கார், பைக்கில் செல்ல வேண்டிய இந்தியாவின் டாப்-10 சாலைகள்!

மன அழுத்தத்தால் இறுகி கிடக்கும் இன்றைய தலைமுறை பயணங்களால் தங்களது இறுக்கத்தை தொலைத்துவிட முயன்று வருகிறது. அதுபோன்று, மன இறுக்கத்தை போக்கி, இதயத்திற்கு இதம் தரும் சில சாலைகளை இங்கே தொகுத்துள்ளோம்.

நாடு முழுவதும் வசிக்கும் வாசகர்களுக்கு அருகாமையில் இருக்கும் பகுதிகளை தேர்ந்தெடுத்து செல்லும் வகையில், இந்த செய்தித்தொகுப்பு ஸ்லைடரில் காணலாம். வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய சாலைகளை ஸ்லைடரில் காணலாம்.


விபரம்

விபரம்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் டாப்- 10 சாலைகளின் விபரத்தை காணலாம்.

Picture Credit: Kamaljith K V via Flickr

 1. மணாலி - லே

1. மணாலி - லே

கார், பைக்கில் பயணிக்க விரும்புவர்களுக்கான சாய்ஸில் முதன்மையான சாலை. சாகசம், இயற்கை ஆர்வலர்களுக்கும் ரசித்து பயணிக்க வேண்டிய சாலை இது. பயண ஏற்பாட்டாளர்கள் வழியாகவும் செல்லலாம். திட்டமிட்டு இந்த சாலையில் ஓர் பயணம் மேற்கொண்டால் ஆயுள் முழுக்க அதன் அழுத்தங்களை அசை போடலாம்.Picture Credit: Biswarup Ganguly via Wiki Commons

2. பந்திப்பூர்

2. பந்திப்பூர்

தென்னிந்திய மக்களின் கனவு சாலையாக குறிப்பிடலாம். கேரளாவின் கோழிக்கோடு நகரிலிருந்து மைசூர் வழியாக கர்நாடகாவின் கொள்ளேகால் பகுதியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 212 பயண விரும்பிகளின் தாகத்தை முழுமையாக தணித்து வெளியில் அனுப்பும்.

3. சண்டிகர்- மணாலி

3. சண்டிகர்- மணாலி

கேமராவுக்கு தீணி போடும் இயற்கை எழில் கொஞ்சும் சாலை இது. வழியில் இருக்கும் தாபாக்களில் ஆலூ பரோட்டாவின் சுவையையும், இயற்கையை எழிலையும் ஒருங்கே சுவைத்து புதிய உலகுக்கு சஞ்சரித்து திரும்பலாம்.

Picture Credit: Biswarup Ganguly via Wiki Commons

4. லே- ஸ்ரீநகர்

4. லே- ஸ்ரீநகர்

இந்தியாவின் பயணிக்க விரும்பும் டாப்-5 சாலைகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் இந்த சாலையில் நெடுதுயர்ந்த மலைமுகடுகளுக்கு நடுவில் செல்லும் இந்த சாலை புதிய அனுபவத்தை வழங்கும்.

Picture Credit: sushmita balasubramani

5. மஹாபலேஸ்வர்

5. மஹாபலேஸ்வர்

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மஹாபலேஸ்வர் நகரம் மஹாராஷ்டிராவின் மிக முக்கிய கோடைவாசஸ்தலமாக விளங்குகிறது. பசுமைமாறா காடுகள் வழியாக செல்லும் மஹாபலேஸ்வருக்கான சாலையும் பயண பிரியர்களின் நேசிப்புக்கு இலக்கணமாகி உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மும்பையின் கோடை தலைநகரமாக இது விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Picture Credit: ganuullu via Flickr

 6. மும்பை- புனே

6. மும்பை- புனே

மும்பை- புனே இடையிலான எக்ஸ்பிரஸ் வே எனப்படும் விரைவு சாலை இயற்கையுடன் கைகோர்த்து செல்கிறது. சச்சின் டெண்டுல்கர் முதல் சாமானியர் வரை ஒவ்வொருவரும் பயணிக்க விரும்பும் சாலைகளில் மிக முக்கியமானது.

Picture Credit: Nikhil.kawale

7. ஓல்டு சில்க் ரூட்

7. ஓல்டு சில்க் ரூட்

திபெத்திலிருந்து ஜீப் லா என்ற கணவாய் வழியாக இந்தியாவை இணைக்கும் சில்க் வணிக வழித்தடமாக இருந்தது. மலை இறக்கத்தில் மெல்ல பயந்து இறங்கும் சாலைகள் த்ரில்லை வழங்கும். அடுத்த முறை செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் சாலை இது.

Picture Credit: hceebee via Flickr

8.ரோத்தங் கணவாய்

8.ரோத்தங் கணவாய்

மணாலியிலிருந்து கீலாங்/லே செல்லும் நெடுஞ்சாலையில் இருக்கும் ரோத்தங் கணவாய் உங்களை பிரம்மில் ஆழ்த்தும். பனிக்கட்டிகளை போர்த்தி நிற்கும் மலைகளின் ஊடாக நெஞ்சை உறைய வைக்கும் குளிரில் செல்லும் இந்த பயணம் ஒரு ஜிலீர் அனுபவத்தை கொடுக்கும்.

Picture Credit: Achiwiki356 via Wiki Commons

9. கல்யாண்- நிர்மல்

9. கல்யாண்- நிர்மல்

தெலங்கானாவையும், மஹாராஷ்டிராவையும் இணைக்கும் கல்யாண்- நிர்மல் நெடுஞ்சாலையும் பல அபாயகரமான சாலையாக குறிப்பிடலாம். சாகச விரும்பிகளுக்கு ஏற்றச் சாலை. சூரிய அஸ்தமனத்திற்கு பின் இந்த சாலையில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

Picture Credit: Anand Balasubramaniam via Flickr

10.புரி- புவனேஸ்வர்

10.புரி- புவனேஸ்வர்

புவனேஸ்வரிலிருந்து புரியிலுள்ள கோனார்க் சூரிய கோயிலுக்கு செல்லும் சாலையும் இயற்கை பேரழகு மிகுந்த சாலைகளில் ஒன்று. சூரிய கோயிலுக்கு செல்லும் முன்பே நெஞ்சை நிறைத்துவிடும்.

Picture Credit: Manasa Malipeddi via Flickr

பாம்பன் பாலம்

பாம்பன் பாலம்

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் ரயில் பாலம் மற்றும் கடல் பாலம் பயண விரும்பிகளை மெய்சிலிர்க்க வைக்கும். கடல்நீரை தொட்டுத் தழுவிச் செல்லும் பாலத்தின் வழியாக ரயில் பயணிப்பது புதிய அனுபவத்தை வழங்கும். கார், பைக்கில் பயணிப்பவர்களும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறலாம்.

Picture Credit: Deepak Bansi via Wiki Commons

Most Read Articles
English summary
Here is a list of some of the India's most craziest roads and bridges which we think everyone should experience once in their lifetime. Some of the roads are beautiful and others are outright scary. Sit back and start clicking through the slides.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X