நிலத்திலும், நீரிலும் செல்லும் ஏடிவி வாகனத்தை வாங்கிய துபாய் போலீஸ்!

By Saravana

மீண்டும் ஒரு வாகனத்தை வாங்கி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது துபாய் போலீஸ். புகாட்டி வேரான், லம்போர்கினி அவென்டேடார் உள்ளிட்ட உலகின் உயர்வகை கார்களை வாங்கி ரோந்து பணிகளில் பயன்படுத்தி வருகின்றனர் துபாய் போலீசார்.

இந்த வரிசையில், தற்போது தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஆல்டெர்ரெய்ன் வெகிக்கிள் ரகத்தை சேர்ந்த கிப்ஸ் குவாட்ஸ்கி என்ற புதிய வாகனத்தை வாங்கியுள்ளனர். பல்வேறு பிரத்யேக அம்சங்கள் கொண்ட இந்த புதிய வாகனத்தை பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

செய்தியின் தொடர்ச்சிக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

தயாரிப்பு நிறுவனம்

தயாரிப்பு நிறுவனம்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரை சேர்ந்த கிப்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏடிவி வாகனத்தை தயாரிக்கிறது. கிப்ஸ் அக்வாடா என்ற மிதக்கும் காரை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதுபோன்று தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வாகன தயாரிப்பு தொழில்நுட்பத்திற்காக 300 காப்புரிமைகளை கிப்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. மேலும், பல காப்புரிமைகளுக்கு விண்ணப்பம் செய்து நிலுவையில் உள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

அனைத்து சாலைநிலைகளிலும் செல்லும். தேவைப்படும்போது கடற்கரையிலிருந்து கடலில் இறக்கி செல்ல முடியும். தரையிலிருந்து தண்ணீரில் செல்லும்போது ஒரு பொத்தானை அழுத்தினால், வெறும் 5 வினாடிகளில் இந்த ஏடிவி கடலில் பறக்கிறது. தண்ணீரில் இறங்கியவுடன் சக்கரங்கள் உள்ளே இழுத்து கொள்கின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த ஏடிவி ரக வாகனத்தில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கே1300எஸ் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 1.3 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 140 எச்பி பவரையும், 118 என்எம் டார்க்கையும் வழங்கும்.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

தரையிலும், தண்ணீரிலும் அதிகபட்சமாக மணிக்கு 72 கிமீ வேகத்தில் செல்லும். தரையில் ஏடிவி வாகனமாக செல்லும் இந்த குவாட்ஸ்கி தண்ணீரில் இறங்கியவுடன் அதிவேக படகு கடலில் போல பறக்கிறது.

விலை

விலை

கிப்ஸ் குவாட்ஸ்கி வாகனத்தின் விலை 40,000 அமெரிக்க டாலர்கள். தற்போது இந்த வாகனத்தை வாங்கி, அதன் செயல்திறன்களை துபாய் போலீசார் சோதிக்க உள்ளனர். அதன்பின்னர் மேலும், சில குவாட்ஸ்கி வாகனங்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

வீடியோ

கிப்ஸ் குவாட்ஸ்கியின் செயல்பாடுகளை விளக்கும் வீடியோ.

Most Read Articles
English summary
The Dubai Police know how to make it to the news. After being super celebrity personnel with their Ferraris and Lamborghinis and various other supercars as police vehicles, they have now added Quadskis to their fleet!
Story first published: Monday, October 20, 2014, 11:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X