கூகுள் தானியங்கி கார் பற்றி 10 சுவாரஸ்ய விஷயங்கள்!

அடுத்த 10 ஆண்டுகளில் ஓட்டுனர் துணையில்லாமல் இயங்கும் கார்கள் சாதாரண கார்களின் விலையிலேயே கிடைக்கும் சாத்தியம் இருப்பதாக ஆஸ்திரேலிய கர்டின் பல்கலைகழக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

டிரைவரில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களுக்காக மலிவு விலை தொழில்நுட்பத்தையும் அவர்கள் வடிவமைத்து வருகின்றனர். ஆனால், இந்த மலிவு விலை தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அறிமுகம் செய்வதற்கு 10 ஆண்டுகள் பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.

இந்தநிலையில், கூகுள் நிறுவனம் தானியங்கி காரின் புரோட்டோடைப் மாடலையே அறிமுகம் செய்துவிட்டது. தற்போது தீவிர சோதனைகளில் இருக்கும் இந்த காருக்கு அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா, நெவடா ஆகிய மாகாணங்கள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. எனவே, இது சாதாரண சாலைகளில் சில ஆண்டுகளில் ஓடுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.


10 சுவாரஸ்யங்கள்

10 சுவாரஸ்யங்கள்

கூகுள் காரில் இருக்கும் வியக்க வைக்கும் 10 சுவாரஸ்யங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

1. எலக்ட்ரிக் கார்

1. எலக்ட்ரிக் கார்

இது ஓர் எலக்ட்ரிக் கார் என்பதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காது. அளவில் மிகச்சிறியது என்பதால், அதிக தூரம் செல்லக்கூடிய காராக இருக்கும்.

 2. கட்டளையிட்டால் போதும்

2. கட்டளையிட்டால் போதும்

ஸ்மார்ட்போன் மூலம் கட்டளையிட்டால், செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சேர்த்துவிடும். டிரைவரையும், குடும்பத்தினர் உதவியையும் தேடிக் கொண்டிருக்காமல் குறித்த நேரத்திற்கு செல்ல நினைக்கும் பெண்களுக்கு சிறப்பான சாய்ஸ்.

3. இதெல்லாம் இல்லை

3. இதெல்லாம் இல்லை

இந்த காரல் ஆக்சிலேட்டர், பிரேக் பெடல்கள் இருக்காது. அதேபோன்று ஸ்டீயரிங் வீலும் இருக்காது. ஸ்டார்ட்- ஸ்டாப் பட்டன் மூலம் எஞ்சினை ஆன் ஆஃப் செய்து செல்ல முடியும். மேலும், இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் நேவிகேஷன் சாதனம் வழியாகவும் செல்லுமிடத்தை தேர்வு செய்யலாம்.

4. முழு ரேஞ்ச்

4. முழு ரேஞ்ச்

ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனால், கார் வழியில் நின்றுவிடுமோ என்ற அச்சப்பட வேண்டியதில்லை.

5. ஜிபிஎஸ்

5. ஜிபிஎஸ்

இந்த காரில் சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம் உள்ளது. இவை ரேடார், கேமரா மற்றும் சென்சார்களுடன் இணைந்து செயல்படுவதால், சாலையின் ஓரத்தில் நிறுத்தி உங்களை பாதுகாப்பாக இறக்கிவிடும். மேலும், பாதசாரிகள், அருகில் வரும் வாகனங்கள், சிக்னல்கள் மற்றும் சாலையில் இருக்கும் எச்சரிக்கை பலகைகள் போன்றவை கண்டுணர்ந்து அதற்கு ஏற்றவாறு செல்லும். 600 அடி தூரத்திற்கு, அதாவது இரண்டு கால்பந்து மைதானங்கள் சுற்றளவுக்கு இதனால் கண்டுணர முடியும்.

 6.நினைவூட்டும் வசதி

6.நினைவூட்டும் வசதி

காரில் இறங்கும்போது எடுத்து வந்த பொருட்கள் குறித்து நினைவூட்டும் வசதி உள்ளது. இதனால், பொருட்களை காரில் மறந்துவிட்டு திரும்ப ஓடிவரும் நிலை இருக்காது.

7. மீசையில மண் ஒட்டாது

7. மீசையில மண் ஒட்டாது

தானியங்கி கார்களின் பாதுகாப்பு இன்னமும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஆனால், இந்த கார் மோதினாலும், விபத்தில் சிக்கினாலும் அதிக பாதிப்பு இருக்காது என்று கூகுள் அடித்துக் கூறுகிறது.

 8. அதிகபட்ச வேகம்

8. அதிகபட்ச வேகம்

இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 40 கிமீ வேகத்தில் மட்டமே செல்லும். மேலும், இதனால் விபத்துக்களை தவிர்த்து பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

9. கூட்டணி

9. கூட்டணி

கூகுள் நிறுவனம் தானியங்கி காரின் புரோட்டோடைப் மாடலை வெளியிட்டாலும், இதனை சொந்தமாக தயாரிக்கும் திட்டமில்லை. டெட்ராய்ட் நகரிலுள்ள எலக்ட்ரிக் கார் நிறுவனம் ஒன்றின் ஒத்துழைப்புடன் இந்த காரை தயாரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.

 10. மொத்த உற்பத்தி

10. மொத்த உற்பத்தி

முதற்கட்டமாக 100 கார்களை உற்பத்தி செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளது. வரவேற்பை பொறுத்து அடுத்த கட்ட தயாரிப்பு குறித்து அறிவிக்கப்படும்.

Most Read Articles
English summary
Here are some interesting points about the Google self-driving car. Have a look.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X