எத்தனை மாடர்ன் கார்கள் வந்தாலும், ஏங்க வைக்கும் அந்த கால கார்கள்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், கார்பன் ஃபைபர் பாடி என கார்களில் புதுமையும், புதியதுமான தொழில்நுட்பங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால், அதுவே பல சமயங்களில் சிக்கலாகிவிடுவதுடன், பழுது என்று வரும்போது இன்ஸ்யூரன்ஸை தாண்டி, பர்ஸையும் பதம் பார்த்துவிடுகிறது.

பலருக்கு காரின் மீதான ஆர்வத்தை குறைத்து எரிச்சலடைய வைக்கிறது. அதேவேளை, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை வந்த கார்களில் இருந்த எளிமையான தொழில்நுட்பங்களும், இதர விஷயங்களும் இந்த தலைமுறையினர் இழந்து நிற்கின்றனர் என்பதை நிதர்சனமான உண்மை. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

1.மதிப்பு

1.மதிப்பு

அப்போது காருக்கென ஒரு மதிப்பு இருந்தது. அதனை ஓட்டுபவருக்கும், வைத்திருப்பவருக்கும் தனி மரியாதை இருந்தது. ஆனால், இப்போது ஆடி வைத்திருந்தாலும் பத்தோடு பதினைந்தாக மாறிவிட்டது.

2. கட்டுறுதி

2. கட்டுறுதி

அம்பாசடராக இருக்கட்டும், பிரிமியர் பத்மினியாகட்டும், கான்டெஸ்ஸாவாகட்டும், அந்த கார்களின் கட்டுறுதி மிக்க பாடி ஷெல் நீடித்த உழைப்பை வழங்குவதாக இருந்தது. சிராய்ப்புகள் மற்றும் விபத்துக்களில் சிக்கும்போது கூட எளிதாக சரிசெய்ய முடியும். உதிரிபாகங்கள் விலையும், லேபர் கட்டணமும் குறைவாக இருந்தது. அந்த கார்கள் அனைத்தையும் இந்திய சாலை நிலைகளுக்கு மிக உகந்த கட்டுமானத்தை கொண்டிருந்தன.

3. பின்புற இருக்கை வசதி

3. பின்புற இருக்கை வசதி

இந்தியாவில் விற்பனையாகும் சாதாரண மக்களுக்கான போக்குவரத்து மற்றும் தனிநபர் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பட்ஜெட் கார்கள் அனைத்தும் தற்போது 4 மீட்டருக்கும் குறைவாக சுருக்கப்பட்டுவிட்டன. ஆனால், அப்போது வந்த கார்களின் பின் இருக்கை மிகச்சிறப்பான இடவசதியையும், சொகுசையும் பயணிகளுக்கு அளித்தன.

4. ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல்

4. ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல்

தற்போது இடவசதியை மனதில் வைத்து பல கார்களில் ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல் வழங்கப்படுவதில்லை. ஆனால், பழைய கார்களில் ஃபுல் சைஸ் ஸ்பேர் வீல் வழங்கப்பட்டன. அவற்றை தொடர்ந்து ஓட்ட முடியும் என்பதுடன், எளிதாக பஞ்சர் போட முடியும்.

5. எலக்ட்ரானிக் சாதனங்கள் உதவி

5. எலக்ட்ரானிக் சாதனங்கள் உதவி

எஞ்சின் மற்றும் காரை கட்டுப்படுத்துவதற்கு இப்போது இருக்கும் அளவுக்கு எவ்வித எலக்ட்ரானிக் தொழில்நுட்ப வசதிகள் அப்போது இல்லை. ஓட்டுனரின் திறமையில் காரின் அனைத்து அவையங்களும் கட்டுப்படுத்தப்பட்டன.

