சினிமா பாணியிலான பாதாள கார் கேரேஜ்!

அமெரிக்காவை சேர்ந்த சாப்ட் எஞ்சினியர் டாம் கான்ஸல்ஸ். கார் மற்றும் பைக் பிரியரான இவர் தனது எஸ்டேட்டில் பாதாள கார் கேரேஜை சொந்தமாக வடிவமைத்து அசத்தியுள்ளார்.

பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த கார் கேரேஜும், இதில் வாகனங்களை கொண்டு செல்வதற்கான எலிவேட்டர் பற்றிய விஷயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த கேரேஜ் இயங்கும் விதம், பைக்குகள் பற்றிய சுவையான தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஸ்டேட்

எஸ்டேட்

டாம் கான்ஸல்சின் எஸ்டேட்டில் 4 வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளின் நடுவில்தான் பாதாள கார் கேரேஜ் அமைந்துள்ளது.

பைக் கேரேஜ்

பைக் கேரேஜ்

எஸ்டேட்டில் உள்ள 4 வீடுகளில் ஒன்றில் பைக் கேரேஜ் உள்ளது. அதில், 100 பைக்குகளை அவர் சேகரித்து வைத்துள்ளார்.

பதிவு இல்லாத பைக்குகள்

பதிவு இல்லாத பைக்குகள்

கேரேஜில் இருக்கும் 100 பைக்குகளும் பதிவு செய்யப்படவில்லை.இதனால், இந்த பைக்குகளை ஓட்ட முடியாது என்பதால் வீட்டுக்குள் வைத்து அழகு பார்த்து வருகிறார் டாம்.

 கார் கேரேஜ்

கார் கேரேஜ்

அந்த எஸ்டேட்டில் இருக்கும் ஒரு வீட்டில் சுவிட்ச் போர்டில் உள்ள பட்டன் ஒன்றை தட்டினால் சினிமாவில் வருவது போன்று பெரிய எலிவேட்டர் ராட்சதன் போன்று மேலே எழும்புகிறது. அதில், வாகனங்கள் நிறுத்தப்பட்டு, கீழேயும், மேலேயும் கொண்டு செல்லப்படுகிறது.

எலிவேட்டர் மேலே மரம்

எலிவேட்டர் மேலே மரம்

எலிவேட்டர் மேற்புறத்தில் செயற்கை மரம் மற்றும் கற்களை வைத்துள்ளனர். இதனால், சாதாரண தரை போன்று தெரிகிறது. எலிவேட்டர் இருப்பது தெரியவில்லை. மேலே வரும்போதுதான் அங்கு எலிவேட்டர் இருப்பது தெரிகிறது.

 மெகா எலிவேட்டர்

மெகா எலிவேட்டர்

விமான நிலையங்களில் சாமான்களை விமானத்தில் ஏற்றுவதற்கு பயன்படும் எலிவேட்டரே பூமிக்கு அடியிலிருந்து கார்களை வெளியிலிருந்து கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

எலிவேட்டரின் முக்கிய அம்சம்

எலிவேட்டரின் முக்கிய அம்சம்

இந்த எலிவேட்டரின் ஹைட்ராலிங் சிஸ்டம் இயங்குவதற்காக 8,000 கேலன் ஆயில் நிரப்பப்பட்டிருக்கிறது. 60 அடி நீளம், 12 அடி நீளம் கொண்டது.

எடை தூக்கும் திறன்

எடை தூக்கும் திறன்

இந்த எலிவேட்டரில் கார்களை நிறுத்துவதற்கு 6 மேடைகள் இருக்கின்றன. 2.50 லட்சம் பவுண்ட் எடையை இந்த எலிவேட்டர் தூக்கி வரும் திறன் கொண்டது.

கம்ப்யூட்டர் கன்ட்ரோல்

கம்ப்யூட்டர் கன்ட்ரோல்

இந்த எலிவேட்டர் முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில் டாம் வடிவமைத்துள்ளார்.

மின்சாரத்தை உறிஞ்சும் எலிவேட்டர்

மின்சாரத்தை உறிஞ்சும் எலிவேட்டர்

ஒருமுறை எலிவேட்டரில் இயக்குவதற்கு 25 டாலர் மின்சார கட்டணம் செலவாகிறதாம். மேலும், நாட்டிலேயே மிகப்பெரிய தனியாரின் எலிவேட்டரும் இதுதானாம்.

 பாதாள கேரேஜ்

பாதாள கேரேஜ்

எலிவேட்டர் வழியாக கீழே இறங்கிவிட்டு ஒரு திரையை விலக்கும்போது பளபளக்கும் பாதாள அறை மினுமினுக்கிறது. அதில், கார்கள் அழகுற வரிசையாக நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இதனை அப்படியே, வீடியோ பார்க்க அடுத்த ஸ்லைடுக்கு வாருங்கள்.

5 மில்லியன் டாலர் கேரேஜ்

5 மில்லியன் டாலர் கேரேஜ்

இந்த பாதாள கார் கேரேஜ் மற்றும் எலிவேட்டரை அமைக்க 5 மில்லியன் டாலர் செலவாகியுள்ளதாம்.

கார்கள் மீது காதல்

கார்கள் மீது காதல்

தனது கார்கள் எந்தவொரு விஷயங்களாலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த கேரேஜை உருவாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
English summary
Tom Gonzales garage holds 100 bikes and all these 100 bikes are collector edition bikes. These bikes have never been registered or ridden.Apart from the motorcycle garage, Tom Gonzales has an underground garage. The lower floor which is 6,000 square feet stacks up his exotic cars. It is one of the largest private underground garage in US.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X