உலகின் பிரபலமான 5 விண்டேஜ் கார் திருவிழாக்கள்!

விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களுக்கு உலக அளவில் திரளான ரசிகர்கள் இருக்கின்றன. விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களின் பாரம்பரியத்தையும், தொழில்நுட்ப வல்லமையையும் எடுத்துரைக்கும் விதமாக, அவ்வப்போது கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

டொயோட்டா இன்னோவா காரின் சென்னை ஆன்ரோடு விலை!

அந்த கண்காட்சிகள் விண்டேஜ் கார் பிரியர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவையாக இருக்கின்றன. அந்த வகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார் கண்காட்சிகள் வெகுவிமரிசையாக நடத்தப்படுகின்றன. அதில், இந்தியா உள்பட உலக அளவில் கார் பிரியர்களை கவர்ந்த 5 விண்டேஜ் கார் கண்காட்சிகள் பற்றிய தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


உலகின் 5 பிரபல விண்டேஜ் கார் கண்காட்சிகள்!

உலகின் பிரபலமான 5 விண்டேஜ் கார் கண்காட்சிகள் பற்றிய தகவல்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

பெபுள் பீச் கான்கர்ஸ் டி எலிகன்ஸ்

பெபுள் பீச் கான்கர்ஸ் டி எலிகன்ஸ்

உலகின் மிக மிக பிரபலமான விண்டேஜ் கார் திருவிழா இது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். 17ம் நூற்றாண்டில் அந்த பகுதியை சேர்ந்த குறுநில மன்னர்கள் தங்களது செல்வசெழிப்பை காட்டுவதற்காக விதவிதமான குதிரை வண்டிகளை காட்சிக்கு நிறுத்தும் திருவிழாவாக தொடங்கி இன்று விண்டேஜ் கார்களின் வேடந்தாங்கலாக மாறியுள்ளது. தயாரிக்கப்பட்டபோது டிசைன் எப்படியிருந்ததோ, அப்படியே பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட விண்டேஜ் கார்களுக்கு மட்டுமே இங்கு காட்சிக்கு வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

2. மோட்டார்கிளாசிகா

2. மோட்டார்கிளாசிகா

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்த கிளாசிக் கார் கண்காட்சி 3 நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியில் பங்கேற்கும் கிளாசிக் கார் உரிமையாளர்கள் மெல்போர்ன் சாலையில் ஊர்வலமாக வந்து பார்வையாளர்களுக்கு விருந்து படைப்பது வழக்கமாக இருக்கிறது.

3. சில்வர்ஸ்டோன் கிளாசிக் கார் ஷோ

3. சில்வர்ஸ்டோன் கிளாசிக் கார் ஷோ

இது கிளாசிக் ரேஸ் கார்களுக்கான திருவிழாவாக அமைகிறது. கடந்த ஆண்டு இந்த திருவிழாவில் 9,000 கார்கள் பங்கு பெற்றதுடன், 94,000 பார்வையாளர்கள் வருகை புரிந்தனர். 2013ம் ஆண்டு உலகின் மிகச்சிறந்த மோட்டார் திருவிழா என்ற விருதை இந்த கண்காட்சி பெற்றது.

4. ரெட்ரோமொபைல்

4. ரெட்ரோமொபைல்

பாரீஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் ரெட்ரோமொபைல் கிளாசிக் கார் திருவிழா ஐரோப்பாவின் மிகச்சிறந்த கார் கண்காட்சிகளில் ஒன்றாக வருணிக்கப்படுகிறது. 1920 முதல் 1930ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட கார்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 'youngtimers' என்ற பிரிவில் 1970 முதல் 1980 வரை தயாரிக்கப்பட்ட கிளாசிக் கார்கள் மாடல்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு விழா வரும் பிப்ரவரி 4 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெற இருக்கிறது.

இந்தியாவின் பிரபல விழா

இந்தியாவின் பிரபல விழா

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆண்டுதோறும் விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களுக்கான ஊர்வலம் மற்றும் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. இதில், '21 கன் சல்யூட் விண்டேஜ் கார் ராலி' மிகவும் பிரபலமானது. அடுத்த மாதம் 21 மற்றும் 22 தேதிகளில் நடைபெற இருக்கும் இந்த விண்டேஜ் கார் ஊர்வலத்தில் வட இந்திய மன்னர்கள் பயன்படுத்திய விண்டேஜ் கார்கள் மற்றும் கிளாசிக் கார்கள் பங்கேற்க உள்ளன. டெல்லியிலுள்ள செங்கோட்டையில் துவங்கி, குர்கானிலுள்ள வேலி பார்க் வரை இந்த விண்டேஜ் கார் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இந்த பிரபலமான விண்டேஜ் கார்களின் ஊர்வல நிகழ்வுகளை டிரைவ்ஸ்பார்க் தளத்தின் சிறப்பு செய்தியாளர்கள் மூலம் வாசகர்களுக்கு வழங்க உள்ளோம்.

Most Read Articles
English summary
Let's take a look at some famous vintage car shows around the world, and something very special happening soon in India too.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X