போட்டி போட்டு காஸ்ட்லி கார்களை வாங்கிய ஜூனியர் அம்பானிகள்!!

Written By:

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபரும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி வீட்டு கார் கராஜ் குறித்து ஏற்கனவே சிறப்பு செய்தி வழங்கி இருக்கிறோம்.

அவரது அன்டிலியா வீட்டில் 300க்கும் அதிகமான சொகுசு கார்கள் இருப்பது குறித்தும் எழுதி இருந்தோம். இந்த நிலையில், தந்தை வழியில் முகேஷ் அம்பானியின் மகன்கள் தற்போது இரண்டு விலை உயர்ந்த கார்களை வாங்கி உள்ளனர்.

முகேஷ் அம்பானியின் மூத்த மகனும், ஜியோ தொலைதொடர்பு நிறுவனத்தின் கொள்கை வகுப்பு பிரிவு தலைவருமான ஆகாஷ் அம்பானி பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியை வாங்கி இருக்கிறார். இன்றைய தேதியில் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மிகவும் விலை உயர்ந்த எஸ்யூவி மாடல் இதுதான். தற்போது இந்த எஸ்யூவி மாடலில்தான் வலம் வருகிறார் ஆகாஷ் அம்பானி.

பென்ட்லீ கார் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் மாடலாக விற்பனைக்கு வந்திருக்கும் புதிய பென்டைகா கார் ரூ.3.85 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. வரிகள் உட்ப ரூ.5 கோடி அடக்க விலையில் இந்த காரை வாங்கியிருக்கிறார் ஆகாஷ் அம்பானி.

மிக மிக பிரத்யேகமான கார் மாடல்களில் ஒன்றாக இருப்பதுதான் ஆகாஷ் அம்பானியை கவர்ந்தது காரணம். மொத்தம் 12 விதமான பச்சை வண்ணங்களில் இந்த எஸ்யூவி கிடைக்கிறது. அதில், ஒரு பச்சை வண்ணத்தை தேர்வு செய்து வாங்கி உள்ளார்.

இந்த காரில் ஏராளமான சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த காரின் விலை ரூ.5 கோடி அடக்க விலை கொண்டதாக இருக்கும் என்று பார்த்தோம். அதேபோன்று, இந்த காரில் இருக்கும் மிகவும் விசேஷமான கடிகாரத்தின் விலை மட்டும் ரூ.1.95 கோடி என்பதும் கவனிக்கத்தக்க விஷயம்.

உலகின் அதிவேக தயாரிப்பு நிலை எஸ்யூவி மாடல் புதிய பென்ட்லீ பென்டைகா. இந்த எஸ்யூவியில் இருக்கும் 6.0 லிட்டர் டபிள்யூ12 எஞ்சின் அதிகபட்சமாக 600 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பிரம்மாண்ட எஸ்யூவி 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் எட்டிவிடும்.

தனது விலை உயர்ந்த புதிய பென்ட்லீ பென்டைகா காருக்கு MH 01 CL 123 என்ற பேன்ஸி பதிவு எண்ணையும் வாங்கி இருக்கிறார் ஆகாஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் பென்ட்லீ வாங்கிய நிலையில், அவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி ரோல்ஸ்ராய்ஸ் பான்டம் காரின் டிராப்ஹெட் கூபே கார் வாங்கி இருக்கிறார்.

ஆகாஷ் அம்பானி புதிதாக வாங்கி இருக்கும் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரை வீடியோவில் காணலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் விற்பனை செய்யும் கார்களில் மிகவும் விலை உயர்ந்த மாடல் ரோல்ஸ்ராய்ஸ் பான்டம் டிராப்ஹெட் கூபே மாடல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ரூ.8.84 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அடக்க விலை ரூ.10 கோடியை தாண்டுகிறது.

வெண்மை நிற காரில் சிவப்பு வண்ண திறந்து மூடும் கூரை அமைப்புடன் வாங்கியிருக்கிறார் ஆனந்த் அம்பானி. அண்மையில் பாதுகாவலர்களின் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிகள் புடை சூழ மும்பை சாலைகளில் ஆனந்த் அம்பானி வலம் வந்தது குறித்த வீடியோவும் வெளியாகி உள்ளது.

இந்த காரில் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 454 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 0- 100 கிமீ வேகத்தை 5.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது இந்த கார். தற்போது ஜூனியர் அம்பானிகளின் புதிய கார்கள் மும்பை சாலைகளை அலங்கரித்து வருகின்றன.

ஆனந்த் அம்பானி வாங்கி இருக்கும் புதிய ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் டிராப்ஹெட் கூபே காரை வீடியோவில் காணலாம்.

  • டாடா ஹெக்ஸா காரின் படங்களை இந்த கேலரியில் காணலாம்.

  • புதிய பஜாஜ் டோமினார்400 பைக்கின் படங்களை காணலாம்.

  • புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கேலரியில் காணலாம்.

  • புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் படங்களை கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
Story first published: Saturday, March 18, 2017, 11:37 [IST]
English summary
Read in Tamil: Akash Ambani Gets Bentley Bentayga SUV.
Please Wait while comments are loading...

Latest Photos