வியப்பை தரும் ஆட்டோமொபைல் சுவாரஸ்யங்கள்!

By Saravana

ஆட்டோமொபைல் உலகின் சில வியப்புக்குரிய நிகழ்வுகளையும், அதில் முக்கிய பங்கு வகிப்பதோடு, தனிநபர் பயன்பாட்டிலும் இன்றியமையாத கார்கள் பற்றி அறிந்து கொள்வதிலும் அனைவருக்கும் அலாதி ஆர்வம் இருப்பதுண்டு.

கார்களில் இருக்கும் வசதிகள் மற்றும் கார்கள் தொழில்நுட்பம் கடந்து பாதையில் ஏற்பட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமே. ஆட்டோமொபைல் உலகில் நிகழ்ந்த சுவாரஸ்ய தகவல்களையும் இந்த தொகுப்பில் காணலாம்.


சுவாரஸ்யங்கள்

சுவாரஸ்யங்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சுவாரஸ்யங்களை காணலாம்.

 கார்கள் எண்ணிக்கை

கார்கள் எண்ணிக்கை

கடந்த 2010ம் ஆண்டு உலகில் கார்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை கடந்தது.

 கார் உற்பத்தி

கார் உற்பத்தி

உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 1.65 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கார் பாகங்கள்

கார் பாகங்கள்

ஒரு காரில் சிறிய, நடுத்தர, பெரிய பாகங்கள் என சேர்த்து 30,000 பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எத்தனால் எரிபொருள்

எத்தனால் எரிபொருள்

பிரேசிலில் விற்னையாகும் 92 சதவீத புதிய கார்கள் கருப்புச் சாறிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை எரிபொருளாக கொண்டு இயங்குகின்றன.

பெட்ரோல் ப்ரீ

பெட்ரோல் ப்ரீ

எண்ணெய் வளம் மிக்க துர்க்மெனிஸ்தான் நாட்டில் ஒவ்வொரு கார் ஓட்டுனருக்கும் மாதத்திற்கு 120 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது.

 கார்தான் ஜாஸ்தி

கார்தான் ஜாஸ்தி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் மக்கள் எண்ணிக்கையைவிட கார்களின் எண்ணிக்கை அதிகம்.

 க்ரூஸ் கன்ட்ரோல்

க்ரூஸ் கன்ட்ரோல்

நெடுஞ்சாலை பயணத்தில் மிக முக்கிய வசதியாக பயன்படும் க்ரூஸ் கன்ட்ரோல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் அமெரிக்காவை சேர்ந்த ரால்ஃப் டீட்டர். இவர் பார்வையற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய கார் வாடை

புதிய கார் வாடை

புதிய காருக்குள் வரும் ஒரு வித வாடை காரின் பாகங்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் 50 விதமான வேதிப்பொருட்களால் வெளிவருகிறது. இவை உடலுக்கு தீங்கு இழைக்காது என்பதுதான் ஆறுதலான தகவல்.

மேட் இன் சைனா

மேட் இன் சைனா

உலகில் உற்பத்தியாகும் 4 கார்களில் ஒன்று சீனாவில் உற்பத்தியாகிறது.

முதல் விதிமீறல்

முதல் விதிமீறல்

உலகின் முதல் மோட்டார் வாகனத்துக்கான குற்றமாக இங்கிலாந்தில் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் மோட்டார் வாகனத்தை ஓட்டி வந்ததற்காக ஜான் ஹென்றி நைட் என்பவர் மீது பதிவு செய்யப்பட்டது. செல்வச் செழிப்பு மிக்க ஜான் ஹென்றிதான் உலகின் முதல் பெட்ரோலில் இயங்கும் வாகனத்துக்கு வித்திட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Did you know there are 1 billion cars on earth or the inventor of cruise control was blind? Here is a list of ten cool car facts you must know.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X