மழைக்காலத்தில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் முறைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!!

மழைக்காலத்தில் பாதுகாப்பான வாகனம் ஓட்டும் முறை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

By Arun

பொதுவாக, கார் அல்லது எந்த வகையான வாகனம் ஓட்டும் போதும், இதர பருவக் காலத்தைக் காட்டிலும் மழைக்காலத்தில் வாகனம் ஓட்டுவது பாதுகாப்பு குறைபாடானது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

மழைக்காலத்தில் பாதுகாப்பான வாகனம் ஓட்டும் முறைகள்..!!

மழைக்காலங்களிலேயே அதிகபட்ச விபத்துக்கள் அரங்கேறுகின்றன. இதற்கு சாலை வழவழப்புத்தன்மை மற்றும் இதர காரணிகள் அடிப்படையாக அமைகிறது.

மழைக்காலத்தில் பாதுகாப்பான வாகனம் ஓட்டும் முறைகள்..!!

தற்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்காலம் வெகு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் வாகனம் ஓட்டும் போது கடைப்பிடிக்க வேண்டிய எளிய பாதுகாப்பு வழிமுறைகளை இந்தத் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

சிந்தித்து செயல்படுதல்:

சிந்தித்து செயல்படுதல்:

காலசூழ்நிலைக்கு ஏற்ப ஓட்டுநர்கள் சிந்தித்து செயல்படுதல் அவசியம். எப்போதும் ஒரே மாதிரியான சூழல் இருப்பதில்லை, ஒவ்வொரு நொடிப்பொழுதும் கவனமுடன் செயல்படுதல் டிரைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பாகும்.

மழை போன்று காலநிலையில் ஏற்ற சூழல் அமையாத போது அதிக எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படுதல் அவசியம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.

ஹெட்லைட்:

ஹெட்லைட்:

மழை சமயத்தில் வெளிச்சம் குறைந்து காணப்படும் என்பதால் ஹெட்லைட்டை எரிய விடுவது சரியாண பார்வை திறனிற்கும், எதிரில் வருவோர் நம்மை அடையாளம் காணவும் உதவும்.

வைப்பர்கள்:

வைப்பர்கள்:

எப்போது மழை வரும் என்பதே தெரியாத நிலையில் வைப்பர்கள் இயக்கம் சரியாக உள்ளதா என்பதனை சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஹைட்ரோபிளேனிங்:

ஹைட்ரோபிளேனிங்:

மழை நீர் காரணமாக சாலைகளில் வழவழப்புத் தன்மை அதிகரித்துக் காணப்படும். டயர்களுக்கு சரியான அளவில் பிடி (கிரிப்) கிடைக்காமல் வழுக்கிச் செல்லும். இதுவே ஹைட்ரோபிளேனிங் என கூறப்படுகிறது.

மழைக்காலத்தில் பாதுகாப்பான வாகனம் ஓட்டும் முறைகள்..!!

ஹைட்ரோபிளேனிங் காரணமாக மழைக்காலங்களில் வாகனம் கட்டுப்பாடு இன்றி வழுக்கிச் செல்லும். அப்படி வழுக்கிச் செல்கையில் வாகனத்தை ஆக்ஸிலரேட் செய்வதை விட்டுவிட்டு வாகனத்தின் கட்டுப்பாடு மீண்டும் கிடைக்கும் வரை முடிந்த அளவு நேர்கோட்டில் டிரைவிங் செய்ய வேண்டும்.

க்ரூஸ் கண்ட்ரோல்:

க்ரூஸ் கண்ட்ரோல்:

வாகன ஓட்டிகளுக்கு பயன்தரும் இந்த க்ரூஸ் கண்ட்ரோல் தொழில்நுட்பம் மழைக்காலங்களில் நமக்கு எதிராக அமைந்துவிடுகிறது. மழைச்சமயத்தில் க்ரூஸ் கண்ட்ரோலை ஆஃப் செய்துவிடுவது நல்லது. ஏனெனில் க்ரூஸ் கண்ட்ரோல் பயன்படுத்தினால் அது ஹைட்ரோபிளேனிங்கை உருவாக்கிவிடும்.

வேகத்தை குறைக்கவும்:

வேகத்தை குறைக்கவும்:

மழையில் டிரைவிங் செய்யும் போது சிலர் உற்சாகம் அடைந்து அதிக வேகத்தில் செல்கின்றனர். மற்ற நேரங்களைக் காட்டிலும் மழையில் வாகனம் ஓட்டுவது அதிக ஆபத்தை கொண்டுவரலாம்.

எனவே மழை வரும் சமயத்தில் வாகனத்தை குறைந்த வேகத்தில் இயக்குவதே பாதுகாப்பானதாக அமையும்.

Most Read Articles
English summary
Read in Tamil about Safety ways for driving car in monsoon
Story first published: Tuesday, June 13, 2017, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X