‘காலா’வில் நடிகர் ரஜினி பயன்படுத்திய ஜீப்பை கேட்ட ஆனந்த மஹிந்திராவிற்கு நடிகர் தனுஷ் பதில்..!!

Written By:

'காலா' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி அமர்ந்துள்ள ஜீப்பை அருங்காட்சியத்துக்கு கோரிய மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருக்கு நடிகர் தனுஷ் பதிலளித்துள்ளார்.

மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குனர் ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ‘காலா'. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

மும்பை தாராவி பின்னணியில் ஜீப்பின் மீது ரஜினி அமர்ந்து இருக்கும் நிலையில் அவரின் ஸ்டைலான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் காலா குறித்த ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினியால் பயன்படுத்தப்பட்ட அந்தக் கார் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அது குறித்து எனக்கு தெரியப்படுத்துங்கள் அந்த ஜீப்பை எங்களது நிறுவனத்தின் அருங்காட்சியகத்துக்காக வாங்க ஆசைப்படுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினியால் பயன்படுத்தப்பட்ட அந்தக் கார் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அது குறித்து எனக்கு தெரியப்படுத்துங்கள் அந்த ஜீப்பை எங்களது நிறுவனத்தின் அருங்காட்சியகத்துக்காக வாங்க ஆசைப்படுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆனந்த் மஹிந்திராவின் இந்த டிவீட் டிவிட்டரில் அதிகப் பேரால் ரீடிவீட் செய்யப்பட்டது. எனினும் இது கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட காட்சி என்றும் அவருக்கு சிலரால் பதில் கூறப்பட்டது.

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரின் இந்த டிவீட்டை கண்ட காலா படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தற்போது அவருக்கு பதில் அளித்துள்ளார்.

டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திராவிற்கு நடிகர் தனுஷ் அளித்துள்ள பதிலில், "மிகவும் நன்றி சார்.. தற்போது அந்த ஜீப் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டாரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது"

"படப்பிடிப்பு முடிந்தவுடன் உங்களுக்கு அந்த ஜீப் நிச்சயமாக அனுப்பி வைக்கப்படும்" எனவும் நடிகர் தனுஷ் பதில் அளித்துள்ளார்.

 

 

காலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி அமர்ந்திருப்பது மஹிந்திரா நிறுவனத்தின் தார் ஜீப் மாடல் என்பதும், அதன் காரணமாகவே ஆனந்த் மஹிந்திரா இதனை தனது அருங்காட்சியகத்துக்காக வாங்க ஆசைப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் தனுஷின் பதிலைக் கண்டு மகிழ்ச்சியடைந்த ஆனந்த் மஹிந்திரா அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அற்புதம்.. உங்கள் பதிலுக்கு நன்றி என்றும், படக்குழுவினருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா இதற்கு முன்னதாகவே இதே போன்று ஒரு முறை டிவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஸ்கார்பியோ கார் போன்று மாடிஃபை செய்யப்பட்ட ஷேர் ஆட்டோ ஒன்றின் புகைப்படம் டிவிட்டரில் டிரெண்ட் ஆனதைக் கண்ட ஆனந்த மஹிந்திரா அதனை தனது அருங்காட்சியகத்துக்காக வாங்க ஆசைப்படுவதாக கூறி தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள் என கோரியிருந்தார்.

கேரளாவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் தான் அதன் உரிமையாளர் என கண்டறியப்பட்டதை அந்த ஸ்கார்பியோ டிசைன் கொண்ட ஷேர் ஆட்டோவை வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக புதிய சுப்ரோ வாகனத்தை அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசாக அளித்தார்.

ஆனந்த மஹிந்திராவின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் மிகவும் பாராட்டப்பட்டது. ஆனந்த மஹிந்திரா விரைவில் மஹிந்திரா அருங்காட்சியகம் ஒன்றை துவங்க உள்ளார்.

இது மும்பையில் உள்ள கந்திவ்லி பகுதியில் அமையும் என்றும் இந்த அருங்காட்சியகத்துக்காக பிரபலமான இதைப் போன்ற மஹிந்திரா வாகனங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

English summary
Read in Tamil about Actor Dhanush responds to anand mahindra for asking about rajini used jeep in kaala poster.
Please Wait while comments are loading...

Latest Photos