சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வகைகளிலேயே நவீன தொழில்நுட்பம் வாய்ந்ததாக சிவிடி கியர்பாக்ஸ் குறிப்பிடப்படுகிறது. தற்போது நம் நாட்டு கார் மார்க்கெட்டில் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட கார் மாடல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. சாதாரண ஆட்டோமேட்டிக் கார்களுக்கும், சிவிடி கியர்பாக்ஸ் கார்களுக்கும் அதிக வித்தியாசம் உண்டு.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும் முறைகளிலும் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இந்த சிவிடி கியர்பாக்ஸ் கார்களை வாங்குவோர் ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் இதன் சாதக, பாதகங்களை இந்த செய்தியில் காணலாம்.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது வேகத்தை சீராக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடனே ஆக்சிலரேட்டரை அதிகமாக கொடுக்கும்போது, எஞ்சின் சுழல்வேகம் அதிகரித்தாலும், காரின் வேகம் அதிகரிக்காது. பிற கார்களை போல உடனடி பிக்கப் கிடைக்காது. எனவே, துவக்க நிலையில் சீராக ஆக்சிலரேட்டரை கொடுத்து நகர்த்த வேண்டும்.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

அதேநேரத்தில், அதிவேகத்தில் செல்லும்போது மிகச்சிறப்பான பிக்கப் கிடைக்கும் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். மேலும், அதிவேகத்தில் செல்லும்போது மெதுவாக ஆக்சிலரேட்டரை குறைக்க பழகிக்கொள்வதும் அவசியம்.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில், குறைந்தது 5 கிமீ வேகத்திற்கு குறையாமல் அல்லது நடை வேகத்துக்கு காரை இயக்குவது அவசியம். இல்லையெனில், பெல்ட் வழுக்குவதோடு, அதிக உராய்வு காரணமாக அதிக வெப்பமும், தேய்மானமும் ஏற்படும்.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

அதிக பாரத்தை ஏற்றுவதையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, மலைச் சாலைகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவில்தான் பாரத்தை ஏற்றிச் செல்ல வேண்டும். இல்லையெனில், சீக்கிரமே தேய்மானம் அடையும் என்பதுடன், வழுக்கும் அபாயமும் இருக்கிறது.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

சரிவான பாதையில் காரை நிறுத்துவதை தவிர்க்கவும். சமதளமான இடத்தில் நிறுத்துவதன் மூலமாக பெல்ட் தேய்மானத்தையும், சிவிடி கியர்பாக்ஸுக்கு ஏற்படும் அழுத்தத்தையும் தவிர்க்க முடியும். சரிவான பாதையில் இறங்கும்போது Lower மோடில் வைத்து காரை இறக்க வேண்டும் அல்லது மேனுவல் மோடில் மாற்றிக் கொள்வது நல்லது.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

கியர்பாக்ஸிலிருந்து வழக்கத்தைவிட அதிக சப்தம் வருவதாக தோன்றினாலும், பெல்ட் தேய்மானத்தில் ஏற்படும் வாடை தெரிந்தாலும் காரை தொடர்ந்து இயக்க வேண்டாம். மெக்கானிக் அல்லது சர்வீஸ் மையத்தில் ஆய்வு செய்து தெளிந்து கொண்ட பின்னரே இயக்குவது நல்லது.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

மேடான சாலைகள் அல்லது ஏற்றமான மலைச் சாலைகளில் நிறுத்தி எடுக்கும்போது, பிரேக்கை சில நொடிகள் பிடித்து பின்னர் காரை நகர்த்தவும். சிவிடி கியர்பாக்ஸ் இயக்கத்திற்கு சில நொடிகள் தேவைப்படும். இல்லையெனில், கார் பின்னோக்கி உருள்வதற்கான வாய்ப்பு அதிகம். சாதாரண கார்களில் செய்வது போன்று, ஆக்சிலரேட்டரை கொடுத்து காரை முன்னோக்கி செலுத்த முற்பட வேண்டாம்.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

சரிவான பாதையில் இறங்கும்போது பெரும்பாலும் மேனுவல் மோடில் காரை வைத்து இயக்குவது அவசியம். அவ்வாறு செய்வதன் மூலமாக அவசர நேரத்தில் எஞ்சின் பிரேக்கிங் செய்வதற்கு வசதியாக இருக்கும்.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

சிவிடி கியர்பாக்ஸ் கார்களில் இருக்கும் நன்மை, தீமைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து காணலாம். சிவிடி கியர்பாக்ஸ் கார்களில் கியர் மாற்றத்தின் போது ஏற்படும் அதிர்வுகள் என்பது தெரியாத வகையில், அது தொடர்ச்சியான இயக்கமாக இருக்கிறது. எனவே, மிக மென்மையான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கும்.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

சாதாரண ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கார்களைவிட சிவிடி கியர்பாக்ஸ் கார்கள் அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் இயக்கும்போது கூட சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

வேகம் சீராகவே அதிகரிக்கும். எனவே, உடனடி வேகத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறப்பானதாக இருக்காது.

சிவிடி கியர்பாக்ஸ் கார்களை ஓட்டும்போது மனதில் வைக்க வேண்டிய விஷயங்கள்!!

பொதுவாக இலகு வகை வாகனங்களில்தான் சிவிடி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்படுகிறது. கனரக வாகனங்களில் இந்த சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்படுவதில்லை.

Most Read Articles
English summary
Read in Tamil: What Are Some Good Tips For Driving A CVT Gearbox Car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X