சச்சின், தோனி, கோலி உள்ளிட்ட ஐபிஎல் கேப்டன்களின் கார்களும்.. தகவல்களும்..

Written By:

இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியமத்த புகழ் கொண்டது நமது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர். தற்போது இதன் 10வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது.

வருங்காலத்தில் கிரிக்கெட் சரித்திரத்தைப் பற்றி பேசுபவர்கள், ஐபிஎல்லிற்கு முன்பு, ஐபிஎல்லிற்கு பின்பு என்று தான் பேசுவார்கள். அந்த அளவுக்கு இந்த தொடர் கிரிக்கெட் விளையாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

கோடிகள் புரளும் இந்த காஸ்ட்லி தொடரில் பங்குகொண்டிருக்கும் இந்திய கேப்டன்கள் பயன்படுத்தும், காஸ்ட்லி கார்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண இருக்கிறோம்.

சச்சின் டெண்டுல்கர்

இந்த தொகுப்பினை நமது மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினிடம் இருந்தே தொடங்கலாம்..

உலகில் செஞ்சுரிகளில் சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனைகளின் மகுடத்தை தாங்கியிருக்கும் சச்சின் கார் ஓட்டுவதிலும் மாஸ்டர் பிளாஸ்டர்தான். அதிவேகமாக கார் ஓட்டுவது சச்சினுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு என அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

சச்சின் டெண்டுல்கர்

அவரது வீட்டு கேரஜில் பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபெராரி என அனைத்து ரக கார்களும் அணிவகுத்து நிற்கின்றன. இதில், சில கார்கள் அவரது சாதனைக்காக பரிசாக கிடைத்தவை.

சச்சின் டெண்டுல்கர்

சூப்பர் கார்களின் காட்ஸில்லா என அழைக்கப்படும் நிசான் ஜிடி-ஆர், பிஎம்டபிள்யூவின் சமீபத்திய உயர் ரக வரவான ஐ-8 ஆகியவை இவரின் கலெக்‌ஷனில் குறிப்பிடத்தக்க கார்கள் ஆகும்.

மகேந்திர சிங் தோனி

கேப்டன் கூல் என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் கார் ஆர்வம் பற்றி நாம் சொல்லித்தெரியவேண்டிய அவசியம் இல்லை. இவரின் கூல் மனநிலைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் ஓவ்வுநேரங்களில் இவர் கார், பைக் ஓட்டுவது தான் என்ற கருத்தும் நிலவுகிறது.

மகேந்திர சிங் தோனி

இந்தியாவில் இருக்கக்கூடிய பல வெளிநாட்டு உயர் ரக கார்கள், பைக்குகள் இவர் கேரஜில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. என்ஃபீல்டு முதல் கான்ஃபெடரேட் எக்ஸ்132 ஹெல்கேட் வரை, கவாஸாகியின் புதிய அறிமுகமான நிஞ்சா ஹச்2 சூப்பர் பைக் வரை வாங்கிவைத்துள்ளார் இவர்.

மகேந்திர சிங் தோனி

தோனியின் கார் கலெக்‌ஷனில் குறிப்பிடத்தக்கது அமெரிக்காவின் ஜிஎம்சி சீயரா பிக்அப் கார். இது 6.6 லிட்டர் வி8 இஞ்சின் கொண்டது, அதிகபட்சமாக 397 பிஹச்பி ஆற்றல், 1036 என்எம் டார்க், டூயல் பின்புற வீல்கள் என வலிமைமிக்க இயந்திர மிருகத்தை இவர் சமீபத்தில் வாங்கியிருக்கிறார்.

விராட் கோலி

எம்எஸ் தோனியின் வழித்தோன்றலாக தற்போது இந்திய அணியை வழிநடத்தி வரும் இளம் கேப்டன் கோலியும் கார்களுடன் நெருங்கி உறவாடி வருபவரே.

விராட் கோலி

இவரை ஒரு ஆடி விரும்பி என்றும் அழைக்கிறார்கள், ஆடி கார்களின் ஸ்போர்ட் டிசைன் இவரை ஆட்கொண்டிருக்கிறது என்றும் கூறலாம். இவரின் கலெக்‌ஷன்களை ஆடி கார்களே அலங்கரிக்கின்றன.

விராட் கோலி

சமீபத்தில் கோலி வாங்கியிருப்பது ஆடி ஆர்8 வி10 பிளஸ் கார், இதில் 5.2 லிட்டர் வி10 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 549பிஹச்பி ஆற்றலையும், 540 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இஞ்சினின் ஆற்றலை இதன் 4 வீல்களுக்கும் அளிக்கிறது.

ரோகித் ஷர்மா

ஐபிஎல் உருவாக்கிய நட்சத்திரங்களில் முக்கியமான ஒருவராக இருப்பவர் ரோகித் ஷர்மா. தோனி, கோலி, சச்சின் போன்று உயர்ரக கார்களை வைத்திருக்காவிட்டாலும் இவர் வைத்திருக்கும் பிஎம்டபிள்யூ எம்5 குறிப்பிடத்தக்க ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

ரோகித் ஷர்மா

அதிகபட்ச செயல்திறனுக்கு பெயர் பெற்றவை பிஎம்டபிள்யூவின் எம் சீரிஸ் கார்கள். ஆதலால் இவரின் எம்5 கார், ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார்களில் குறிப்பிடத்தக்க முக்கியமான ஒன்றாகும்.

ரோகித் ஷர்மா

ரோகித்தின் பிஎம்டபிள்யூ எம்5 காரில் 4.4 லிட்டர் வி8 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 553 பிஹச்பி ஆற்றலையும், 680 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது. இதில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர் பாக்ச் உள்ளது.

வீரேந்தர் சேவக்

சச்சினின் மறு உறுவம் என செல்லமாக அழைக்கப்படும் உலகின் ஆபத்தான பேட்ஸ்பேன்களில் ஒருவராக திகழ்ந்த சேவக் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

வீரேந்தர் சேவக்

இவரிடம் 2 கதவு கொண்ட ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார் இருக்கும் என எதிர்பார்த்து சென்றால், இவர் ஆச்சரியம் அளிக்கும் விதமாக பெண்ட்லி காண்டினெண்டல் ஃபிளையிங் ஸ்பர் காரை வைத்துள்ளார்.

வீரேந்தர் சேவக்

இந்த பெண்ட்லி காரில் 4.0 லிட்டர் வி8 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 616 பிஹச்பி ஆற்றலையும், 800 என்எம் டார்க்கையும் வழங்கிகிறது. இஞ்சினின் சக்தியை 8 ஸ்பீடு கியர் பாக்ஸ், 4 வீல்களுக்கும் பகிர்ந்து அளிக்கிறது.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

Story first published: Saturday, April 15, 2017, 18:21 [IST]
English summary
Read in Tamil about IPL Captains and their car collections
Please Wait while comments are loading...

Latest Photos