புதிய பறக்கும் பைக்கிற்கு முன்பதிவு ஆரம்பம் - படங்கள், தகவல்கள்

By Saravana

ஏரோ- எக்ஸ் என்ற பெயரில் புதிய பறக்கும் பைக்கை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த ஏரோஃபெக்ஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய பைக்கை வரும் 2017ம் ஆண்டு முதல் டெலிவிரி கொடுக்க ஏரோஃபெக்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த புதிய பறக்கும் பைக்கை வாங்குவதற்கு ஏரோஃபெக்ஸ் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீவிர சோதனை

தீவிர சோதனை

தற்போது ஏரோ- எக்ஸ் பறக்கும் பைக்கை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர் ஏகோஃபெக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள். இதனை ஹோவர்பைக் என்றும் அழைக்கின்றனர். அதாவது, தரையிலிருந்து சில மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன்கொண்டதாக இருக்கும்.

இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த புதிய ஹோவர்பைக்கில் இருவர் பயணிப்பதற்கான வசதியை கொண்டிருக்கும். இதில், சக்கரங்களை தவிர்த்து கார்பன் ஃபைபரிலான இரண்டு பெரிய ரோட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 ரோட்டர் பயன்

ரோட்டர் பயன்

இந்த ஹோவர்பைக்கை தரையிலிருந்து மேலே எழும்புவதற்கும், திருப்புவதற்கும் ரோட்டர்கள் பயன்படும். தரையிலிருந்து 9 அடி உயரத்திற்கு இந்த பைக்கை ரோட்டர்கள் மேலே எழுப்பும் திறன் கொண்டது.

எடை

எடை

இந்த புதிய ஹோவர் பைக் 356 கிலோ எடை கொண்டது. 140 கிலோ எடை வரையில் சுமந்து செல்லும் திறன் கொண்டது. ஹெலிகாப்டர் போன்று தரையிலிருந்து செங்குத்தாக மேலே எழுப்பவும், தரை இறக்கவும் முடியும்.

வேகம்

வேகம்

சோதனைகளின்போது அதிகபட்சமாக மணிக்கு 68 கிமீ வேகம் வரை சென்று தனது திறனை நிரூபித்துள்ளது. ஒருமுறை முழுவதுமாக எரிபொருள் நிரப்பினால் 75 நிமிடங்கள் வரை பறக்குமாம்.

ஓட்டுவது எளிது

ஓட்டுவது எளிது

மோட்டார்சைக்கிளை ஓட்டுவது போன்றே இந்த ஹோவர்பைக்கை எளிதாக ஓட்ட முடியும். இதில், மோட்டார்சைக்கிள் போன்ற ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓட்டுனர் பயிற்சி

ஓட்டுனர் பயிற்சி

ஒரு சில நாட்கள் பயிற்சி பெற்றால் இந்த ஹோவர் பைக்கை எளிதாக ஓட்டலாம் எனஅறு ஏரோஃபெக்ஸ் நிறுவனர் மார்க் டி ரோச் தெரிவிக்கிறார்.

 விலை

விலை

அமெரிக்காவில் 85,000 டாலர் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.50 லட்சம் விலையில் இந்த ஏரோ- எக்ஸ் ஹோவர் பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. 5,000 டாலரை முன்பணமாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதர பயன்பாடுகள்

இதர பயன்பாடுகள்

தனி நபர் பயன்பாடு மட்டுமின்றி, பொழுதுபோக்கு துறை, மீட்புப் பணிகள், எல்லை கண்காணிப்பு போன்றவற்றில் இந்த ஹோவர் பைக்கை பயன்படுத்த முடியும் என்கின்றனர் ஏரோஃபெக்ஸ் நிறுவனத்தினர்.

வீடியோ

ஏரோ- எக்ஸ் பைக்கின் சோதனை ஓட்ட வீடியோவை காணலாம்.

Most Read Articles
English summary
Aero-X is a vehicle straight out of Hollywood sci-fi movies. Being developed by a california based company called Aerofex, the Aero-X is a flying motorcycle or rather a hoverbike. 
Story first published: Thursday, May 22, 2014, 6:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X