வாஸ்து முறைப்படி கார் ஷெட் - கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!

Written By:

வாஸ்து முறைப்படி அமைக்கப்படும் வீடுகள் செல்வ செழிப்பும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால், இப்போது பல கோடி முதலீட்டில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் கூட இப்போது வாஸ்து சாஸ்திர முறையை பின்பற்றி அமைப்பதும், அதனை விற்பனையின்போது முக்கிய சிறப்பம்சமாக தெரிவிப்பதும் வழக்கமாவிட்டது.

இந்த நிலையில், கார் ஷெட் அமைப்பதிலும் வாஸ்து முறையை பின்பற்றும் வழக்கம் காணப்படுகிறது. வாஸ்து முறையின்படி கார் நிறுத்துவதற்கான ஷெட் அமைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

வாஸ்து முறைப்படி அமைக்கப்படும் வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் நல்ல ஆரோக்கியத்தை பெறுவதாக நம்பப்படுவது போன்றே, வாஸ்து முறைப்படி அமைத்தால் காரின் ஆயுளும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. 

 

பொதுவாக வீட்டின் நுழைவாயிலை பொறுத்து தென்கிழக்கு அல்லது வடமேற்கு பகுதியில் கார் பார்க்கிங் அமைக்கப்படுவது நல்லதாம். மேலும், வடமேற்கு திசையில் காரை நிறுத்துவது விசேஷமாக சொல்லப்படுகிறது. 

 

அதேநேரத்தில், கார் நிறுத்துமிடத்தை அமைப்பதில் வாஸ்து சாஸ்திரப்படி சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சிலர் பல கார்களை வைத்திருப்பர். அதில், விலை உயர்ந்த கார்களை அடிக்கடி பயன்படுத்தமாட்டார்கள். அவ்வாறான கார்களை தென்மேற்கு பகுதியில் ஷெட் அமைத்து வைக்குமாறு வாஸ்து சாஸ்திர அறிஞர்கள் கூறுகின்றனர்.

கார் நிறுத்துமிடம் வடக்கு அல்லது கிழக்கு பகுதியை நோக்கி சரிவாக அமைத்தல் நல்லது. மேலும், கார் ஷெட் அமைக்கும்போது, அது வீட்டையோ அல்லது காம்பவுன்ட் சுவரையோ தொட்டுக்கொண்டு இருக்காமல் தனியாக அமைப்பதே சிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கார் நிறுத்திய பிறகு சுற்றிலும் 2 முதல் 3 அடி அளவுக்கு இடவசதி அல்லது குறைந்தது 16 இன்ச் இடவசதி இருப்பது நல்லது. காரை சுற்றி பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும். எக்காரணத்தை கொண்டும் சரியான வடகிழக்கு பகுதியில் காரை நிறுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி காரை நிறுத்தி வைப்பது சாலச் சிறந்ததாக சொல்லப்படுகிறது. தெற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களால், அந்த திசையில் நிறுத்தி வைக்கும்போது காரில் தீப்பற்றும் வாய்ப்பு அல்லது எலக்ட்ரிக்கல் பிரச்னை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

கார் ஷெட்டின் நுழைவுப் பகுதி வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டுமாம். வீட்டின் காம்பவுண்ட் சுவரில் இருக்கும் கேட்டுகளை விட கார் ஷெட்டின் கேட்டுகள் உயரம் குறைவாக அமைக்க வேண்டுமாம். அதேபோன்று, முழுமையாக திறந்து மூடும் வகையில் அமைக்கப்படுவதும் அவசியம்.

வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட வெளிர் வண்ணங்களை கார் ஷெட்டில் பூசுவதும் நல்லது. கார் ஷெட்டில் தேவையற்ற பொருட்களையும், தீப்பற்றும் பொருட்களையும் வைக்க வேண்டாம்.

கார் ஷெட் அமைக்க இடவசதி இல்லாதவர்கள், போர்ட்டிகோவிலேயே நிறுத்தினாலும், தனியாக பில்லர் போட்டு தனிக்கூரையுடன் அமைப்பது அவசியம் என்று வாஸ்து முறையில் சொல்லப்படுகிறது. வீட்டுடன் ஒட்டியிருக்காத வகையில் அமைப்பதே சிறந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

போர்ட்டிகோ அமைக்கும்போது வடக்கு, கிழக்கு திசையில் கார் நிறுத்துமாறு அமைப்பது சிறந்தது. தொழிலதிபர்கள் வடக்கு திசை நோக்கியும், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் கிழக்கு திசை நோக்கியும் காரை நிறுத்துவது நல்லதாம்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கார் ஷெட் அல்லது போர்ட்டிகோ அமைப்பதற்கான வாஸ்து முறைகள் பொதுவான விதிகள்தான். வீடு அமைந்திருக்கும் திசை, கார் உரிமையாளரின் ஜாதகம் போன்றவற்றை வைத்து கார் பார்க்கிங்கை சில விலக்குகளுடன் அமைக்க வாஸ்து நிபுணர்களை நாடுவதே சிறந்தது.

எப்படியிருந்தாலும் ஈசான்யம் எனப்படும் வடகிழக்கு பகுதியில் கார் பார்க்கிங்கை அமைக்க வேண்டாம் என்று பொதுவான வாஸ்து விதியாக சொல்லப்படுகிறது.அதாவது, நீர் மூலதார பகுதியான அந்த இடத்தில் கார் பார்க்கிங்கை தவிர்ப்பது அவசியம் என்பது அறிவியல் ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள கூடிய உண்மையாகவே பார்க்கலாம்.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Vastu for Car Parking - Drivespark Tamil Tips!
Please Wait while comments are loading...

Latest Photos