ரூ.15,999 மாதத் தவணை கட்டினால் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 13:49 [IST]
மாதம் ரூ.15,999 கட்டினால் போதும், எக்ஸ்1 எஸ்யூவியை வாங்கும் அரிய வாய்ப்பை பிஎம்டபிள்யூ வழங்குகிறது.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் முதலிடம் வகிக்கிறது. இந்த நிலையில், பென்ஸ், ஆடி உள்ளிட்ட பங்காளி நிறுவனங்களால் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு கடும் நெருக்கடி இருக்கிறது.

இதையடுத்து, வாடிக்கையாளர்களை வளைக்க பல்வேறு யுக்திகளை பிஎம்டபிள்யூ கையாண்டு வருகிறது. இந்த நிலையில், ரூ.15,999 மாதத் தவணை கட்டினால் போதும், தனது எக்ஸ்1 எஸ்யூவியை ஓட்டிச்செல்லலாம் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

ரூ.22 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த எஸ்யூவிக்கு மிகக்குறைந்த மாதத் தவணையுடன் கூடிய கடன் திட்டத்தை பிஎம்டபிள்யூ அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கடன் திட்டத்தின்படி, எக்ஸ்1 எஸ்யூவிக்கு வாங்கும் வாடிக்கையாளர்கள் வரும் மார்ச் 31ந் தேதி வரை இந்த சலுகை வழங்கப்படும் என்று பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

(பிஎம்டபிள்யூ கேலரிக்கு செல்ல இங்கே கிளிக் செய்க)
English summary
BMW is offering its premium SUV, the X1 with an attractive finance scheme. You can get yourself a BMW X1 for a low EMI of just Rs.15,999. This new EMI is available from BMW Financial services and is valid til 31st March. The BMW X1 is the German car maker's entry level premium SUV and has a starting price of Rs.22 lakhs.
User Comments
Kumar 22 Feb 2012 06:40 pm
ஆனால் 1700000 முன் பணமாக செலுத்த வேண்டும் - குமார்
SAM 22 Feb 2012 04:07 pm
காரை விட பெட்ரோல் விலை அதிகமா போக போகுது இந்திய வுல ...
Vijayakanth 22 Feb 2012 07:54 pm
Seriyaa Sonninga SAM
manoj aaron 23 Feb 2012 03:46 pm
எது டீசல் கார் தான் நான்பா ......
[ கருத்தை எழுதுங்கள் ]