பெட்ரோல் பங்குகளில் ஏன் மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது என்பதை உணர்த்திய விபத்து..!!

Written By:

பாகிஸ்தானில் எண்ணெய் டாங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த விபத்து, பெட்ரோல் பங்குகளில் பொதுமக்கள் ஏன் மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்பதை கற்றுத்தந்துள்ளது.

பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து, லாகூருக்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு பஞ்சாப் மாகானத்தின் முல்தான் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது பஹவல்பூர் என்ற பகுதியில் சென்ற போது தீடீரென டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தால் லாரியில் இருந்த 40,000 லிட்டர் பெட்ரோல் கசிந்தது. இதனைக் கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் வாளி, சமையல் பாத்திரங்கள் என கைகளில் கிடைத்ததைத் எடுத்துக்கொண்டு அதனைப் பிடிக்க கூட்டமாக சென்றனர்.

பொதுமக்கள் கூடியிருந்த சமயத்தில், அடுத்த 10 நிமிடங்களில் அந்த டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. இதில் அங்கு பெட்ரோலை எடுக்க கூடியிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது பெட்ரோல் சிதறி அவர்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கினர்.

இந்தக் கோர சம்பவத்தில் ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்கள், குழந்தைகள் என 154 பேர் பலியாகினர். 100க்கும் அதிகாமானவர்கள் காயமடைந்தனர். பலியானோர் எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பலியானோரின் உடல்கள் மிக மோசமாக எரிந்துவிட்டதால், சிலரின் உடல்களை டிஎன்ஏ சோதனை செய்து அடையாளம் காண வேண்டியிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நடந்த பகுதி பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் வசிக்கக்கூடிய ஒரு பகுதி என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே இதில் அடங்கியுள்ள ஆபத்தை உணராமல் குடும்ப சகிதமாக எரிபொருளை சேமிக்கச் சென்று உயிரை மாய்த்துள்ளனர் அப்பகுதிமக்கள்.

இதைப் போன்ற டேங்கர் லாரி விபத்துக்களைக் இதற்கு முன்னதாகவே நாம் கண்டிருக்கிரோம், ஆனால் இதில் உள்ள ஆபத்தை உணராமல் இருந்திருப்போம்.

எரிபொருள் என்பது எரியக்கூடிய தன்மை கொண்டது, அதிகமான எரிபொருள் இருக்கும் பகுதியில் தீ விபத்து ஏற்பட சிறிய தீப்பொரி கூட தேவையில்லை, நம்முடைய மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு கூட போதுமானது.

(இந்த விபத்துக்கு காரணமாக மொபைல் போன் பயன்பாடு கூட இருக்கலாம் என்பது கூறப்படுவது குறிப்பிடத்தக்கது)

எனவே தான் பெட்ரோல் நிலையங்களில் கூட மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என கூறுகின்றனர். பெட்ரோல் பங்குகளில் மொபைல் போனை எதற்காக பயன்படுத்தக்கூடாது என கூறுகிறார்கள் என்பதை இப்போது அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம்.

English summary
Read in Tamil about why we should not use mobile phones near petrol bunks?
Please Wait while comments are loading...

Latest Photos