ரமலான் நோன்பு காலம் வரை வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: காவல்துறை அதிரடி..!!

Written By:

ரமலான் நோன்பு மாதத்தில் அசாம்பாவிதங்களை தவிர்க்க அதிரடியான சாலை கட்டுபாட்டு விதிகளை அபுதாபி நகர காவல்துறை அமல்படுத்தியுள்ளது.

அபுதாபி நகரத்தின் ரோந்து மற்றும் சாலை போக்குவரத்து துறையின் அதிகாரியான மொஹமத் தாய் அல் ஹிம்ரி இதற்கான உத்தரவை அபுதாபி நகரம் முழுவதும் பிறப்பித்துள்ளார்.

அதன்படி ரமலான் நோன்பு காலங்களில் கனரக வாகனங்கள் மற்றும் டிரக்குகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை அபுதாபி நகர சாலைகளில் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதே நேரங்களில் 50 பயணிகளுக்கு மேல் பொது போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்கக்கூடாது என அபுதாபி காவல்துறை ஆணையகம் அறிவித்துள்ளது.

மேலும் இதே விதிமுறைகளை பின்பற்றி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை அபுதாபி நகரத்தில் வாகனங்கள் செயல்படவேண்டும் என அந்நகர மக்களுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அபுதாபி நகரத்தில் உள்ள அனைத்து கனரக வாகன ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கையும் மற்றும் நேரடியான அறிவிப்புகளும் அதிகாரி மொஹமத் தாஹி தலைமையில் விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாலை விதிகளுக்கு அபுதாபி நகரத்தில் பல்வேறு கட்டுபாடுகள் உள்ளன. அதை தொடர்ந்து ரமலான் நோன்பு காலத்தில்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கவே ஐக்கிய அரபு அமீரக அரசு அபுதாபி காவல்துறைக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை பின்பற்றியே அபுதாபி நகரத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய அந்நகர காவல்துறையோடு சேர்ந்து போக்குவரத்து துறை காவல் அதிகாரிகளும் இணைந்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

வாகனங்களை குறிப்பிட்ட நேரங்களில் இயக்குவதற்கான கட்டுபாடுகள் மட்டுமின்றி, அதை செலுத்துவதிலும் சில விதிமுறைகளை அபுதாபி காவல்துறை வழங்கியுள்ளது.

இந்த அறிவிப்புகளோடு வேகக் கட்டுபாட்டை மீறுவது, இருக்கை பெல்டுகள் அணியாமல் இருப்பது, பயணத்தின் போது செல்ஃபோன் பயன்படுத்துவது, மேலும், சாலையில் வாகன இடைவெளிகளை முறையாக பின்பற்றாமல் இருப்பது, சாலைகளில் எதாவது கவனச்சிதறலாக வாகனத்தை ஓட்டுவது, போன்ற செயல்களை செய்தால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும் அபுதாபி நகர காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
Story first published: Sunday, May 28, 2017, 8:30 [IST]
English summary
Abhu Dhabi Police Department Implemented new traffic and Road safety Rules Until Ramzan gets over. Click for More details...
Please Wait while comments are loading...

Latest Photos