டீசல் கார்தான் வாங்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்கள்!

By Saravana

இந்தியாவில் மட்டுமின்றி, தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் டீசல் கார்களுக்கான மவுசு வெகுவாக கூடி வருகிறது. பெட்ரோல் கார்தான் பெஸ்ட் என்று நினைத்திருந்த கார் மார்க்கெட்டுகள் தற்போது டீசல் கார்களின் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், புதிதாக கார் வாங்குவோர்க்கு பெட்ரோல் காரை தேர்வு செய்வதா அல்லது டீசல் காரை தேர்வு செய்வதா என்பதில் குழப்பம் ஏற்படுவது இயற்கை. இந்த குழப்பத்தை போக்கும் வகையில் டீசல் காரை தேர்வு செய்வதில் உள்ள அனுகூலங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கூடுதல் விலையானாலும் பரவாயில்லை, டீசல் காரையே தேர்வு செய்வது உசிதம் என்பதற்கான சில முக்கிய காரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.


காரணங்கள்

காரணங்கள்

பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்கள் வழங்கும் கூடுதல் நன்மைகளை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டீசல் கார் பவர்ஃபுல்லா?

டீசல் கார் பவர்ஃபுல்லா?

பெட்ரோல் கார்களைவிட அதிக டார்க்கை டீசல் கார்கள் வழங்குவதால், உடனடி பிக்கப்பை பெற முடிகிறது. மார்க்கெட்டில் இருக்கும் பல கார்களின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் செயல்திறனை கவனித்தால் டீசல் மாடல்கள் சிறப்பாக இருப்பதை காண முடிகிறது.

பயண தூரம் பொருட்டல்ல!

பயண தூரம் பொருட்டல்ல!

அதிக தூரம் பயன்படுத்துவோர்க்கு டீசல் காரே சிறந்தது. பெட்ரோல் மாடலைவிட டீசல் கார்கள் 25 முதல் 30 சதவீதம் கூடுதல் மைலேஜை வழங்குவதால் டீசல் கார்களை தேர்வு செய்வது நல்லது.

சுற்றுச்சூழலுக்கு சிறந்ததா?

சுற்றுச்சூழலுக்கு சிறந்ததா?

பெட்ரோல் மாடலைவிட டீசல் மாடல்கள் குறைவான கார்பன் டை ஆக்சைடை டீசல் எஞ்சின்கள்தான் வெளியிடுகின்றன என்பது முக்கியத்தும் பெறுகிறது. கடுமையான மாசுக்கட்டுப்பாடு உள்ள ஐரோப்பிய மார்க்கெட்டில் கூட மொத்த கார் விற்பனையில் டீசல் கார்களின் விற்பனை பங்களிப்பு 55 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஓவர் சப்தம் வருமா?

ஓவர் சப்தம் வருமா?

ஒருநேரத்தில் டீசல் கார்கள் அதிக சப்தம் கொண்டவையாக இருந்தன என்பதை மறுக்க இயலாது. ஆனால், தற்போது பெட்ரோல் கார்களுக்கு இணையான தொழில்நுட்பம் மற்றும் அதிர்வுகள், சப்தத்தை உள்ள புக விடாத கார் கேபின் கட்டமைப்பு போன்றவற்றுடன் டீசல் கார்கள் வருகின்றன. தற்போது பெட்ரோல், டீசல் கார்களுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை உற்று நோக்கினால் மட்டுமே கண்டறிய முடியும் என்ற அளவுக்கு டீசல் கார்களின் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கிறது.

ரீசேல் மதிப்பு இருக்குமா?

ரீசேல் மதிப்பு இருக்குமா?

மறுவிற்பனை மதிப்பில் பெட்ரோலைவிட டீசல் கார்களே அதிக மதிப்பு கொண்டவையாக இருக்கின்றன. மறுவிற்பனையில் ஒரே நேரத்தில் வாங்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை ஒப்பிடும்போது, பெட்ரோல் கார் 44 சதவீத மதிப்பையும், டீசல் கார் 50 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பையும் பெறுகின்றன.

எஞ்சின் ஆயுள்

எஞ்சின் ஆயுள்

சிறப்பான பராமரிப்பில் இருந்தால் பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் எஞ்சின்தான் நீண்ட ஆயுள் கொண்டதாக இருக்கும். பெட்ரோல் கார் எஞ்சின் ஒன்றரை லட்சம் வரை சிறப்பாக இயங்கினால், டீசல் எஞ்சின்கள் 2 முதல் இரண்டரை லட்சம் கிமீ தூரம் வரை ஆயுள் கொண்டதாக இருக்கின்றன. சில எஞ்சின்கள் இதையும் தாண்டி ஓடுவதையும் காண முடிகிறது.

கூடுதல் முதலீடு செய்யணுமே?

கூடுதல் முதலீடு செய்யணுமே?

கார் வாங்கும்போது ஆரம்பத்தில் கூடுதல் முதலீடு செய்தாலும், அதி மைலேஜ், குறைவான எரிபொருள் செலவீனம் போன்ற காரணங்களுடன், மறுவிற்பனையின்போது அதிக மதிப்பை பெறுவதால் கவலையின்றி கார் விற்பது எளிதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Diesel cars are rapidly increasing across the world. In fact, diesel cars are now outselling the petrol cars. Here are top 6 reasons why you should buy a Diesel car. 
Story first published: Thursday, November 20, 2014, 10:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X