இந்திய பிரபலங்களின் புதிய மோகம்... பிஎம்டபிள்யூ ஐ8 கார் வாங்கி நடிகை ஷில்பா ஷெட்டி!

By Saravana Rajan

உலகின் அதிசிறந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான பிஎம்டபிள்யூ ஐ8 மீது இந்திய பிரபலங்களின் கவனம் திரும்பியுள்ளது. ஆம், ஷாரூக்கான், டெண்டுல்கர் போன்ற பிரபலங்களை தொடர்ந்து, நடிகை ஷில்பா ஷெட்டியும் இந்த காரை வாங்கியிருக்கிறார்.

அதிக விலை மதிப்பு கொண்ட இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரின் எண்ணிக்கை மும்பையில் அதிகரித்து வருகிறது. இந்த காரை பிரபலங்கள் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கான காரணங்களையும், கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

 வீட்டிலேயே டெலிவிரி

வீட்டிலேயே டெலிவிரி

கடந்த மாதம் நடிகை ஷில்பாவின் வீட்டிற்கு டிரக்கில் வைத்து எடுத்து வந்து அந்த பிஎம்டபிள்யூ ஐ8 ஸ்போர்ட்ஸ் கார் டெலிவிரி கொடுக்கப்பட்டது.

காரில் ரவுண்டு

காரில் ரவுண்டு

கார் சாவி கையில் கிடைத்ததுமே, சற்றும் தாமதிக்காமல் டிரைவரை ஓட்டச் சொல்லி தனது மகனுடன் அவர் மும்பையிலுள்ள தனது வீட்டின் அருகிலுள்ள வீதிகளில் வலம் வந்தார். இந்த காரை பிரபலங்கள் விரும்புவதற்கு பல காரணங்கள் அமைந்துள்ளன.

டிசைன்

டிசைன்

பிஎம்டபிள்யூ ஐ8 காரின் டிசைன் மிகவும் வித்தியாசமாகவும், கவர்ச்சியாகவும் அமைந்துள்ளது. முன்பக்கத்திலிருநது பின்பக்கம் வரை ஒவ்வொரு பகுதியுமே வித்தியாசமாகவும், நளினங்கள் நிறைந்தும் வசீகரிக்கிறது. குறிப்பாக, நீல வண்ண அலங்காரம் காரின் கவர்ச்சியை கூட்டுகிறது. இதன் கல் விங் ரக கதவுகளும் காரிலிருந்து இறங்கும்போது புதுவித அனுபவத்தையும், ரசனையையும் காட்டும்.

ஹைபிரிட் தொழில்நுட்பம்

ஹைபிரிட் தொழில்நுட்பம்

உலக அளவில் பிஎம்டபிள்யூ ஐ8 காருக்கு முன்பதிவு குவிந்தது அறிந்ததே. இதற்கு காரணம், இந்த கார் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் என்பதே. ஆம், இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவரை பின்புற வீல்களுக்கும், எலக்ட்ரிக் மோட்டார் முன்புற சக்கரங்களுக்கும் பவரை கடத்தும்.

பவர்ஃபுல் மாடல்

பவர்ஃபுல் மாடல்

பெட்ரோல் எஞ்சின் 228 எச்பி ஆற்றலையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும். எலக்ட்ரிக் மோட்டார் 129 எச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். அதிகபட்சமாக ஹைபிரிட் நுட்பத்தில் 357 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்.

செயல்திறன்

செயல்திறன்

இந்த ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை பறக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

ஸ்போர்ட்ஸ் கார்கள் என்றாலே, மைலேஜ் பற்றி பேசுவது அபத்தம் என்று கருதப்படும் நிலையில், இந்த கார் ஹைபிரிட் கார்களுக்கான கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 40 கிமீ வரை மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதுவும் பலரை கவர்ந்திழுக்கும் விஷயம்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ஸ்மார்ட் சாவி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், முன்புறம், பின்புறத்திற்கான பார்க்கிங் சென்சார்கள், நேவிகேஷன் சிஸ்டம், ஆட்டோமேட்டட் பிரேக் சிஸ்டம், ஹை பீம் அசிஸ்ட் போன்ற பல நவீன வசதிகளை கொண்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

இந்தியாவில் இறக்குமதி விற்பனை செய்யப்படும் இந்த கார் ரூ.2.29 கோடி விலையில் கிடைக்கிறது. வரிகள் உட்பட ரூ.3 கோடி வரை அடக்க விலை கொண்டது.

பிஎம்டபிள்யூ ஐ8 காரின் 'ஸ்மார்ட் கீ' பற்றிய சிறப்பு தகவல்கள்!!

பிஎம்டபிள்யூ ஐ8 காரின் 'ஸ்மார்ட் கீ' பற்றிய சிறப்பு தகவல்கள்!!

Images source

Most Read Articles
English summary
Actress Shilpa Shetty gifts herself a BMW i8.
Story first published: Wednesday, June 29, 2016, 12:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X