கோடை காலத்தில் கார் டயர் வெடிக்கும் அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

கோடை காலத்தில் அதிவேகத்தில் செல்லும் கார்களில் டயர் வெடிப்பு சம்பவத்தால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

கோடை விடுமுறை துவங்கி உள்ள நிலையில் காரில் வெளியூர் பயணங்கள் செல்ல பலர் திட்டமிட்டு இருப்பீர்கள். இந்த நிலையில், கோடை காலத்தில் காரில் பயணிக்கும்போது சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக, கோடை காலத்தில் காரில் டயர் வெடித்து விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தற்போது நவீன தொழில்நுட்பத்தில் டயர்கள் தயாரிக்கப்பட்டாலும், சுட்டெரிக்கும் இந்த வெயில் காலத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்து கொள்ள சில விஷயங்களை நாம் மனதில் வைக்க வேண்டும். அதனை தொடர்ந்து காணலாம்.

கார் டயர் வெடிக்கும் அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும்போது, டயர் சீக்கிரமாகவே சூடாகும். குறிப்பாக, டயரின் உட்புறத்தில் இருக்கும் அதிக அழுத்தத்தில் இருக்கும் காற்று சீக்கிரமே வெப்பமடைவதால், காற்றழுத்தம் அதிகரிக்கும்.

Image Source: The Covai Post

கார் டயர் வெடிக்கும் அபாயத்தை தவிர்ப்பது எப்படி?

அதிவேகத்தில் பயணிக்கும்போது உள்ளே இருக்கும் சூடான காற்று மேலும் வெப்பம் அதிகரித்து டயர் வெடிப்புக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, ரேடியல் டயர்களில் உள்ளே இருக்கும் நைலான் தையல்கள் அதிக வெப்பம் மற்றும் உராய்வு காரணமாக, டயர் வெடிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. இதனை தவிர்க்க சில உபாயங்களை மனதில் கொள்ளலாம்.

 #1 காற்றழுத்தம்

#1 காற்றழுத்தம்

காரில் நீண்ட தூரம் பயணம் கிளம்பும்போது டயரில் சரியான காற்றழுத்தம் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ளலாம். ட்யூப்லெஸ் டயர்களில் பஞ்சர் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதையும் பஞ்சர் கடையில் சென்று சரிபார்த்து செல்லுங்கள். டயரில் காற்றழுத்தத்தை சரியாக வைப்பதன் டயர் வெடிப்பு அபாயத்தை தவிர்ப்பதுடன், மைலேஜும் அதிகமாக கிடைக்கும்.

#2 டயர் பரிசோதனை

#2 டயர் பரிசோதனை

டயரில் ட்ரெட் தடிமன் எந்தளவு இருக்கிறது என்பதையும் சரிபார்ப்பது அவசியம். குறைந்தது 1.6மிமீ தடிமனுக்கு ட்ரெட் இருத்தல் அவசியம். அத்துடன், சைடு வால் எனப்படும் பக்கவாட்டு பகுதிகளையும் குறைபாடுகள் இருக்கிறதா என்பதையும் சரிபார்த்துவிடுங்கள்.

#3 வீல் பேலன்சிங் மற்றும் அலைன்மென்ட்

#3 வீல் பேலன்சிங் மற்றும் அலைன்மென்ட்

வீல் பேலன்சிங் மற்றும் வீல் அலைன்மென்ட் செய்துவிடுவதும் அவசியம். ரிம்மில் ஏற்படும் குறைபாடுகள் காரணமாக, டயரில் பாதிப்பு ஏற்படும். இதனை வீல் பேலன்ஸிங் மற்றும் வீல் அலைன்மென்ட் செய்வதன் மூலமாக தவிர்க்க முடியும். மேலும், அதிர்வுகளும் குறைவதுடன், எரிபொருள் சிக்கனத்தை பெறவும் உதவும்.

