நானோவுக்கு புதிதாக 230 பிரத்யேக ஷோரூம்களை திறக்கும் டாடா

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2012, 14:02 [IST]
இன்னும் ஓர் ஆண்டுக்குள் நானோ காருக்கு புதிதாக 230 பிரத்யேக ஷோரூம்களை திறக்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

நானோ விற்பனை அதிகரிக்க கற்ற வித்தைகளையும் காட்டி வருகிறது டாடா. சலுகைகள், எளிய கடன் திட்டங்கள் என நானோவுக்கு வாரி வழங்கி வரும் டாடா விற்பனையை அதிகரிக்க அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இன்னும் 12 மாதங்களில் நாடு முழுவதும் நானோவுக்கு 230 பிரத்யேக ஷோரூம்களை திறக்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருங்கிய சேவையை வழங்க முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் பி.எம்.தலாங் கூறுகையில்,"தற்போது நானோவுக்காக 120 பிரத்யேக ஷோரூம்கள் உள்ளன.

இதை எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இன்னும் 12 மாதங்களி்ல் புதிதாக 230 பிரத்யேக ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
English summary
The Tata Nano is by far the most prestigious car project for Tata Motors and its soon to retire chairman Ratan Tata. The budget small car was envisaged a an alternative to Indian two wheeler users but it has not been able to perform as well as expected. Tata Motors has tried several marketing methods to boost its sales and here comes the latest update. Now company is planning to have 230 new dedicated sales outlets in the current year for their people's car Tata Nano.
User Comments
நானோபான்ஸ் 25 Feb 2012 12:22 pm
நம்ம ஆசிய குழந்தைக்கு வாழ்த்துக்கள்
[ கருத்தை எழுதுங்கள் ]