ஏப்ரலில் புதிய சஃபாரி ஸ்ட்ரோமை களமிறக்கும் டாடா மோட்டார்ஸ்

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2012, 14:46 [IST]
Tata Safari Storm
வரும் ஏப்ரலில் புதிய சஃபாரி ஸ்ட்ரோம் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிரிமியம் அம்சங்களுடன் வரும் இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

நம் நாட்டு எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா சஃபாரி எஸ்யூவிக்கு முக்கிய இடம் உண்டு. அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் விருப்பமான காராக டாடா சஃபாரி திகழ்கிறது.

இந்த நிலையில், மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் விதமாக சஃபாரியை பிரிமியம் ரேஞ்சுக்கு மாற்றியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

பிரிமியம் எஸ்யூவி தயாரிப்பில் உலக புகழ்பெற்ற பிட்டனை சேர்ந்த லேண்ட் ரோவர் நிறுவனத்தின்(டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனம்) வடிவமைப்பு நிபுணர்கள் மற்றும் டாடா மோட்டார்ஸ் வடிவமைப்பு வல்லுனர்கள் இணைந்து இந்த புதிய சஃபாரியை மேம்படுத்தியுள்ளனர்.

விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு கடும் போட்டியை கொடுக்கும் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் விலையில் புதிய சஃபாரியை நிலை நிறுத்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், திருத்தியமைக்கப்பட்ட முன்பக்க கிரில்கள், குரோம் பூச்சுக்கொண்ட இரட்டை சைலென்ஸர் குழாய்கள், ஏரோடைனமிக் ஸ்பாய்லர்கள் என பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அம்சங்கள் ஏராளம்.

உட்புறமும் பார்த்து பார்த்து இழைத்ததுடன், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, டியூவல் ட்ரிப் மீட்டர், எலக்ட்ரானிக் ஸ்விட்சுகள், மல்டிமீடியா ப்ளேயர் என ஏராளமான தொழில்நுட்ப வசதிகளுக்கும் கியாரண்டி.

புதிய சஃபாரி ஸ்ட்ரோமில் 2.2 லிட்டர் டிகோர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 140 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். புதிய சஃபாரி ஸ்ட்ரோம் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

புதிய சஃபாரி ஸ்ட்ரோம் ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
English summary
Tata motors planning to launch of its much awaited new Safari storm suv in April this year. The news Safari will be powered by 2.2 liter dicor engine. The new safari will fall of Rs.12 lakhs to Rs.16 lakhs price range.
User Comments
Kannan 21 Feb 2012 03:51 pm
டாட்டா நிறுவனம் ஒரு சிறந்த தொழில் நுட்பத்தை மக்களுக்கு தர போகிறது
[ கருத்தை எழுதுங்கள் ]