இனி ஆதார் எண் இல்லாமல் வாகனங்களை பதிவு செய்ய முடியாது!

Written By:

கடந்த 15 நாட்களுக்குள் ஆதார் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது மத்திய அரசு. இந்த வகையில் தற்போது வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகங்களில் இனி ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து துறையின் ஆணையர் தயானந்த் கட்டாரியா, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வாகனப் பதிவுகளுக்கான ‘வாகன்' மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாகனப் பதிவுக்கு சில விவரங்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்படி, இனி வாகனங்களை பதிவு செய்வதற்கு வாகன உரிமையாளரின் மொபைல் எண், ஆதார் எண் மற்றும் பான் எண் ஆகியவற்றை கட்டாயம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில் இந்த விவரங்கள் வாங்கப்படாமலே ஆர்சி வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி இந்த விவரங்கள் இல்லாமல் எந்த வாகனமும் பதிவு செய்யப்படாது என்பது தெரியவருகிறது.

வாகனப் பதிவு, ஆர்சி புதுப்பித்தல், ஓட்டுநர் உரிமம், ஆகிய பணிகளை ஒருங்கிணைக்கவே வாகன் மென்பொருள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இதில் தான் தற்போது புதிய விதிமுறைகளை மத்திய அரசு புகுத்தியுள்ளது.

பொதுவாகவே அனைத்து துறைகளிலும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரும் சூழலில் தற்போது வாகனபதிவிற்கும் ஆதார் எண் கட்டாயமாக்ப்பட்டுள்ளது.

ஆதார் எண் மட்டுமல்லாமல், வருமான வரி கணக்கு எண்ணான பான் கார்டு எண்ணும் கட்டாயப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஏழை எளிய மக்கள், விவசாயிகள், மீனவர்கள் என வருமான வரி வரம்புக்குக் கீழ் சம்பளம் பெரும் நடுத்தரவர்க்கத்தினரும் பான் எண் பெற்றிருக்க சாத்தியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களில் பலரும் ஆதார் கார்டை இன்னும் முழுமையாக பெறாமல் இருக்கும் சூழலில் இந்த புதிய விதிமுறையால் வாகனப் பதிவுகளில் சுணக்க நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய விதிமுறை ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆகவே இனி இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் பதிவு செய்பவர்கள் பான் எண், ஆதார் எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் வாகனப் பதிவு செய்யப்படாது என்று போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

பொதுமக்களில் பலரும் ஆதார் கார்டை இன்னும் முழுமையாக பெறாமல் இருக்கும் சூழலில் இந்த புதிய விதிமுறையால் வாகனப் பதிவுகளில் சுணக்க நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்கள்: 

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

English summary
Aadhaar, PAN numbers must for registering new vehicles
Please Wait while comments are loading...

Latest Photos