இந்திய நெடுஞ்சாலைகள் குறித்து இதுவரை கேள்விப்படாத சுவாரஸ்யத் தகவல்கள்!

Written By:

பரந்து விரிந்த நம் தேசத்தின் போக்குவரத்து நிறைவு செய்வதில் நெடுஞ்சாலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காஷ்மீரிலிருந்து கன்னியமாகுமரி வரை சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் நெடுஞ்சாலைகளின் பங்கு மிக இன்றியமையாததாக இருந்து வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய நெடுஞ்சாலை கட்டமைப்பை பெற்ற தேசங்களில் ஒன்றான இந்தியாவின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கும் இந்த நெடுஞ்சாலைகள் குறித்த சில சுவாரஸ்யமானத் தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. தற்போதைய நிலவரப்படி நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகள், மாவட்ட சாலைகள் மற்றும் ஊரக சாலைகளை சேர்த்து சுமார் 33 லட்சம் கிமீ தூரத்திற்கான நெடுஞ்சாலை கட்டமைப்பை இந்திய தேசம் பெற்றிருக்கிறது.

02. நம் நாட்டில் 200க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இதன் ஒட்டுமொத்த நீளம் 92,851 கிலோமீட்டர்கள். அதேபோன்று, 1,31,899 கிமீ தூரத்திற்கான மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

03. இந்தியாவின் பெரும்பாலான நெடுஞ்சாலைகள் இருவழித்தடங்களுடன் அமைந்துள்ளது. இதில், 22,900 கிமீ தூரத்திற்கு 4 வழித்தடம் மற்றும் 6 வழிப் பாதைகளாக அமைந்துள்ளன.

04. தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகளையும், பராமரிப்பையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் கவனித்துக் கொள்கிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம் செயல்படுகிறது.

05. ஒட்டுமொத்த இந்திய தேசத்தின் சாலை கட்டமைப்பில் வெறும் 1.7 சதவீத அளவுக்குத்தான் நெடுஞ்சாலை கட்டமைப்பு இருக்கிறது. ஆனால், நாட்டின் மொத்த போக்குவரத்தில் 40 சதவீதம் இந்த நெடுஞ்சாலைகள் மூலமாக நடக்கிறது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக போக்குவரத்து ஆண்டுக்கு 10.16 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறதாம்.

06. நாட்டின் குறைந்த நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எது தெரியுமா? எர்ணாகுளத்திலிருந்து கொச்சி துறைமுகத்தை இணைக்கும் நெடுஞ்சாலைதான். இது வெறும் 6 கிமீ மட்டுமே நீளம் கொண்டது.

07. வாரணாசி நகரிலிருந்து கன்னியாகுமரியை இணைக்கம் NH-7 என்ற எண்ணில் குறிப்பிடப்படும் நெடுஞ்சாலைதான் இந்தியாவின் மிக நீளமான நெடுஞ்சாலை. இது 2,369 கிமீ நீளம் கொண்டது.

08. தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் வடக்கு- தெற்கு மற்றும் கிழக்கு - மேற்கு நெடுஞ்சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 7,300 கிமீ தூரத்திற்கான நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, 6,375 கிமீ தூரத்திற்கான சாலை கட்டமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. வடக்கில் ஸ்ரீநகரில் துவங்கி தென்கோடி முனையான கன்னியாகுமரி வரையிலும், மேற்கில் குஜராத் மாநிலம் போர்பந்தரில் துவங்கி அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் வரையிலும் இந்த சாலை கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.

09. அதே தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்தான் தங்க நாற்கர சாலை திட்டமும், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நான்கு பெரு நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டமும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தங்க நாற்கர சாலை திட்டம் 5,846 கிமீ தூரத்திற்கான கட்டமைப்பை கொண்டுள்ளது.

10. நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் மைல்கல் எனப்படும் தகவல் தாங்கி நிற்கும் கல் பலகைகள் வாகன ஓட்டிகளுக்கு முக்கியமானது. மேலும், இந்த மைல்கல்களின் வண்ணத்தை வைத்தே அது தேசிய நெடுஞ்சாலையா, மாநில நெடுஞ்சாலையா என்பதை கண்டறிந்துவிட முடியும். தேசிய நெடுஞ்சாலைகள் மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணப் பூச்சை கொண்டிருக்கும்.

மாநில நெடுஞ்சாலைகள் பச்சை மற்றும் வெள்ளை வண்ணப் பூச்சை கொண்டிருக்கும்.

12. நகரச் சாலைகள் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் இருக்கும். பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் சாலைகள் ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ணத்தை கொண்டிருக்கும்.

13. கடந்த 2010ம் ஆண்டு நெடுஞ்சாலை பெயர்களை முறைப்படுத்தும் விதமாக புதிய குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டன. அதன்படி, நாட்டின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகள் இரட்டை இலக்க வரிசையிலும், கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய சாலைகளுக்கு ஒற்றை இலக்க எண்களும் கொடுக்கப்பட்டன. தற்போது இதில் தலைகீழ் மாறுதல்களை செய்யவும் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

12. மூன்று இலக்க எண்களை கொண்ட நெடுஞ்சாலைகள் பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளின் கிளை சாலைகளாக இருக்கும். உதாரணத்திற்க 114 என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை, NH-44 சாலையின் கிளை சாலையாகும். மேலும், கிளை சாலையிலிருந்து பிரியும் சாலைகளை 144A, 244A என்றும் குறிப்பிடுகின்றனர்.

13. தற்போது தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை விஸ்தீரணப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இதன்படி, 30,000 கிமீ தூரத்திற்கு புதிய நெடுஞ்சாலை கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான பணிகளும், முயற்சிகளும் நடந்து வருகின்றன.

Click to compare, buy, and renew Car Insurance online

Buy InsuranceBuy Now

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Amazing Facts About Indian Highways. Read in Tamil.
Please Wait while comments are loading...

Latest Photos