கார் விபத்து ஏற்படுவதற்கான 25 முக்கிய காரணங்களும், தவிர்க்கும் வழிகளும்...!!

By Saravana

நம் நாட்டில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வாகனப் பெருக்கம், போக்குவரத்து விதிமீறல் என்று விபத்துக்களுக்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும். எதிர்பாராத நேரத்தில், எப்படியும் நிகழும் விபத்துக்களால் இன்று லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது.

விபத்துக்களுக்கான காரணத்தையும். சூழ்நிலையையும் முன்கூட்டியே கணிக்க முடியாதெனினும், கார் விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் மற்றும் சில பொதுவான காரணங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. கவனக்குறைவு

01. கவனக்குறைவு

பெரும்பாலான விபத்துக்களுக்கு ஓட்டுனர்களின் கவனக்குறைவு மிக முக்கிய காரணம். மொபைல்போன் பேசுவது, சாப்பிடுவது, மியூசிக் சிஸ்டத்தை இயக்குவது போன்ற பல்வேறு காரணங்களால் கவனக்குறைவு ஏற்படுகிறது. கவனக்குறைவு, வாழ்க்கையின் கனவுகளை குலைக்கும்.

02. ஓவர் ஸ்பீடு

02. ஓவர் ஸ்பீடு

வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வேகத்தில் வாகனத்தை செலுத்த தவறுவதும் முக்கிய காரணம். சில சாலைகளில் வேக வரம்பை மீறிச் செல்வதும் விபத்துக்கு வழிகோலுகிறது. மித வேகம், மிக நன்று.

 03. மதுபோதை...

03. மதுபோதை...

குடிபோதையில் நிதானமின்றி வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. மதுபோதையில் இருக்கும்போது டாக்சியை பயன்படுத்துவது விபத்தை தவிர்க்க உதவும். குடி நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு.

04. தாறுமாறாக செலுத்துதல்

04. தாறுமாறாக செலுத்துதல்

பிறருக்கு அச்சுறுத்தும் வகையில், வாகனத்தை கண்ணை மூடிக்கொண்டு தாறுமாறாக செலுத்துவதும் சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்து மிகப்பெரிய விபத்தில் சிக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

05. மழை நேரம்...

05. மழை நேரம்...

மழை நேரத்தில் வாகனத்தை இயக்குவதில் பல ஆபத்துக்கள் உள்ளன. சாலைகளின் வழுக்குத்தன்மை, போதிய பார்வை திறன் கிடைக்காதது, மழை நீர் தேங்கிய சாலைகளில் இருக்கும் பள்ளம் மேடுகளை கணிக்க முடியாமல் வாகனங்களை இயக்குவதால் நிச்சயம் விபத்துக்கு அடிகோலுகின்றன.

06. சிக்னல் ஜம்ப்

06. சிக்னல் ஜம்ப்

சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது விதியை மீறி வாகனத்தை செலுத்துவதும் விபத்துக்கான காரணமாக அமைகிறது.

07. பனிபடர்ந்த சாலை

07. பனிபடர்ந்த சாலை

பனிபடர்ந்த சாலைகளில் காரை செலுத்துவதும், கடினமான விஷயம். டயர்களுக்கு போதிய பிடிப்பு கிடைக்காமல், வழுக்கிச் சென்று விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம். பனிபடர்ந்த சாலைகளில் செல்லும்போது, அதற்கான விசேஷ டயர்களை பொருத்திக்கொள்வது உத்தமம்.

08. அனுபவமின்மை

08. அனுபவமின்மை

புதிதாக வாகனங்களை இயக்க பழகுபவர்களும், இளைஞர்களும் அனுபவமின்மை காரணமாக சூழ்நிலைகளை கையாளத் தெரியாமல் விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.

09. இரவு நேர பயணம்

09. இரவு நேர பயணம்

இரவு நேரத்தில் வாகனத்தை இயக்குவதும் கடினமான ஒன்று. ஹெட்லைட் இருப்பினம், சாலைகளை நன்கு கணித்து ஓட்டுவதற்கு இரவு நேரம் உகந்ததல்ல.

10. டிசைன் குறைபாடுகள்

10. டிசைன் குறைபாடுகள்

கார் அல்லது வாகனங்களில் தயாரிப்பின்போது ஏற்படும் குறைபாடுகள் அல்லது வடிவமைப்பு கோளாறுகளாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாதுகாப்பு அம்சங்களில் சிறப்பான காரை தேர்வு செய்வது அவசியம்.

11. எமலோகம் செல்லும் வழி

11. எமலோகம் செல்லும் வழி

ஒருவழிப்பாதையில் அத்துமீறி செல்வது விபத்துக்கான நாமே அச்சாரம் போடும் விஷயம். சாலை எச்சரிக்கைப் பலகைகளை கவனித்து செல்வதோடு, புதிய இடங்களுக்கு செல்லும்போது நிதானமாக காரை செலுத்துவது அவசியம்.

12. திடுதிப்புன்னு திருப்புறது...

12. திடுதிப்புன்னு திருப்புறது...

