இந்தியாவின் மிக நீளமான சொகுசு பஸ்: பெங்களூர்-மைசூர் இடையே அறிமுகம்

இந்தியாவின் மிக நீளமான சொகுசு பஸ் பெங்களூர்- மைசூர் இடையே அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய பஸ் சேவையை கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.அசோகா நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.

Volvo Multi Axle Bus

14.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த மல்டி ஆக்சில் வால்வோ பஸ்சில் கழிவறை மற்றும் கேண்டீன் வசதிகள் இருக்கிறது. பயணிகளுக்கு மிகச் சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வகையிலான வசதிகளை இந்த புதிய பஸ் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து அமைச்சர் அசோகா கூறுகையில்," பயணிகளுக்கு நிறைவான சேவை வழங்குவதில் முன்னிலை வகிக்கிறோம். பெங்களூர்-மைசூர் இடையில் இந்த புதிய பஸ்சை பரீட்சார்த்த முறையில் அறிமுகம் செய்துள்ளோம்.

வாடிக்கையாளர்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து பெங்களூர்-சென்னை இடையில் இந்த புதிய பஸ் சேவையை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

வால்வோ நிறுவன அதிகாரி ஆகாஷ் பாஸி கூறுகையில்,"புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த மல்டி ஆக்சி்ல் பஸ் சர்வதேச அளவில் முதலில் இந்தியாவில்தான் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்பு, டிரைவரின் வசதிகளை கருத்தில் கொண்டு பஸ்களை வடிவமைத்து வருகிறோம்," என்றார்.

Most Read Articles
English summary
KSRTC has introduced the country's longest bus, at 14.5 metres and including a pantry and toilet facilities, to ply the 130 km between the state capital and the city of palaces, Mysore.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X