#4 ஓவர்லோடு

#4 ஓவர்லோடு

அதிக பாரத்தை காரில் ஏற்றிச் செல்வதை தவிர்ப்பதும் அவசியம். குறிப்பாக, அதிவேகத்தில் செல்லும்போது அதிக பாரம் காரணமாக, உராய்வு அதிகரித்து டயர் வெடிக்கும் அபாயம் இருக்கிறது.

 #5 தோசைக்கல் டயர்

#5 தோசைக்கல் டயர்

தேய்மானம் அடைந்த டயர்களை உடனடியாக மாற்றிவிட்டு நீண்ட தூர பயணத்தை துவங்கவும். குறிப்பாக, டயரின் ட்ரெட் எந்தளவு இருக்கிறது என்பதை வைத்து உடனடியாக டயர்களை மாற்றிவிடவும்.

06. டயர் மாற்றிப்போடவும்...

06. டயர் மாற்றிப்போடவும்...

முன்பக்க டயர்கள் அதிக தேய்மானம் அடையும். தேய்மானத்தை பொறுத்து முன்பக்க டயர்களை பின்பக்கத்தில் மாற்றிப்போடவும். மாற்றிப்போடுவதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. அதனை பின்பற்றியே மாற்றிப்போட வேண்டும்.

#7 ஓவர்ஸ்பீடு

#7 ஓவர்ஸ்பீடு

கோடை காலத்தில் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது சீரான வேகத்தில் செல்ல பழகிக் கொள்ளவும். அதிவேகம் மிக அதிக ஆபத்தை தரும் என்பதுடன், டயர் வெடிப்புக்கு வழிகோலிவிடும். தார் சாலையை விட கான்க்ரீட் சாலைகளில் செல்லும்போது அதிக கவனம் தேவை. கான்க்ரீட் சாலைகளில் டயர்கள் மிக விரைவாக சூடாகும்.

#8 சரியான வேகம்

#8 சரியான வேகம்

காற்றழுத்தம் சரியாக இல்லாத பட்சத்தில், அதிவேகத்தில் செல்வது மிகுந்த ஆபத்தை தரும். கடும் கோடை காலத்தில் மணிக்கு 100 கிமீ வேகத்துக்கு மிகாமல் காரை இயக்குவது நல்லது.

 #9 இடைவேளை

#9 இடைவேளை

விரைவு சாலைகளில் பரிந்துரைக்கப்பட்ட வேகத்தில் செல்வது அவசியம். அத்துடன், அடிக்கடி காருக்கு ஓய்வு கொடுப்பதும் அவசியம். இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை காருக்கு ஓய்வு கொடுத்தால், நிச்சயம் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

#10 டயர் வெடித்தால்...

#10 டயர் வெடித்தால்...

இந்த வழிமுறைகளை மிகச் சரியாக கையாண்டும், ஒருவேளை டயர் வெடித்துவிட்டால் என்ன செய்வது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். டயர் வெடித்துவிட்டால், ஸ்டீயரிங் வீலை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். நேராக கார் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

#11 பதட்டம் வேண்டாம்...

#11 பதட்டம் வேண்டாம்...

முன்பக்க டயர் வெடித்தால், எந்த வீல் டயர் வெடித்துள்ளதோடு அந்த பக்கமாக கார் திரும்பும். எனவே, ஸ்டீயரிங் வீலை நேராக பிடித்து கார் எந்த பக்கமும் திரும்பாமல் செல்லுமாறு பார்த்துக் கொள்ளவும். அப்போதுதான் கார் நிலைகுலையாது. பதட்டப்படாமல், இண்டிகேட்டர் விளக்குகளை ஒளிரவிட்டு, காரின் வேகத்தை குறைத்து நிறுத்த முயற்சிக்கவும். வேகம் குறைந்தவுடன், சாலை ஓரத்திற்கு காரை மெதுவாக கொண்டு வந்து நிறுத்திவிடவும்.

Most Read Articles
English summary
Tips to avoid tyre burst this summer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X