பின்னால், எதிரில் வரும் வாகனங்களை சட்டை செய்யாமல், கண்மூடித்தனமாக காரை திருப்புவது, யூ- டர்ன் அடிப்பது ஆகியவையும் விபத்து ஏற்படுவதற்கான காரணமாக அமைகிறது. எப்போது வாகனத்தை திரும்பும்போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

13. டெயில்கேட்டிங்

13. டெயில்கேட்டிங்

முன்னால் செல்லும் வாகனத்துடன் போதிய இடைவெளி விட்டு காரை ஓட்டுவது அவசியம். நகர்ப்புறங்களில் தினசரி பல விபத்துக்கள் டெயில்கேட்டிங் செய்து ஓட்டுவதால் ஏற்படுவதை காணலாம்.

14. சண்டை போடாதீங்க...

14. சண்டை போடாதீங்க...

பிற வாகனங்களுடன் போட்டி போட்டு ஓட்டுவது, வசைமாறி பொழிந்து விட்டு கோபத்தில் தாறுமாறாக ஓட்டுவது போன்றவையும் அடுத்த சில நிமிடங்களில் விபத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களாக அமையும்.

15. திடீர் பள்ளங்கள்

15. திடீர் பள்ளங்கள்

நல்ல ரோடுதானே என்று வேகமாக செல்லும்போது வரும் திடீர் பள்ளங்கள் நிலைகுலைய செய்து விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. நிதானமாக செல்வது மட்டுமே இந்த விபத்துக்களை தவிர்க்க உதவும்.

16. சோர்வு

16. சோர்வு

தொடர்ந்து வாகனத்தை இயக்கும்போது ஏற்படும் சோர்வு காரணமாகவும், இரவு நேரத்தில் அயர்ந்துவிடும்போதும், கவனக்குறைவு ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரண்டரை மணிநேரத்துக்கு ஒருமுறை சற்று ஓய்வு எடுத்து ஓட்டுவது அவசியம்.

17. தோசைக்கல் டயர்

17. தோசைக்கல் டயர்

போதிய பராமரிப்பு இல்லாத டயர்கள் மற்றும் ட்ரெட் தேய்ந்து போன வழுக்கை டயர்களும் எந்தநேரத்திலும் விபத்தை ஏற்படுத்தும் காரணியாகிறது. எனவே, டயர் மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும்.

18. பனிமூட்டம்

18. பனிமூட்டம்

அதிக பனிமூட்டம் நிலவும் போது போதிய பார்வை திறன் கிடைக்காமல் விபத்துக்கள் ஏற்படுகின்றன. பனிமூட்டத்தில் காரை செலுத்துவதை தவிர்ப்பதே ஒரே வழி.

19. ஸ்ட்ரீட் ரேஸ்

19. ஸ்ட்ரீட் ரேஸ்

பொது பயன்பாட்டு சாலைகளில் ரேஸ் விடுவதும் விபத்துக்களை தேடிப்போய் பிடிக்க வைக்கின்றன. இந்த விஷயத்தில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுத்து உயிரிழந்த செய்திகளை அடிக்கடி காணலாம்.

20. ஓவர்டேக்

20. ஓவர்டேக்

அவசரக்குடுக்கை போன்று ஓவர்டேக் செய்யும்போது பெரும் விபத்துக்களுக்கு வழிவகுக்கும். முன்னால் செல்லும் வாகனத்தை முந்தும்போது அதிக கவனமும், நிதானத்துடன் செயல்படுவது அவசியம். குறிப்பாக, இரவில் முந்தும்போது கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

21. இன்டிகேட்டர்

21. இன்டிகேட்டர்

வளைவுகளில் திரும்பும்போது இன்டிகேட்டர் போடாமல் திருப்பும் பலரால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகிறது. திடீரென பிரேக் போடுவதும் விபத்துக்கு வழிகோலும் விஷயம்.

22. வளைவுகளில்...

22. வளைவுகளில்...

வளைவுகளில் வாகனத்தின் கட்டுப்படுத்த முடியாமல் போவதும், எதிரில் வாகனத்திற்கு போதிய இடைவெளிவிட்டு திருப்ப தெரியாததும் விபத்து ஏற்பட காரணமாகிறது. வளைவுகளில் வேகத்தை முடிந்தவரை குறைத்து செல்வதே விபத்தை தவிர்க்க உதவும்.

23. விலங்குகள் நடமாட்டம்

23. விலங்குகள் நடமாட்டம்

விலங்குகளால் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். மேலும், வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கவனக்குறைவாக, வேகமாக செல்வதும் விபத்து ஏற்பட வழிவகுக்கிறது.

24. கட்டுமானப் பகுதிகள்

24. கட்டுமானப் பகுதிகள்

சாலை செப்பனிடும் பணிகள், புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போது அமைக்கப்படும் தற்காலிக சாலைகளில் கண்ணை மூடிக் கொண்டு செல்வதும், குழப்பத்தை ஏற்படுத்தும் பகுதியில் வேகமாக செல்வதும் விபத்துக்கு வழிகோலும்.

25. பராமரிப்பு

25. பராமரிப்பு

போதிய பராமரிப்பு மேற்கொள்ளப்படாத வாகனங்களில் பிரேக் ஃபெயிலியர், டயர் வெடிப்பது, எஞ்சின் கோளாறுகள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே, ஓட்டும்போது மட்டும் கவனம் செலுத்துதல் விபத்துக்களை தவிர்க்கும் வழியாகாது. வாகனத்தை முறையாக பராமரிப்பதும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.

Most Read Articles
English summary
25 Common Reasons For Car Accidents.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X