மழையை எதிர்நோக்கி இருக்கும் தமிழகத்திற்கு, மழைக்காலங்களில் பைக் ஓட்டுவதில் உள்ள சில எளிய வழிமுறைகள்!

Written By:

தமிழகத்தில் ஆங்காங்கே மழை வரும் அறிகுறி இருந்தாலும், மழை பெய்யும் அளவு குறைவாகத்தான் உள்ளது.

இருப்பினும், தென் தமிழகத்தின் சில பகுதிகளில் மழை சில சமயங்களில் தலையை காட்டி விட்டு போகிறது.

இருந்தாலும் சென்னை வானிலை ஆய்வு மையம் தென் மேற்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மழை காலங்களுக்கு ஏதுவாக மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்வது பற்றிய சில டிப்ஸ் உங்களுக்காக...

பளிச் வண்ண உடைகளை அணியுங்கள்

மழைகாலங்களில் பைக்கை பராமரிப்பதற்கு முன்னதாக, உங்கள் உடையை தேர்வு செய்வதில் அதிக முக்கியம் தேவை.

மழைகாலங்களில் தட்பவெட்பம் சற்று குறைவாகவே இருக்கும். இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகளை பார்ப்பது மிக கடினம்.

இந்த சமயங்களில் மஞ்சள், ஆரஞ்சு போன்ற பளீச் வண்ண உடைகளை தேர்வு செய்தால் எதிரே வரும் வாகன ஓட்டிக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

ஹெல்மெட் அணிய மறவாதீர்கள்

சேறும் சகதியுமான சாலையில் செல்லும் போது பைக் ஓட்டுவதில் அதிக கவனம் தேவை. சறுக்கி விழ வாய்ப்புள்ளது.

இதை தடுக்க, நாம் முகத்தை முழுவதுமாக மூடும் ஹெல்மெட்டை அணியவேண்டும். அப்போது தான் ஆபத்து நேர்ந்தால் கூட அதை நாம் தற்காத்துக்கொள்ள முடியும்.

ஹெல்மெட்டில் அதிக கீறல்கள் இருந்தால் மழை தொடங்குவதற்கு முன்னதாக அதை மாற்றுவது மிக நல்லது.

டயர்களை எப்போது செக் செய்யுங்கள்

டயர்கள் சாலையில் சரியாக இயங்கினால் தான் நாம் வாகனங்களை சரியாக இயக்க முடியும்.

டயரின் ரப்பர்கள் சரியான இழுவை தன்மையோடு உள்ளதா என்பதை அணுதினமும் செக் செய்ய வேண்டும். இது மிக முக்கியம்.

மேலும் முகப்பு விளக்குகள், இண்டிகேட்டர்கள், ஹார்ன் மற்றும் கன்சோல் போன்றவை சரியான செயல்பாட்டோடு உள்ளனவா என்பதிலும் கவனம் தேவை. அதில் ஏதேனும் குறைபாடு தெரிந்தால், ஒயரிங்கை மாற்றுவது நல்லது.

ஹேண்டில்பார் கையாளுவதில் கவனம்

மழை பெய்யும் சாலைகளில் செல்லும் போது நிதானம் தேவை. சாலையின் தண்ணீரை பார்த்த உடன், உற்சாகமடைந்து வேகமாக ஹேண்டில்பாரை முறுக்குவது எல்லாம் தேவை இல்லாத வேலை.

மேலும், ஓரங்களில் மற்றும் சாலை முனைகளில் திரும்பும் போது, ஹேண்டில்பாரை சாய்ந்த நிலையில் இயக்கினால் பேலன்ஸ் பெறுவது சுலபம்.

வண்டியில் அதிகபட்ச உறுதியான இழுவையை பெற பைக்கின் முன் மற்றும் பின் பிரேக்குகளை ஒருங்கே இயக்கவும். மேலும் பிரேக்கை விடுக்கும் போதும், அதை நிதானமாக கையாளவும்.

இடைவெளியை சரியாக பின்பற்றவும்

சாலையில் வாகனம் சென்று கொண்டு இருக்கும் போது, அதை பைக்கில் சென்று அருகில் அணுகுவதை தவிர்க்கவும்.

மழை உங்கள் பார்வையில் தடங்கள் ஏற்படுத்தும் என்பதால், பிரேக்கிங் எடுக்கும் சமயங்களில் வாகனங்களுக்கு இடையில் சில அடி தூரங்களை பின்பற்றுவது நல்லது.

மேலும் மற்றொரு வாகனத்தை முந்தி செல்வதிலும் கவனம் தேவை. அதற்கு எப்போதும் பைக்கை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

சுற்றுப்புறத்தை உற்று நோக்கவும்

கடலோர மாவட்டங்களில் மழை சமயங்களில் காற்றின் வேகம் அதிகம் இருக்கும் என்பதால், மரம் முறிந்து விழுவது, கிளைகள் உடைவது சாதரணமாக நடக்கும்.

அதனால் ஹெல்மெட், ரெயின்கோட் உள்ளிட்ட இத்யாதிகளுடன், பைக்கை ஓட்டுவதிலும் பாதுக்காப்புடன் செயல்படவும்.

மேலும் சென்னை போன்று சாலைகளில் அதிக நீர் தேங்கி இருந்தால், அதில் பைக்கை இயக்குவதை தவிர்க்கவும். இதனால் எஞ்சின் பழுதடைய வாய்ப்பு அதிகம்.

சாலைகளை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் உள்ளது. மழை பெய்யும் சமயங்களில் இறக்கமான, குறுகலான சாலைகளில் பயணம் செய்வதை தவிருங்கள்.

வாகனத்தை ஒட்டிய படியே மழை பெய்யும் அந்த தருணம் ஒரு சுகமான அனுபவம் தான். அதுபோன்ற மகிழ்வான தருணங்களில் என்றும் கவன சிதறல்கள் கூடாது என்பதை நினைவில் நிறுத்துக. 

Story first published: Monday, June 19, 2017, 13:12 [IST]
English summary
We List You the Some Important Tips, need to Follow for Riding Two Wheelers during the Monsoon. Click for details...
Please Wait while comments are loading...

Latest Photos