கார் கலெக்ஷனிலும் அக்ஷய் குமார் கில்லாடிதான்... !!

By Saravana

பாலிவுட் நடிகர்களில் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். ரசிகர்களால் கிலாடி அக்ஷய் என்று அன்போடு அழைக்கப்படும் அக்ஷய்குமார் சாகச நிகழ்ச்சி தொகுப்பாளராக தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிட்சயமாகிவிட்டார். அவர் சினிமாவில் தொழிலில் மட்டும் கில்லாடி அல்ல, கார் கலெக்ஷனிலும் கில்லாடிதான்.

அவரைப்போன்றே அவர் வைத்திருக்கும் கார்களும் மிகவும் தனித்துவமானவை என்பதை அவரது கார் கராஜை பார்த்தாலே புரிந்துவிடுகிறது. அவரது கார்கள், அதைப்பற்றிய சுவாரஸ்யங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம்

அமிதாப்பச்சனுக்கு அடுத்து இரண்டாவதாக ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரை வாங்கிய பாலிவுட் நடிகர் அக்ஷய்தான். ஆம், பலரும் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார்களை வாங்கிய நிலையில், அதைவிட அதிக விலை கொண்ட இந்த காரை தேர்வ செய்து வாங்கியிருக்கிறார்.

Photo Credit: Photo Bucket

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் பிராண்டு மட்டுமல்ல, அதிசக்திவாய்ந்த கார்களை விரும்பும் நபரான அக்ஷய்குமாரின் டேஸ்ட்டுக்கு ஈடுகொடுக்கும் அம்சங்கள் இந்த காரில் உண்டு. ஆம், இந்த காரில் இருப்பது 6.8 லிட்டர் வி12 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 453 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 6.71 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் சொல்லப்படுகிறது. ரூ.7.75 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனையாகிறது. ஆன்ரோடு விலை ரூ.9 கோடியை நெருங்கும் எனலாம்.

02. பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர்

02. பென்ட்லீ கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர்

ரோல்ஸ்ராய்ஸ் பிராண்டுக்கு நேரடி போட்டி மாடலான பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர் ஆடம்பர காரும் அக்ஷயிடம் உள்ளது. இந்தியாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே இந்த கார் இருப்பதும் இதன் தனித்துவத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

Photo Credit: Pinkvilla

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் 500 பிஎச்பி பவரையும், 660 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. ரூ.3.21 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கிறது.

 ரேஞ்ச்ரோவர் வோக்

ரேஞ்ச்ரோவர் வோக்

அக்ஷய்குமாரிடம் ரேஞ்ச்ரோவர் வோக் எஸ்யூவி ஒன்றும் உள்ளது. உலகிலேயே நவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய எஸ்யூவி மாடல்களில் ஒன்று என்பதுடன், விலையிலும் அல்பசல்பையான எஸ்யூவி அல்ல.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த எஸ்யூவியில் இருக்கும் 4.4 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரையும், 740 என்எம் டார்க்கையும் வழங்கும். 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. 8 ஏர்பேக்குகள், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் என்று தொழில்நுட்ப வசதிகளின் பட்டியலின் நீளம் பெரியது. ரூ.2.62 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

04. போர்ஷே கேயென்

04. போர்ஷே கேயென்

ரோல்ஸ்ராய்ஸ், பென்ட்லீ என நேர் எதிர் போட்டியாளர்களின் கார்களை வாங்கியிருப்பதுபோல், ரேஞ்ச்ரோவருக்கு போட்டியான போர்ஷே கேயென் எஸ்யூவியும் அக்ஷய்குமாரிடம் உள்ளது. பெரும்பாலும் ஓட்டுனரை பயன்படுத்தும் அக்ஷம், இந்த காரை கண்டதும், சொந்தமாக டிரைவ் செய்வதை விரும்புவாராம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

இந்த காரில் இருக்கும் 4.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடல் 520 பிஎச்பி பவரை அளிக்கும் வல்லமை கொண்டது. மணிக்கு 221 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. ஒரு கோடி ரூபாய் விலையில் கிடைக்கிறது.

05. முதல் கார்

05. முதல் கார்

அக்ஷய்குமாரின் கராஜிற்கு வந்த முதல் கார் மாடல் ஹோண்டா சிஆர்வி எஸ்யூவிதான். எனவே, இந்த காருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பராமரித்து வருகிறார். ஹோண்டா பிராண்டின் தொழில்நுட்ப திறனையும், தரத்தையும் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கிய மாடலாக இருந்து வருகிறது.

ஹோண்டா சிஆர்வி

ஹோண்டா சிஆர்வி

இந்த காரில் இருக்கும் 2354சிசி பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 187 பிஎச்பி பவரையும், 226 என்எம் டார்க்கையும் வழங்கும். லிட்டருக்கு 12 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. ரூ.23.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Akshay Kumar Luxury car collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X