ஆட்டோமொபைல் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத 25 அதிசய தகவல்கள்..!!

Written By:

ஆரம்ப காலத்தில் மிகவும் எளிமையாக இருந்த கார்கள் தற்போது சூப்பர் கார்களாக பரினாம வளர்ச்சி அடைந்தது போல ஆட்டோமொபைல் துறையும் பரினாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் ஆட்டோமொபைல் பற்றி சில ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

 1. உலகில் அதிகமாக மறுசுழற்சி செய்யப்படும் பொருள் ஆட்டோமொபைல் தான்.
 2. காரின் ரிமோட் கார் சாவியில் உள்ள பட்டனை 256 தடவைகள் அழுத்தினால் அது செயல் இழந்து விடும்.

 

 • வாகனத்தில் செலுத்தப்படும் எரிபொருள் மூலம் தயாரிக்கப்படும் ஆற்றலில் 18% மட்டுமே வீல்களுக்கு செல்கிறது.
 • தற்போது உலகில் சுமார் 100 கோடி எண்ணிக்கையிலான கார்கள் சாலைகளில் இயக்கத்தில் உள்ளன.

 

 • உலகின் முதல் டிராஃபிக் சிக்னல் 1927ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள வொல்வெர்ஹாம்ப்டன் என்ற நகரில் முதல் முதலாக நிறுவப்பட்டது.
 • உலகின் முதல் கார் விபத்து 1769ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது.

 

 • ஃபெராரி நிறுவனம் ஒரு நாளைக்கு 14 கார்களை மட்டுமே தயாரிக்கிறது.
 • அதே சமயம் உலகின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, ஒரு நாளில் 13,000 கார்களை தயாரிக்கிறது.

 • இதுவரை தயாரிக்கப்பட்ட கார்களிலேயே அதிக விலை கொண்டது புகாடி ராயல் கெல்னர் கூப்(விண்டேஜ்) கார் தான். இதன் மதிப்பு 8.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இது தற்போதைய புகாடி வெய்ரோன் காரைக் காட்டிலும் 6.45 மில்லியர் டாலர்கள் கூடுதல் விலை கொண்டதாகும்.
 • பதிவு செய்யப்பட்ட உலகின் முதல் சாலை மரணம் 1896ல் நடந்துள்ளது.

 • உலகின் மிகவும் பழமையான இயக்கத்தில் உள்ள கார் 1884ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டது. இந்தக் கார் 4.6 மில்லியன் டாலர்களுக்கு ஏலம் போனது.
 • ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் பேனட் மீது பொருத்தப்பட்டிருக்கும் சின்னம் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸி என்று அழைக்கப்படுகிறது.

 • கார்களில் உள்ள டேஷ்போர்ட் என்பது முதன் முதலில் மரப்பலகையால் செய்யப்பட்டது. முந்தைய காலத்தில் ஓட்டுநர் மீது மண் தெறிக்காமல் இருக்கும் விதமாக இது பயன்படுத்தப்பட்டது.
 • ஒரு கார் இஞ்சினை கழற்றிவிட்டு மீண்டும் பொருத்தும் உலக சாதனையானது வெறும் 42 வினாடிகளில் நிகழ்த்தப்பட்டது. இந்தச் சாதனை ஃபோர்டு எஸ்கார்ட் காரில் 1985ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

 • உலகிலேயே அதிகாரப்பூர்வமாக சாலைகளில் இயக்கக் கூடிய மிகவும் குறைந்த உயரம் கொண்ட கார் ‘தி ஃபிளாட்மொபைல்' ஆகும். இதன் உயரம் தரைமட்டத்திலிருந்து 19 இஞ்ச் மட்டுமே.
 • குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்டறியும் சாதனத்தை ஃபிரான்ஸ் நாட்டில் கட்டாயம் ஒவ்வொரு கார்களிலும் வைத்திருக்க வேண்டும் என்பது விதி.

 • சர்வாதிகாரியான ஹிட்லர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம் மெர்சிடிஸ் நிறுவனத்திடம் கார் வாங்க கடன் கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.
 • ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரபல மாடல்களான பசாட், போலோ, ஜெட் ஆகிய மாடல்களின் பெயர்கள் காற்றை அடிப்படையாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன.

 • தென் ஆப்பிரிக்காவில் விற்பனை செய்யப்படும் மெர்சிடிஸ் கார்களில் நெருப்பை உமிழும் வசதி பொருத்தப்படுகிறது. கார் திருடர்களை மனதில் கொண்டு மெர்சிடிஸ் நிறுவனம் இதனை செய்வது குறிப்பிடத்தக்கது.
 • அல்பேனியா நாட்டில் இயங்கும் கார்களில் 80% மெர்சிடிஸ் பென்ஸ் மாடல்களே.

 • ஜப்பான் நாட்டில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் டிரைவிங் செய்யக்கூடிய கார்களின் பின்னால் இதனை குறிக்கும் விதமாக ஒரு பேட்ஜ் பொருத்தப்பட்டிருக்கும்.
 • உலகில் இயங்கும் 4 கார்களில் ஒன்று சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.

 • ஃஎப்-1 பந்தய காரால் ஒரு உருளை வடிவ சுரங்கப்பாதையில் தலைகீழாக மணிக்கு 193கிமீ வேகத்தில் செல்ல முடியும்.
 • அனு உலைகளின் எக்ஸாஸ்ட் பைப் அமைப்புகள் தான் பெரும்பாலான ஃஎப்-1 கார்களில் பயன்படுத்தப்படுகிறது.
 • அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் உள்ள சீனாவில் உங்களுடைய கார் சிக்கிக்கொண்டால், உங்களுடைய காரை அங்கேயே ஒரு சேவை நிறுவனத்திடம் விட்டுவிட்டு, நீங்கள் மட்டும் பைக்கில் சேர வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதற்கு 3,545 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

English summary
Read in Tamil about interesting facts on automobile.
Please Wait while comments are loading...

Latest Photos