தேர்தல் பிரச்சாரத்திற்கு விமானத்தை பயன்படுத்திய முதல் அரசியல் தலைவர் யார் தெரியுமா?

முதல்முறையாக தேர்தல் பிரச்சாரத்திற்கு விமானத்தை பயன்படுத்திய தலைவர் யார் தெரியுமா? ஸ்லைடருக்கு வந்துவிடுங்கள்.

பேரை கேட்டாலே நடுங்குதுல்ல...

பேரை கேட்டாலே நடுங்குதுல்ல...

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர்தான் முதல்முறையாக தேர்தல் பிரச்சாரத்திற்கு தனி விமானத்தை பயன்படுத்திய தலைவர். தேர்தல் பிரச்சாரத்திற்கு விமானத்தை பயன்படுத்தலாம் என்ற வழக்கத்திற்கு வித்திட்டவரும் இவர்தான்.

 பொதுதேர்தல்

பொதுதேர்தல்

ஆம், 1932ம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த பொதுத்தேர்தலின்போது ஹிட்லர் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு விமானத்தை பயன்படுத்தினார். அதுவரை அரசியல் தலைவர்கள் ரயிலில்தான் பயணித்து வந்தனர். இது அப்போது விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், அவர் கவலைப்படவில்லை.

ஹிட்லரின் முதல் தனி விமானம்

ஹிட்லரின் முதல் தனி விமானம்

பிரச்சாரத்தின்போது வாடகை விமானத்தை பயன்படுத்திய ஹிட்லர், ஜெர்மனியின் தலைவரான பிறகு 1933ம் ஆண்டு ஹிட்லர் தனது பயன்பாட்டுக்காக முதல் விமானத்தை வாங்கினார். D-2600 என்ற பதிவெண் கொண்ட ஜுங்கர்ஸ் ஜேயு 52/3எம் என்ற தனி விமானத்தை அவர் வாங்கினார்.

விமானத்தின் சிறப்பு

விமானத்தின் சிறப்பு

ஜெர்மனியை சேர்ந்த ஜுங்கர்ஸ் நிறுவனம் 1931ம் ஆண்டு முதல் 1952ம் ஆண்டு வரை இந்த விமானத்தை தயாரித்தது. பொது போக்குவரத்து மற்றும் ஜெர்மனியின் ராணு போக்குவரத்து பயன்பாட்டில் இருந்தன. நடுத்தர வகை குண்டு வீச்சு விமானமாகவும், ராணுவ சரக்கு போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டது. 1980 வரை பயன்பாட்டில் இருந்தது.

விமானத்தின் செல்ல பெயர்

விமானத்தின் செல்ல பெயர்

முதலாம் உலகப்போரில் ஜெர்மனிக்கு வான்வழி வெற்றிகளை குவித்து தந்த மேக்ஸ் இம்மெல்மான்[படத்தில் இருப்பவர்] என்ற பைலட்டின் பெயரையே தனது தனி விமானத்திற்கு சூட்டினார். இந்த விமானத்தில் பிராட் அண்ட் ஒயிட்னி நிறுவனத்தின் உரிமத்துடன் தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ 132 எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

விசேஷ டேபிள்

விசேஷ டேபிள்

ஹிட்லரின் தனி விமானத்தில் அவரது இருக்கையின் வலது புறத்தில் ஒரு சிறிய டேபிளும் இருந்தது. அதில் விமானத்தின் வேகத்தை காட்டும் ஸ்பீடோமீட்டர், கடிகாரம், விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்பதை காட்டும் அல்டிமீட்டர் ஆகிய கருவிகள் இருந்தன.

பைலட்

பைலட்

லூஃப்தான்ஸா விமான நிறுவனத்தில் ஒரு மில்லியன் கிலோமீட்டர்கள் பறந்த அனுபவமிக்க பவுர் என்ற பைலட்டையே தனது தனி விமானத்தின் பைலட்டாக ஹிட்லர் நியமித்தார். பழுத்த அனுபவம் வாய்ந்த அவர், விமான பழுது குறித்து கண்டறிவதிலும் வல்லராக இருந்ததே காரணம். தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இவர்தான் பைலட்டாக இருந்தார்.