6. பழுது நீக்குதல் எளிது

6. பழுது நீக்குதல் எளிது

பழைய கார்களின் எளிமையான தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு மூலம் காரில் ஏற்படும் பழுதுகளை எளிதாகவும் சரி செய்ய முடியும். கார் ஓட்டத் தெரிந்தவர்கள் பலருக்கும் சிறிய பழுதுகளை நீக்க தெரிந்திருந்தது. ஸ்க்ரூடிரைவர் மற்றும் சில ஸ்பேனர்களை வைத்துக் கொண்டு கார்களை பழுது நீக்கிவிடும் திறமைசாலி ஓட்டுனர்களும் இருந்தனர். ஆனால், இப்போது சிறிய பிர்சனைகளுக்கு கூட சர்வீஸ் மையத்திற்கு செல்ல வேண்டிய நிலையும், சிறிய பிரச்னைகளுக்கு கூட பல ஆயிரங்களை தீட்டும் சர்வீஸ் மையங்களும் நடுக்கத்தை ஏற்படுத்துகின்றன.

7. கார் சாவி

7. கார் சாவி

கார் சாவியை கையில் வைத்திருப்பதும், இக்னிஷனில் போட்டு காரை ஸ்டார்ட் செய்வதும் ஒரு தனி கெத்து. ஆனால், இப்போது வரும் கார்களில் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியை கொடுத்து அதற்குண்டான ஒரு த்ரில்லை குறைத்துவிட்டதாகவே தோன்றுகிறது. இக்னிஷனில் கார் சாவி இல்லாமல் இருப்பதே ஏதோ ஒன்றை இழந்ததது போன்ற உணர்வை தருகிறது.

8.எளிமையான இன்டிரியர்

8.எளிமையான இன்டிரியர்

மிக எளிமையான இன்டிரியர் இருந்தது. ஆனால், இன்டிரியர் எக்கச்சக்கமான பட்டன்களையும், கன்ட்ரோல் சுவிட்சுகளையும் கொடுத்து ஓட்டுனருக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கார் வைத்திருக்கும் பலருக்கும் எந்த பட்டன் எதற்கு பயன்படுகிறது. அதில் இருக்கும் எச்சரிக்கை விளக்குகளின் உபயோகம் என்ன என்பதும் தெரியவதில்லை.

9. ஏ- பில்லர்

9. ஏ- பில்லர்

தற்போது வரும் பெரும்பாலான கார்களின் ஏ - பில்லர் அதிக தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனால், வளைவுகளில் திரும்பும்போது எதிரில் வரும் வாகனங்களை கணிக்க தவறும் நிலை இருக்கிறது. ஆனால், அக்கால கார்களில் ஏ பில்லர் சரியான அளவு கொண்டதாக வடிவமைக்கப்பட்டதுடன், ஓட்டுனர் வளைவுகளில் எளிதாக சாலையை பார்த்து ஓட்டும் வகையில் இருந்தது.

10.கியர் லிவர்

10.கியர் லிவர்

பழைய மாடல் அம்பாசடர் கார்களில் ஸ்டீயரிங் வீல் அருகிலேயே கியர் லிவர் கொடுக்கப்பட்டிருப்பது எளிதாக மாற்றும் வகையில் இருந்தது. இதனால், கூடுதல் இடவசதி கிடைத்ததுடன், நெருக்கடி இல்லாத பயண அனுபவத்தை வழங்கியது.

மறக்க முடியா பயண அனுபவங்கள்

மறக்க முடியா பயண அனுபவங்கள்

அந்த கால கார் பயணங்கள் அரிதாக இருந்தாலும் மனதில் ஆழ பதிந்தன. மறக்க முடியாதவையாக அமைந்தன. இப்போது எல்லாம் கேமராக்களின் மனதிலேயே பதிய வைக்கப்படுகின்றன. மனதில் பதிவது வெகு குறைவு.

உங்களது அனுபவம்

உங்களது அனுபவம்

சிறு வயதில் கார்களில் பயணிக்கும்போது ஏற்பட்ட உங்களது அனுபவம், இழக்கும் விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாம். கருத்துப் பெட்டியில் பகிரந்துகொள்ளலாம்.

Most Read Articles
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
English summary
Taking a look back in the days, anyone ever wondered what ever happened to the good old cars and the way driving used to be? Well, here is a list of 10 things that we really miss about Indian cars:
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X