பிறந்தநாள் பரிசாக பகானி ஹூவைரா காரை பெற்ற தைவான் சிறுவன்!

தைவான் நாட்டை சேர்ந்த 15வயது நிரம்பிய சிறுவன் தனது பிறந்தநாளுக்கு பகானி ஹூவைரா காரை பரிசாக பெற்றுள்ளான். அந்த சிறுவனிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை. எனவே, இப்போதைக்கு அந்த காரை அவன் ஓட்ட முடியாது என்பதால் பிறந்தநாளுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்ட அந்த காரை மீண்டும் இத்தாலிக்கு கொண்டு செல்ல பகானி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அந்த சிறுவன் ஓட்டுனர் உரிமம் பெற்றவுடன் மீண்டும் அந்த காரை டெலிவிரி கொடுக்க பகானி முடிவு செய்துள்ளது. சிறுவனுக்காக வாங்கப்பட்ட அந்த காரில் சில கஸ்டமைஸ் பணிகளை செய்துனர். தவிர, பெர்ஃபார்மென்ஸ் ஆக்சஸெரீஸ்களையும் சிலவற்றையும் பொருத்தியுள்ளனர். அதில், முக்கியமானதாக இன்னோடெக் பெர்ஃபார்மென்ஸ் எக்ஸ்சாஸ்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டிருப்பதை கூறலாம். இதன் சப்தம் அலாதியாக இருக்கும்.


அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2011ம் ஆண்டு பகானி ஹூவைரா ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. தனித்துவமான டிசைனால் கோடீஸ்வர வாடிக்கையாளர்களை கவர்ந்த மாடலாக வலம் வருகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி எம்158 வி12 ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 730 எச்பி பவரையும், 1,000 என்எம் டார்க்கையும் அளிக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை 3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 372 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டது.

விலை

விலை

இந்த கார் ஒரு மில்லியன் யூரோ விலை கொண்டது. ஆனால், வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் செய்து தரப்படும் பணிகளை பொறுத்து விலையில் மாறுபாடு இருக்கும்.

கூடுதல் விலை

கூடுதல் விலை

இந்த காருக்கு ஆப்ஷனல் பாடி வேலைகள் மற்றும் பெயின்ட் செய்வதற்கு விலையுடன் கூடுதலாக 29,000 யூரோ கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, கார்பன் ஃபைபர் பாடி வேலைகள் செய்து தருவதற்கு 59,900 யூரோவை கூடுதலாக தர வேண்டும். ரியர் வியூ கேமராவுக்கு 5,000 யூரோவை தனியாக கொடுக்க வேண்டும். இப்படி கூடுதல் விலைப் பட்டியலின் மூலம் கார் விலை கூடுதலாகிக் கொண்டே செல்கிறது.

அதுமட்டுமா...

அதுமட்டுமா...

பிரேக், பெயிண்ட் என விரும்பிய வகையில் காரில் மாற்றங்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் என ஒவ்வொன்றுக்கும் தனியாக விலை பட்டியலை பகானி கொடுக்கிறது. இதனால், காரின் ஒரிஜினல் விலையைவிட வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பொறுத்து காரின் விலை வெகுவாக அதிகமாகும்.

தைவானின் முதல் பகானி

தைவானின் முதல் பகானி

தைவான் நாட்டிற்கு வந்த முதல் பகானி காராக இது குறிப்பிடப்படுகிறது.

Photo Source: IPE

Most Read Articles
மேலும்... #pagani #huayra #offbeat #பகானி
English summary
The first Pagani Huayra has just been delivered in Taiwan, but it appears that the vehicle will not be driven, at least for now. No, it is not broken but the person who received the supercar is actually a 15 years old boy and he doesn’t have a driving license.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X