ஆண்டுக்கு 50,000 சொகுசு கார்களை விற்க ஆடி கணக்கு

வியாழக்கிழமை, பிப்ரவரி 9, 2012, 17:48 [IST]
Audi S6
வரும் 2020ம் ஆண்டில் ஆண்டுக்கு 50,000 கார்களை விற்பனை செய்ய கணக்கு போட்டுள்ள ஆடி நிறுவனம், அந்த இலக்கை முணுமுணுத்துக்கொண்டே தனது விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்திய பிரிமியம் ரக கார் மார்க்கெட்டில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனங்கள்தான் கோலோய்ச்சி வருகின்றன. பிஎம்டபிள்யூ, பென்ஸ் மற்றும் ஆடி ஆகிய மூன்று நிறுவனங்களும் ஜெர்மனியை சேர்ந்தவையே.

இந்திய சொகுசு மார்க்கெட்டில் இந்த மூன்று நிறுவனங்களுக்கு இடையில்தான் போட்டா போட்டி, பங்காளி யுத்தம் எல்லாம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது பிஎம்டபிள்யூ, பென்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு விற்பனையில் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆடி நிறுவனம் இந்தியாவில் பெருங்கனவு திட்டங்கள் மற்றும் இலக்குகளுடன் செயல்பட்டு வருகிறது.

வரும் 2015ம் ஆண்டில் முதல் இடத்தை பிடிக்க திட்டமிட்டுள்ள அந்த நிறுவனம் வரும் 2020ம் ஆண்டில் ஆண்டுக்கு 50,000 கார்களை விற்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ள 5,511 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும்போது இந்த இலக்கு 10 மடங்கு கூடுதலாகும்.

இருப்பினும், தங்களால் அந்த இலக்கை எட்ட முடியும் என்று ஆடி திடமாக நம்புகிறது. மேலும், ஆடி பிராண்டை இந்தியாவின் நம்பர் சொகுசு கார் பிராண்டாக மாற்றுவதே தங்களது லட்சியம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது இலக்கை எட்டுவதற்காக புனே அருகே சகனில் புதிய ஆலையை கட்டவும் ஆடியின் தாய் நிறுவனமான வோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளது. தற்போது அவுரங்காபாத்திலுள்ள தனது சகோதர நிறுவனமான ஸ்கோடாவின் ஆலையிலேயே கார்களை ஆடி அசெம்பிளிங் செய்து வருகிறது.

ஆடி கணக்கு ஆடி காற்றில் பறக்குமா அல்லது பலிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
English summary
The German luxury car maker Audi has stated it would selling at least 50,000 cars by 2020. Audi shares the assembly line with Skoda in Aurangabad. However, parent company Volkswagen has recently commissioned an exclusive manufacturing facility for Audi at Chakan near Pune.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !