த்ரிஷா இல்லன்னா நயன்தாரா... வெயிட் பண்ணெல்லாம் முடியாதுங்கறேன்... !!

By Saravana Rajan

சந்தையில் அறிமுகமாகி வரும் புதிய கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும், சில குறிப்பிட்ட கார்களுக்கு, சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனமே எதிர்பார்க்காத அளவு வரவேற்பு எழுந்துவிடுகிறது.

இதன் காரணமாக, உற்பத்திக்கும், டெலிவிரிக்கும் இடையிலான சமநிலை வெகுவாக குறைந்து பல மாதங்கள் காத்திருப்பு காலத்தை பெற்றுவிடுகின்றன. ஓரிரு மாதங்கள் என்றால் பரவாயில்லை, பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட் இருக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு அந்த கார் வாங்கும் ஆர்வமும், ஆவலுமே சமயத்தில் குறைந்துவிடும். குறிப்பாக, முதல்முறை வாங்குவோருக்கு. இந்த நிலையில், காத்திருப்பு காலம் அதிகம் கொண்ட கார்களுக்கு மாற்றாக மார்க்கெட்டில் சிறந்த கார்களின் விபரங்களை இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறோம்.

 01. ரெனோ க்விட்

01. ரெனோ க்விட்

மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு சிறந்த மாற்றாக கருதப்படும் மாடல் ரெனோ க்விட். அட்டகாசமான டிசைன், அருமையான வசதிகள் என வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதனால், இந்த காருக்கான வெயிட்டிங் பீரியட் ஒரு லட்சத்திற்கும் மேல் தாண்டி நிற்கிறது. இதன் காரணமாக, க்விட் காருக்கான வெயிட்டிங் பீரியட் குறைந்தது மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் வரை நீடிக்கிறது.

க்விட் காருக்கு மாற்று

க்விட் காருக்கு மாற்று

க்விட் வேண்டாமெனினும் திரும்பவும் மாருதி ஆல்ட்டோ 800 பக்கம் செல்ல விரும்பாதவர்களுக்கு டட்சன் ரெடிகோ கார் சிறந்த மாற்றாக கருதலாம். புத்தம் புதிய டிசைன், க்விட் காருக்கு போட்டியான விலை, அதிக ஹெட்ரூம் இருப்பதால் உயரமானவர்களுக்கும் ஏதுவான மாடல் போன்றவை இந்த காருக்கு வலு சேர்க்கும் அம்சங்கள். பராமரிப்பு செலவு கூட குறைவாக இருக்கும் என்று டட்சன் உறுதி கூறுகிறது.

02. டாடா டியாகோ

02. டாடா டியாகோ

க்விட் காரைவிட சற்றே கூடுதலான பட்ஜெட்டில் சிறந்த மாடலாக கலக்கி வருகிறது டாடா டியாகோ கார். கவரும் டிசைன், பல்வேறு சிறப்பு வசதிகள், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட பெட்ரோல், டீசல் எஞ்சின்கள், அதிக மைலேஜ், சரியான விலை போன்றவை இந்த காரை முன்னிறுத்தும் அம்சங்கள். ஆனால், தற்போது இந்த காருக்கு முன்பதிவு 22,000 தாண்டியிருக்கும் நிலையில், 2 முதல் 3 மாதங்கள் வெயிட்டிங் பீரியட் உள்ளது.

டியாகோவுக்கு மாற்று...

டியாகோவுக்கு மாற்று...

டாடா டியாகோ கார் சிறப்பான தேர்வாக அமைந்துவிட்ட நிலையில், 3 மாதங்கள் வரை பொறுத்திருக்க முடியாது என்று கருதுபவர்களுக்கு சிறந்த மாற்று கார் மாடலாக மாருதி செலிரியோவை கூறலாம். பெட்ரோல், டீசல் எஞ்சின், அதிக மைலேஜ், மாருதியின் சிறப்பான வாடிக்கையாளர் சேவை, ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் என்று மாருதி செலிரியோ மிகச்சிறப்பான சாய்ஸாக இருக்கிறது.

03. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

03. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

டிசைன் கவர்ச்சியாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்த நிலையிலும், விற்பனையில் கலக்கி வருகிறது மாருதி பிரெஸ்ஸா. மாருதியின் சாதாரண டீலர்கள் வழியாக விற்பனையாவதும் இதன் மிகப்பெரிய ப்ளஸ். முன்பதிவு 70,000 தாண்டிய நிலையில், தற்போது 4 முதல் 5 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் உள்ளது. எனவே, அவ்வளவு நாள் இதற்காக காத்திருக்க முடியாது என்பவர்களுக்கான மாற்று சாய்ஸ்...

பிரெஸ்ஸாவுக்கு மாற்று...

பிரெஸ்ஸாவுக்கு மாற்று...

பிரெஸ்ஸாவுக்கு மாற்றாக ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சிறந்த சாய்ஸ். பிரெஸ்ஸா டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது. அருமையான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன்கள், நிறைவான தொழில்நுட்ப வசதிகள், பாதுகாப்பு, விலை, மைலேஜ் என அனைத்திலும் சிறப்பானது.

 04. ஹோண்டா பிஆர்வி

04. ஹோண்டா பிஆர்வி

ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் எடுபடவில்லை என்றவுடன், இந்தியர்களின் நாடித்துடிப்பை பிடித்து பார்த்து, அதனை எஸ்யூவி ரக மாடலாக மாற்றி களமிறக்கிவிட்டது ஹோண்டா. காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் போட்டியிடும் ஹோண்டா பிஆர்வி.,யின் மிகப்பெரிய ப்ளஸ், இது 7 சீட்டர் மாடல் என்பதே. பலருக்கு 7 இருக்கைகள் என்பது அவசியமாக இருப்பதால், இந்த எஸ்யூவி ரக மாடலுக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது 2 முதல் 3 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் உள்ளது.

பிஆர்விக்கு மாற்று...

பிஆர்விக்கு மாற்று...

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவிக்கு சரியான மாற்று மாடல் ரெனோ டஸ்ட்டர்தான். ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு ஏகத்துக்கும் வெயிட்டிங் பீரியட் கொண்டிருக்கும் நிலையில், டஸ்ட்டர் சிறந்த சாய்ஸாக இருக்கும். இது 5 சீட்டர் என்பதுதான் ஒரே குறை. மற்றபடி, ஹோண்டா பிஆர்வியைவிட அனைத்திலும் சிறப்பான மாடலாக இருக்கும். அப்படி இல்லாதபட்சத்தில், ரெனோ லாட்ஜி எம்பிவி காரும் சிறப்பான சாய்ஸ்தான்.

05. ஃபோர்டு எண்டெவர்

05. ஃபோர்டு எண்டெவர்

இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வந்த புதிய ஃபோர்டு எண்டெவர் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், டிசைன் மிக கம்பீரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருப்பதால், டொயோட்டா ஃபார்ச்சூனர் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிட்டது. இந்தநிலையில், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவிக்கு தற்போது 3 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் இருக்கிறது.

எண்டெவருக்கு மாற்று...

எண்டெவருக்கு மாற்று...

எண்டெவர் எஸ்யூவிக்கு சிறந்த மாற்று டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிதான். கம்பீரம், செயல்திறன், நம்பகம் போன்றவற்றில் சிறப்பானது. இந்த செக்மென்ட்டில் சிறப்பான மறுவிற்பனை மதிப்பு கொண்டது. டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவியின் புதிய மாடல் வருவதில் தாமதம் ஏற்பட்டு நிலையிலும், தற்போதைய மாடலே சிறந்த சாய்ஸாகவே கூறலாம்.

06. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

06. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. டெல்லியில், தடையால் விற்பனை பாதிக்கப்பட்ட நிலையிலும், சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. டிசைன், வசதிகள், இடவசதி, சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷன் ஆகியவை இதற்கு வலு சேர்க்கிறது. விலை அதிகம் என்றாலும், வாங்க க்யூ கட்டி நிற்கின்றனர். இதனால், காத்திருப்பு காலம் நீண்டிருக்கிறது.

 இன்னோவாவுக்கு மாற்று...

இன்னோவாவுக்கு மாற்று...

டொயோட்டா இன்னோவாவிற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. எனவே, அதற்கு இணையான சிறப்பம்சங்கள், விலை அடிப்படையில் கூற வேண்டுமெனில், மஹிந்திரா எக்ஸ்யூவி500தான் சிறந்த சாய்ஸ். கம்பீரமான டிசைன், வசதிகள், விலை போன்றவற்றில் நிறைவை தரும் மாடல்.

07. மாருதி பலேனோ

07. மாருதி பலேனோ

டிசைன், இடவசதி, சிறப்பம்சங்கள், விலை என அனைத்திலும் மாருதி பலேனோ சிறந்த தேர்வாக அமைந்துள்ளது. இதனால், இந்த காருக்கான முன்பதிவு 4 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை நீடிக்கிறது. இந்த சூழலில் இதற்கு மாற்றான சிறந்த தேர்வை பார்க்கலாம்.

 பலேனோவுக்கு மாற்று...

பலேனோவுக்கு மாற்று...

மாருதி பலேனோ காருக்கு சிறந்த மாற்றும், போட்டியும் ஹூண்டாய் எலைட் ஐ20தான். ஆனால், காத்திருப்பு காலம்தான் இரு மாடல்களுக்கும் பிரச்னை என்பதால், இந்த இரண்டு கார்களுக்குமே மிகச்சிறப்பான மாற்று மாடலாக ஹோண்டா ஜாஸ் கார் அமைந்துள்ளது. வடிவமைப்பு, வசதிகள், இடவசதி என அனைத்திலும் நிறைவைத் தருவதோடு, ஹோண்டா பிராண்டு முத்திரையும் இதற்கு வலு சேர்க்கிறது.

 உங்கள் கருத்து...

உங்கள் கருத்து...

இந்த பட்டியலில் தொகுக்கப்பட்டிருக்கும் மாடல்களில் பெரும்பாலானோவை வந்த புதிதில் சிறப்பான வரவேற்பை பெற்ற மாடல்களாகவும் இருந்தவை. உதாரணத்திற்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் என அனைத்தும் பல மாதங்கள் வெயிட்டிங் பீரியட் கொண்ட மாடல்களாக இருந்தன. எனவே, வாங்கியவுடன், அந்த காரை விட்டு இதை ஏன் வாங்கினோம் என்று சொல்ல வைக்காது என்று நம்புகிறோம். உங்கள் பார்வையில் சிறந்த மாற்று கார் மாடல்களையும் கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளலாம்.

Most Read Articles
English summary
Alternate Car Models For New Car Models With Long Waiting Period.
Story first published: Monday, June 20, 2016, 15:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X