காரின் மறுவிற்பனை மதிப்பை உயர்த்துவதற்கான வழிமுறைகள்!

Written By:

காரின் மறுவிற்பனையை மதிப்பை உயர்த்துவதற்கான வழிமுறைகளை புதிய கார் வாங்கிய முதல் நாளில் இருந்தே மேற்கொள்வது அவசியம். அதற்கான வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

இடைவெளி

வாங்கிய நாள் முதல் காரை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வதுதான் சிறந்த மறுவிற்பனை மதிப்பை பெற்றுத் தரும். நகர்ப்புறங்களில் ஓட்டும்போது பிற வாகனங்களுடன் சற்று இடைவெளிவிட்டு செல்லுங்கள்.

சில சமயம் பிற வாகனங்கள் மீது மோதுவதாலும், இருசக்கர வாகனங்கள் உரசுவதாலும் காரில் சிராய்ப்புகள் ஏற்படும். இதனை தவிர்க்க நிதானமாகவும், கவனமாகவும் ஓட்டவும்.

சுத்தம்

மாதத்திற்கு இரண்டு முறையாவது காரை கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். போர்டிகோ அல்லது பார்க்கிங் பகுதியில் காரை பார்க்கிங் செய்வது நல்லது. தெருவிலும், வெட்டவெளியிலும் நிறுத்தப்படும் கார்கள் நாள் ஆக ஆக பொலிவை கொஞ்சம் கொஞ்சமாக பொலிவை இழக்கும்.

சர்வீஸ்

தயாரிப்பாளர் பரிந்துரையின் பேரில் சரியான இடைவெளியில் காரை சர்வீஸ் செய்வது அவசியம். குறிப்பிட்ட இடைவெளியில் எஞ்சின் ஆயில் மாற்றுவது உள்ளிட்ட வழக்கமான விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும்.

சரியான இடைவெளியில் கார் சர்வீஸ் செய்வதன் மூலமாக கார் சிறந்த முறையில் இருப்பதோடு, வாரண்டி பெறுவதற்கும் பிரச்னை இருக்காது.

எஞ்சின்

கார் எஞ்சினை சீராக இயக்குவதும் பலன் தரும். இதனால், நீண்ட காலம் சிறந்த முறையில் எஞ்சின் இயங்கும். மைலேஜ் சிறப்பாக இருப்பதுடன், உங்களது காருக்கு எதிர்காலத்தில் சிறந்த மதிப்பை பெற்று தரும்.

மாறுதல்கள்

காரில் தேவையற்ற ஆக்சஸெரீகள் வாங்கி பொருத்துவதை தவிர்க்கவும். எஞ்சின் மற்றும் புகைப்போக்கி அமைப்புகளில் மாறுதல்களை செய்வதையும் தவிர்க்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட டீலர்களில் மட்டுமே எலக்ட்ரிக்கல் வேலைகளை செய்வதும் வாரண்டி பிரச்னை இருக்காது என்பதுடன், மறுவிற்பனை மதிப்பிலும் பிரச்னை இருக்காது.

இதை செய்யாதீங்க

காருக்குள் தின்பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதேபோன்று, காருக்குள் புகைப்பிடிப்பதையும் நிறுத்திக் கொள்ளுங்கள். சிகரெட் வாடை மற்றும் அழுக்குப் படித்த இருக்கைகள் ஆகியவை காரின் மறுவிற்பனை மதிப்பை குறைக்கும் விஷயங்களாக இருக்கும்.

கவனம்

காரில் ஏற்படும் சிறிய பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் சரி செய்துவிடவும். அந்த பிரச்னை பெரிதானால் காரின் மறுவிற்பனை மதிப்பில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

முக்கியம்

காரின் முக்கிய ஆவணங்கள், சர்வீஸ் செய்த ரசீதுகள் உள்ளிட்டவற்றை பாதுகாத்து வைப்பதும் அவசியம். இதன்மூலமாக, வாங்குபவர் மிகுந்த நம்பிக்கையுடன் உங்களது காரை தேர்வு செய்ய வழி கிடைக்கும். அதிக மறுவிற்பனை மதிப்பும் பெறும் வாய்ப்புள்ளது.

English summary
Tips To Improve Your Car's Resale Value.
Please Wait while comments are loading...

Latest Photos