கார் ரிவர்ஸ் எடுக்கும்போது எவ்வளவு எச்சரிக்கையா இருக்கணும் பார்த்தீங்களா?

Written By:

கார் ஓட்டும்போது ஒவ்வொரு வினாடியும் கவனம் தேவை. சிறு கவனக் குறைவு கூட பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இதற்கு உதாரணமாய் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூர், ஜே.பி.நகரில் 14 மாத குழந்தை ஒன்று வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, ஹோண்டா சிவிக் காரின் ஓட்டுனர் காரை ரிவர்ஸ் எடுக்க முனைந்தார். அப்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே வந்துவிட்டது.

இதனை கவனிக்காமல், ஹோண்டா சிவிக் கார் ஓட்டுனர் தொடர்ந்து காரை பின்புறமாக இயக்கியுள்ளார். அப்போது அந்த கார் இடித்துத் தள்ளி அந்த குழந்தை கீழே விழுந்துவிட்டது. மேலும், நூல் இழையில் அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.

இந்த காட்சிகள் அங்கிருந்த மற்றொரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் கார் ஓட்டுனர்கள் எந்தளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. கார் ஓட்டுவதில் மிகுந்த அனுபவசாலிகள் கூட ரிவர்ஸ் எடுக்கும்போது கவனக்குறைவாக செயல்படுவது இதுபோன்ற விபரீதத்தை ஏற்படுத்திவிடும்.

எமது முதல் பரிந்துரை, கார் வாங்கும்போது ரிவர்ஸ் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் சென்சார் பொருத்தப்பட்ட கார்களை வாங்குவது உத்தமம். உயர்வகை வேரியண்ட்டுகளில் இவை காருடனே சேர்த்து கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த வசதி இல்லாத கார்களில் முதல் வேலையாக ரிவர்ஸ் சென்சார்கள் மற்றும் ரிவர்ஸ் கேமராவை பொருத்திக் கொள்வது இதுபோன்ற விபரீதங்களை தவிர்க்க உதவும். தற்போது கைக்கு தோதான விலையில் ரிவர்ஸ் சென்சார்கள் கிடைக்கிறது. இதன்மூலமாக முடிந்தளவு இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்.

கார் ரிவர்ஸ் எடுக்கும்போது சீட் பெல்ட்டை கழற்றிக் கொள்ளுங்கள். பின்னால் பார்த்து ரிவர்ஸ் எடுப்பதற்கு இது சவுகரியமான உணர்வை தரும்.

எப்போதுமே காரை கிளம்பும்போதும், ரிவர்ஸ் எடுப்பதற்கு முன் பின்னால் இருக்கும் வாகனங்கள் மற்றும் அந்த சாலையின் போக்குவரத்து நெரிசலை கருத்திக் கொண்டு முன் யோசனையுடன் செயல்பட வேண்டும்.

 

 

விலங்குகள், வாகனங்கள் போன்றவை திடீரென கார் ஓட்டுனரின் கண்ணுக்கு புலப்படாத பகுதியில் வந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, எப்போது ஒருமுறைக்கு இருமுறை யாரும் இல்லை என உறுதி செய்து கொண்டு ரிவர்ஸ் எடுக்கவும். காரில் உடன் பயணிப்பவரை பின்புறம் பார்க்க சொல்லி ரிவர்ஸ் எடுப்பதும் நல்லது.

குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ரிவர்ஸ் எடுக்கும்போது மிக கவனமாக செயல்பட வேண்டும். ஹசார்டு விளக்குகளை ஒளிர விட்டும், ஹாரன் அடித்தும் பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்கை செய்வது அவசியம். அவசரப்பட்டு வேகமாக ரிவர்ஸ் எடுக்க வேண்டாம்.

பரபரப்பு மிக்க சாலைகளில் காரை ரிவர்ஸ் எடுத்து திருப்புவதை தவிர்க்கவும். இருசக்கர வாகனங்கள் பின்புற அவசர கதியில் நுழைந்து செல்வதற்கு வாய்ப்புண்டு.

இந்த சம்பவத்தில் ஒரு வினாடியில் குழந்தை காருக்கு பின்னால் வந்துவிட்டது. எனவே, குழந்தையின் பெற்றோர்களும் குழந்தைகளை தெருவில் விளையாட விடும்போது கவனித்துக் கொண்டே இருப்பதும் அவசியம். இல்லையெனில், ஒரு நொடியில் இதுபோன்ற பேராபத்துக்களில் குழந்தைகள் சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

கார் ரிவர்ஸ் செல்லும்போது குழந்தை சிக்கிக் கொண்ட பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சியை காணலாம்.

Story first published: Monday, May 22, 2017, 13:53 [IST]
English summary
Tips For Reversing Your Car.
Please Wait while comments are loading...

Latest Photos