காரில் டயர் பஞ்சராகும்போது வீலை மாற்றுவது எப்படி? - வழிகாட்டு முறைகள்

கார் பயணத்தில் அதிக டென்ஷனை கொடுக்கும் பிரச்னை டயர் பஞ்சர். ட்யூப் டயர் மற்றும் ட்யூப்லெஸ் டயர் என இரண்டுமே பஞ்சர் என்பது பொதுவான விஷயம். ட்யூப்லெஸ் டயரையும் பஞ்சருடன் தொடர்ந்து ஓட்டுவது சரியான செயல் அல்ல.

அப்படி ஓட்டும்பட்சத்தில் ரிம்மில் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த நிலையில், டயர் பஞ்சராகும் வீலை எவ்வாறு மாற்றுவது என்பதற்கான வழிமுறைகளை படங்களுடன் இங்கே வழங்கியுள்ளோம். கார் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கும் என்று கூற முடியாது.

எல்லா இடத்திலும் பஞ்சர் கடை இருப்பதற்கும் சாத்தியமில்லை. எனவே, கார் வைத்திருக்கும் அனைவருக்கும் பயன்படும் விதத்தில், இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம். வெறும் 15 நிமிடத்திற்குள் பஞ்சரான டயரை எவ்வாறு மாற்றுவது என்பதற்கான வழிமுறைகளை ஸ்லைடரில் காணலாம்.


போச்சுடா...

போச்சுடா...

அவசரமாக செல்கையில்தான் இந்த பஞ்சர் பிரச்னை டென்ஷனை தரும். பயண நிம்மதியை குலைத்துவிடும். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பஞ்சரான டயர் கொண்ட வீலை எவ்வாறு மாற்றுவது குறித்த வழிமுறைகளை காணலாம்.

 இடையூறு இல்லாமல்...

இடையூறு இல்லாமல்...

டயர் பஞ்சரானதை உணர்ந்தவுடன், காரை சாலையோரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தவும். ஹசார்டு இண்டிகேட்டர் விளக்குகளை ஆன் செய்யவும். போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் முடிந்தவரை நிறுத்த முயற்சியுங்கள்.

சமதளம் முக்கியம்...

சமதளம் முக்கியம்...

சமதளமான தரையில் காரை நிறுத்துவது உசிதம். ஜாக் வைக்கும்போது கார் நகரக்கூடும் என்பதால், காரை ஹேண்ட்பிரேக்கை போட்டு நிறுத்தி, கியரில் வைக்கவும். நியூட்டரலில் வைக்காதீர்கள்.

டூல்ஸ்

டூல்ஸ்

கார் வீலை மாற்றுவதற்கு முன்பாக, தேவையான அனைத்து டூல்களும் காரில் இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். ஜாக், வீல் ஸ்பேனர், ஜாக் லிவர் மற்றும் ஸ்பேர் வீல் ஆகியவற்றை உறுதி செய்து கொண்டு, வெளியில் எடுத்துக்கொள்ளவும். காரில் முக்கோண வடிவிலான எச்சரிக்கை சட்டத்தை கார் நிற்கும் இடத்திலிருந்து சில மீட்டர் தூரத்திற்கு முன்னால் வைக்கவும். பின்னால் வரும் வாகனங்கள் முன் எச்சரிக்கையாக கடந்து செல்வதற்கு உதவும்.

வீல் கழற்றும் முறை?

வீல் கழற்றும் முறை?

பஞ்சரான டயருள்ள வீலை கழற்றும் முன் மிதியடியை எடுத்து தரையில் போட்டுக்கொள்ளவும். இது உடைகள் அழுக்காவதை தவிர்க்கும். ஜாக்கை வைப்பதற்கு முன்பாக, வீல் கவரை கழற்றிய பின்னர், நட்டுகளை எதிர் திசையில் வீல் ஸ்பேனரை கொண்டு கழற்றுங்கள். முழுமையாக கழற்ற வேண்டாம்.

 ஜாக் பொருத்தும்போது...

ஜாக் பொருத்தும்போது...

ஜாக்கை பொருத்தும் இடம் ஒவ்வொரு காருக்கு வேறுபடும். எனவே, இந்த விபரம் தெரியாதவர்கள் காருடன் தயாரிப்பாளர் வழங்கும் உரிமையாளர் கையேட்டில் விபரத்தை படித்து தெரிந்துகொள்ளலாம். ஜாக் பொருத்துவதற்கான இடம் சில கார்களின் தெளிவாக குறிக்கப்பட்டிருக்கும்.

