன்னரே இவ்வாறு ரிவர்ஸ் கியர் போடுவதும் கியர்பாக்ஸில் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆட்டோமேட்டிக் கார்களுக்கும் இது பொருந்தும். காரை நிறுத்திய பின்னரே ரிவர்ஸ் கியர் போட்டு பின்னால் எடுக்கவும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

குறைவாக எரிபொருள் நிரப்புவதை சிலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், எரிபொருள் டேங்க்கின் அடியில் கசடுகள் தேங்கியிருந்தால் அது எஞ்சினுக்குள் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இது எஞ்சினுக்குள் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

வேகமாக வந்து நிறுத்துவது, அதேவேகத்துடன் கிளப்புவது போன்றவையும் எஞ்சின், பிரேக், சஸ்பென்ஷன் பாகங்களை வெகுவாக பாதிக்கும். எப்போதுமே, சீராக வேகத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் வேண்டும்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

"நேரமே இல்லைங்க", என்று சொல்லிக்கொண்டே சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யாமல் விடுவதும் காரின் ஆயுளை குறைக்கும் விஷயம். சரியான நேரத்தில் ஆயில் மாற்றுவது, தேய்மானம் அடைந்த பாகங்களை மாற்றுவதும் அவசியம்.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

எல்லாவற்றிற்கும் மேலாக இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் விளக்குகள் தரும் எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்த வேண்டாம். தெரியவில்லையெனில், சர்வீஸ் எஞ்சினியர் அல்லது மெக்கானிக்கிடம் கேட்டு தெளிந்து கொள்வது நல்லது.

இந்த தவறுகளால் உங்கள் காரின் ஆயுள் குறையும்!

இந்த வழிமுறைகளை கடைபிடித்து சிறந்த ஓட்டுனராகவும், உரிமையாளராகவும் பழகிக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளையும், மன உளைச்சல்களையும் தவிர்க்க முடியும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம் என்பதுடன், காரின் மறுவிற்பனை மதிப்பிலும் பாதிப்பு இருக்காது.

Most Read Articles
English summary
Some Bad Driving Habits That Damage Your Car. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X