ஹைதராபாத்தில் உலகின் மிகப்பெரிய ஏர்பஸ் விமானம்: பார்வையாளர்கள் சிலிர்ப்பு!

By Saravana

ஹைதராபாத்தில் உள்ள பேகும்பேட் விமான நிலையத்தில் நடந்து வரும் 4வது இந்திய விமான கண்காட்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏர்பஸ் ஏ380 விமானம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும், இந்த விமானத்தை இந்தியாவுக்கு இயக்குவதற்கு எமிரேட்ஸ், லூஃப்தான்ஸா பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வைத்திருந்த வேண்டுகோளுக்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. எனவே, விரைவில் இந்த விமானத்தின் சேவை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தரிசனம்

தரிசனம்

ஹைதராபாத்தில் காட்சிக்கு நிறுத்தப்பட்டிருக்கும் விமானம் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது. மேலும், சேவையில் இருக்கும் விமானத்தை முதன்முறையாக இந்தியாவில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.

 குட்டி ஊர்

குட்டி ஊர்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான இந்த ஏர்பஸ் ஏ380யில் ஒரே நேரத்தில் 800 பேர் பயணிக்க முடியும். இது எக்கானமிக் கிளாஸ் என்று கூறப்படும் சாதாரண வகுப்பு. அதுவே, 3 நட்சத்திர இருக்கை அமைப்பாக இருந்தால் 550 முதல் 600 பேர் செல்ல முடியும்.

பச்சைக் கொடி

பச்சைக் கொடி

இந்த விமானத்தை இயக்கி வரும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் கொடுத்து வந்த அழுத்தத்தின் காரணமாக இந்த விமானத்தின் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு மத்திய விமான போக்க்குவரத்து ஆணையம் கடந்த ஜனவரியில் அனுமதி அளித்தது.

 4 நகரங்களில் சேவை

4 நகரங்களில் சேவை

பெங்களூர், டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மட்டுமே இந்த விமான சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது இந்தியாவில் உள்ள மேற்கண்ட 4 விமான நிலையங்களில் இதுபோன்ற சூப்பர் ஜம்போ ரக விமானங்கள் வந்து செல்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளனவாம்.

இரண்டடுக்கு விமானம்

இரண்டடுக்கு விமானம்

இந்த விமானம் இரண்டடுக்கு கொண்டதாக கட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலான விமானங்களில் இருக்கைகள் மிகவும் சவுகரியமற்றதாக இருக்கும். ஆனால், இந்த விமானத்தில் பயணிகளுக்கு சிறந்த இடவசதி கொண்டதாக இருப்பது இதன் விசேஷ அம்சங்களில் ஒன்று.

விமான நிறுவனங்கள் ஆர்வம்

விமான நிறுவனங்கள் ஆர்வம்

தற்போது சர்வதேச அளவில் 10 விமான நிறுவனங்கள் இந்த ஏர்பஸ் ஏ380 விமானத்தை இயக்கி வருகின்றன. இதில், 9 விமான நிறுவனங்கள் இந்தியாவுக்கு இந்த ஏர்பஸ் ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை இயக்க திட்டமிட்டுள்ளன.

 ஏர்பஸ் நம்பிக்கை

ஏர்பஸ் நம்பிக்கை

ஏர்பஸ் ஏ380 விமானத்தை இயக்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து ஆணையம் அனுமதி அளித்திருப்பதை தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களும் ஏ380 விமானத்தை வாங்குவதற்கு ஆர்டர் தரும் என்று நம்புவதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மொத்த விமானங்கள்

மொத்த விமானங்கள்

உலகம் முழுவதும் 110 ஏர்பஸ் ஏ380 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

போட்டா போட்டி

போட்டா போட்டி

இந்தியாவில் வலுவான வர்த்தக வாய்ப்பு இருப்பதால் உலகின் முன்னணி நிறுவனங்களான ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விமானங்களை கண்காட்சியில் நிறுத்தியுள்ளன.

பயணிகளின் எண்ணிக்கை

பயணிகளின் எண்ணிக்கை

இந்தியாவில் உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 10 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2032ம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை கொண்ட நாடாக இந்திய வளரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய விமானங்கள்

பெரிய விமானங்கள்

இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தில் புதிய நகரங்களுக்கு சேவை விரிவடையும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதோடு, தற்போது விமான சேவை கொண்ட நகரங்களுக்கு இடையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே, சிறிய விமானங்களுக்கு பதில் புதிய பெரிய விமானங்களை இயக்குவதற்கான சாத்திக் கூறுகளும் அதிகம் உள்ளதாக இந்திய விமான கண்காட்சியில் பங்கேற்றுள்ள விமான நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

Most Read Articles
Story first published: Friday, March 14, 2014, 15:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X