மெல்ல...

மெல்ல...

ஜாக் வைக்கும் இடத்தை சரியாக பார்த்துக் கொண்டு, ஜாக்கை பொருத்திய பின்னர் ஜாக் லிவர் மூலம் மெதுவாக ஜாக்கை உயர்த்தவும். சில சமயம் ஜாக் நழுவும் அபாயமும் உள்ளது. பஞ்சரான டயருக்கும் தரைக்கும் இடையில் 2 இஞ்ச் இடைவெளி இருக்கும் வகையில், ஜாக்கை உயர்த்துங்கள். முழுமையாக காற்று நிரம்பியிருக்கும் ஸ்பேர் வீலை பொருத்தும்போது இந்த இடைவெளி அவசியமானதாக இருக்கும்.

பத்திரம்

பத்திரம்

ஜாக்கை உயர்த்தியபின் நட்டுகளை விரல்களால் கழற்றி, பத்திரமாக ஒரு இடத்தில் வைக்கவும். சில நேரங்களில் இவை உருண்டோடி காணாமல் போகும் பிரச்னையும் பலர் சந்தித்திருக்ககூடும்.

ஸ்பேர் வீல்

ஸ்பேர் வீல்

பஞ்சரான வீலுக்கு பதிலாக ஸ்பேர் வீலை கவனமாக எடுத்து பொருத்தவும். நட்டுகளை மீண்டும் போட்டு விரல்களால் இறுக்கவேண்டும். நட்டுகளின் எந்த பகுதியை உள்ளே பொருத்த வேண்டும் என்பதை கழற்றும்போதே பார்த்து வைத்துக்கொள்வதும் அவசியம். பின்னர் வீல் ஸ்பேனர் கொண்டு இறுக்கவும். அனைத்து நட்டுகளும் சரியாக இறுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உறுதி செய்யவும்

உறுதி செய்யவும்

வீல் நன்றாக பொருந்திய பின், நட்டுகளை இறுக்கமாகிவிட்டதை உறுதி செய்த பின்னர், ஜாக்கை மெதுவாக இறக்கவும்.

கவனம்

கவனம்

முக்கோண எச்சரிக்கை சட்டம், ஸ்பேர் வீல் மற்றும் ஜாக், வீல் ஸ்பேனர் ஆகியவற்றை சரிபார்த்து டிக்கியில் வைத்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில் அவசரத்தில் ஏதாவது ஒன்றை மறந்துவிடும் வாய்ப்புள்ளது.

 நேரம், பணம் மிச்சம்

நேரம், பணம் மிச்சம்

பஞ்சர் கடையை தேடி அலைவதால் ஏற்படும் நேர விரயம், பண விரயம் போன்றவற்றை இந்த 10 வழிமுறைகள் மூலம் நீங்கள் தவிர்க்கலாம். இன்றே உங்களது காரில் ஸ்பேர் வீல், டூல்ஸ் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும். உரிமையாளர் கையேட்டில் ஜாக் பொருத்துமிடத்தை தெரிந்துகொள்ளுங்கள். அப்படியில்லையெனில், சர்வீஸ் செல்லும்போது சூப்பர் வைசரிடமோ அல்லது அருகிலுள்ள மெக்கானிக்கிடமோ இந்த ஜாக் பொருத்துவதை கேட்டு வைப்பது நலம். பஞ்சரானால் இனி ஹேப்பி அண்ணாச்சி!!

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

சிலர் காரில் அகலமான அல்லது வேறு அளவுடைய வீல்களை பொருத்தும்போது, தயாரிப்பாளர் கொடுக்கும் வீல் ஸ்பேனர் பொருந்தாது. எனவே, வெளிமார்க்கெட்டிலிருந்து வீல்களை வாங்கிப்பொருத்தும்போது, அதற்கு பொருத்தமான டூல்களையும் வாங்கிக்கொள்வது நினைவில் வைக்க வேண்டிய விஷயம்.

Most Read Articles
English summary
In this article, we show you step-by-step how a punctured tyre can be changed, in just a matter of 15 minutes and how easy changing a tyre really is.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X