 ராசியாக இருக்கலாம்

ராசியாக இருக்கலாம்

தேர்தல் பிரச்சாரத்தின்போது பைலட்டாக இருந்த பவுர் ஹிட்லரை பெரிதும் கவர்ந்துவிட்டார். அவரை மிகவும் வெற்றிகரமானவராக கருதிய ஹிட்லர் தன்னுடனே அவரை வைத்துக் கொள்ள விரும்பினார்.

அந்தஸ்துமிக்க பைலட்

அந்தஸ்துமிக்க பைலட்

பவுர் ஹிட்லர் விமானத்தின் அதிகாரப்பூர்வ பைலட்டாக மட்டுமின்றி, தனது பாதுகாப்பு குழுவினரின் தலைவராகவும் அவரை நியமித்தார். அத்துடன், தனது பாதுகாப்புப் படையினரின் விரிவாக்கத்திற்கும் பவுருக்கு முழ அதிகாரத்தையும் வழங்கினார்.

பதவி உயர்வு

பதவி உயர்வு

1934ம் ஆண்டில் பெர்லின் டெம்பிலாஃப் விமான நிலையத்தை மையமாக கொண்டு அரசுத் துறையினர் பயன்படுத்துவதற்கான விமானப் படை பிரிவை நிறுவினார். அதற்கு பவுரை தலைவராக நியமித்தார். மொத்தம் 17 பேர் செல்வதற்கு வசதி கொண்ட 8 விமானங்கள் இருந்தன.

கார் பரிசு

கார் பரிசு

பவுர் மீது மிகுந்த நம்பிக்கையும், பாசமும் கொண்டிருந்த ஹிட்லர், அவரை சைவ பிரியராக மாற்ற முயற்சித்தார். ஆனால், அது நடக்கவில்லை. இதையடுத்து, தனது 40வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பவுருக்கு பிடித்த பன்றிக்கறி உணவுடன் விருந்து வைத்ததுடன், பவர் வைத்திருந்த ஃபோர்டு காருக்கு மாற்றாக புதிய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரையும் அன்பளிப்பாக வழங்கினார்.

புதிய விமானம்

புதிய விமானம்

1939ம் ஆண்டு ஹிட்லர் பயன்படுத்திய தனி விமானத்தைவிட பன்மடங்கு சிறந்த வசதிகள் கொண்ட Focke-Wulf Fw 200 Condor விமானத்தை வாங்க விரும்பினார். இந்த விமானம் சிறந்த உட்புற வசதிகள், சொகுசு அம்சங்களை கொண்டது. இதில், 26 பேர் பயணிக்க முடியும்.

தாக்குதல்

தாக்குதல்

பவுரின் விருப்பப்படியே, ஹிட்லர் Focke-Wulf Fw 200 Condor விமானத்தை வாங்கி பயன்படுத்த துவங்கினார். 1944ம் ஆண்டு ஜூலை 18ந் தேதி கூட்டுப்படைகளின் விமான தாக்குதலில் இந்த விமானம் அழிக்கப்பட்டது.

கைதான பவுர்

கைதான பவுர்

இரண்டாம் உலகப்போரின்போது சோவியூத் யூனியன் ராணுவத்தால் பவுர் சிறைபிடிக்கப்பட்டார். அதன் பிறகு 10 ஆண்டுகள் கழித்து பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு 1957ம் ஆண்டு வரை சிறையிலிருந்த அவர் 1993ம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள பவேரியா என்ற இடத்தில் காலமானார்.

சர்வாதிகாரிகளின் கார்கள்...

சர்வாதிகாரிகளின் கார்கள்...

Source: Wikipedia

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
German Nazi Leader Adolf Hitler was the first politician to campaign by air travel, deciding that travel by plane was more efficient than travel by railway.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X