20,000 சதுர அடியில் மிகப்பெரிய கார் ஷோரூமை திறந்த பென்ஸ்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2012, 12:28 [IST]
Benz Big Car Show room
20,000 சதுர அடி பரப்பளவில் தனது மிகப்பெரிய கார் ஷோரூமை இந்தூரில் இன்று திறந்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

சொகுசு கார் விற்பனையில் இரண்டாம் இடம் வகிக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும், சிறப்பான சேவையை பெறும் வகையி்லான தனது புதிய கொள்கையின்படி, அனைத்து வசதிகளும் கொண்ட கார் ஷோரூம்களை திறக்க உள்ளது.

மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் இன்று இந்தியாவிலேயே தனது மிகப்பெரிய கார் ஷோரூமை மெர்சிடிஸ் பென்ஸ் திறந்துள்ளது. 20,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கார் ஷோரூமில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களையும் பார்வைக்கு நிறுத்த முடியும்.

ரூ.5 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கார் ஷோரூமை பென்ச்மார்க் கார் நிறுவனம் கட்டியுள்ளது. இந்த புதிய கார் ஷோரூமில் வாடிக்கையாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது.

காபி கஃபேவுடன் கூடிய கஸ்டமர் லாஞ்ச், ஆக்சஸெரீஸ் அரேனா, ஆடியோ விஷுவலுடன் கூடிய வீடியோ விளக்கங்கள் என ஒரு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு கார்களை பற்றிய விளக்கங்கள் மற்றும் சிறப்பான சேவை தரும் வகையில், 20 பயிற்சி பெற்ற ஊழியர்களும் இருக்கின்றனர்.

மேலும், இந்த ஷோரூமுடன் இணைந்த கார் சர்வீஸ் சென்டரும் இருக்கிறது. இதில் ஒரு நாளைக்கு 10 கார்களை சர்வீஸ் செய்ய முடியும்.

English summary
Mercedes-Benz has opened its largest showroom in India in Indore. This brand new facility was inaugurated on the 20th of February and is also Madhya Pradesh's largest luxury car showroom. The showroom is spread across 20,000 square feet and is a result of an investment of Rs.5 crores. Visitors can get to see the entire Mercedes-Benz range of cars at the showroom.
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !