அமெரிக்காவில் 25 வருடம் போராடி கார் உரிமம் பெற்ற கிறிஸ்டியன் வைட்லீ

கார் ஒட்டுவதில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில், ஒரு நபர் உரிமம் பெற 32 முறை விண்ணபித்து, 33வது முறையாக வெற்றிக்கண்டுள்ளார். அவரைப்பற்றி இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

By Azhagar

முயற்சி திருவினையாக்கும் என்பது பழமொழி, நம்மில் எத்தனை பேருக்கு அது வெற்றியை தந்தது என்பது தெரியாது. ஆனால் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டியன் வைட்லீ 25 ஆண்டுகாலம் தவமிருந்து, கடும் முயற்சிக்கு பிறகு கார் ஒட்டுநருக்கான உரிமத்தை பெற்றுள்ளார்.

32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

ஒரு தனியார் அலுவலகத்தில் மேலாளராக இருக்கும் கிறிஸ்டியன் வைட்லீவிற்கு கார் ஓட்டுவதில் அதிக ஆர்வம். சிறிய வயதிலே கார் ஒட்டுவதற்கான பயிற்சி பெற்றிருந்தாலும், அதற்கு உரிமம் பெறுவதில் அவருக்கு அதிக தயக்கமிருந்தது.

முதல் தேர்வில் சொதப்பிவிடுவது சாதரண ஒன்று தான் என்று என்ணிய கிறிஸ்டியன் வைட்லீ, அடுத்தாண்டில் முயற்சிக்கலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் தனது கார் பயிற்சியை தொடர்ந்தார்.

32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

தயங்கி நின்றாலும், உரிமத்தை பெற கிறிஸ்டியன் வைட்லீ ஒதுங்கி நிற்கவில்லை. 1992ம் ஆண்டில் முதன்முறையாக அவரது 24வது வயதில் ஓட்டுநர் உரிமத்திற்காக விண்ணப்பித்தார். எல்லாருக்கும் முதல் வாய்ப்பு சரியாக அமைந்துவிடுமா என்ன? அதனால் முதல் தேர்வு கிறிஸ்டியனிற்கு தோல்வியில் முடிந்தது.

32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

1992க்கு பிறகு உரிமம் பெறுவதற்காக நடத்தப்பட்ட சோதனை அனைத்திலும் கிறிஸ்டியன் வைட்லீ தொடர்ந்து தோல்விகளையே சந்தித்தார். ஓட்டத்திறனை சோதிக்க விருப்பும் பயிற்றுவிப்பாளர்கள் கிறிஸ்டியன் சோதனை கூடத்திற்கு வந்தால், ஓடி ஒளிந்தனர்.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

உரிமம் பெறுவதற்காக கிறிஸ்டியன் வைட்லீ உடன் விண்ணபித்த பலரும், அவரை பார்த்து சிரித்தனர். தனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவதை என்ணி அவர் கண்கலங்கினார். ஆனால் கலங்கி நின்றாலும், அமெரிக்காவிலே 32 முறை கார் ஓட்டும் தேர்வில் கலந்துகொண்டு, உரிமம் பெறாமல் தொடர்ந்து தோல்வியை சந்தித்த ஒரே நபர் என்ற புதிய சாதனை கிறிஸ்டியன் வைட்லீ படைத்தார்.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

இது வெளியில் சாதனையாக தெரிந்தாலும், கிறிஸ்டியன் வைட்லீவிற்கு அவமானத்தை தான் வழங்கியது. இதனால் கார் உரிமம் பெறுவதற்கான முயற்சியை 2003ம் ஆண்டோடு நிறுத்திக்கொண்டார். மேலும் கார் ஓட்டும் பயிற்சிக்கு செல்வதையும் நிறுத்திவிட்டார்.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

இந்த நிலையில் தான் கிறிஸ்டியன் வைட்லீ புதிய வேலைக்கு மாறுகிறார். அலுவலகத்தில் உட்கார முடியாமல் வெளியில் அலைச்சல் கொண்ட குணநலன்களை கொண்ட வேலை. தன்னிடம் கார் உரிமம் இல்லாததால், கிறிஸ்டியன் வைட்லீ பெரும்பாலும் பொது போக்குவரத்து வசதிகள், டாக்ஸி ஆகியவற்றை பயன்படுத்தியே வேலைக்கு சென்றார்.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

அமெரிக்கா போன்ற அதிக செலவுபிடிக்கும் நாடுகளில், இதுபோன்ற வேலை ஒரு நபருக்கு எத்தனை நஷ்டத்தை தரும். ஆம், அதேதான் தான் கிறிஸ்டியன் வைட்லீவிற்கும் நடந்தது, வேலையை காபாற்றிக்கொள்ள தன் சொத்தில் பாதியை இழந்தார். காசு தன்ணீராக ஓடியது.அமெரிக்கா போன்ற அதிக செலவுபிடிக்கும் நாடுகளில், இதுபோன்ற வேலை ஒரு நபருக்கு எத்தனை நஷ்டத்தை தரும்.

ஆம், அதேதான் தான் கிறிஸ்டியன் வைட்லீவிற்கும் நடந்தது, வேலையை காபாற்றிக்கொள்ள தன் சொத்தில் பாதியை இழந்தார். காசு தண்ணீராக ஓடியது.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

பொருளாதார சிக்கல் ஏற்படவே, மீண்டும் கார் உரிமம் பெறுவது தான் சரி என்று கிறிஸியல் வைட்லீ முடிவு செய்தார். அதற்காக கடுமையாக உழைத்தார். தினமும் பயிற்சி கூடத்திற்கு சென்று, காரில் ஓட்டுவதில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

கடந்த ஜனவரி மாதம் 33வது முறையாக கார் உரிமத்திற்காக விண்ணபித்தார். மீண்டும் போக்குவரத்து அலுவலகத்திற்கு கிறிஸ்டியன் வைட்லீ விண்ணப்பம் வந்திருப்பதை பார்த்து அதிகாரிகள் பலர் சிரித்தனர். இந்த முறையும் தோல்வியையே தழுவுவார் என்று பந்தயம் கூட வைத்துக்கொண்டனர்.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

உரிமம் பெறுவதற்கான நாளும் வந்தது, ஆய்வாளருடன் காரில் அமர்ந்த கிறிஸியன் வைட்லீ முதல் கியரை அழுத்தி சாலையில் செலுத்தினார், கார் அவர் சொன்னதை செய்தது. சரியாக காரை ஓட்டி, கியர்களை பயன்படுத்தி அனைத்து வளைவுகளிலும் சென்று துல்லியமாக காரை நிறுத்தினார் கிறிஸ்டியன் வைட்லீ.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

அதிகாரிகள் வாயை பிளந்துவிட்டனர், ஆய்வாளர் ஆச்சர்யமாக பார்த்தார். ஆனால் கிறிஸ்டியனிற்கு இதான் நடக்கும் என முன்னரே தெரியும், அதனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மாறாக, தன்னை பார்த்து சிரித்தவர்களிடம் "கார் உரிமம் பெறுவதற்கு நான் தகுதியற்றவன் என எல்லோரும் நகைத்தனர், அவமானப்படுத்தினர். ஆனால் இன்று எனக்கு மட்டுமே தெரியும் நான் நிச்சயம் வெற்றிக்காண்பேன் என்று. இதோ நான் இப்போது வெற்றியாளன்" என்று கூறினார்.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

33வது முறையாக கார் உரிமம் பெறுவதில் கிறிஸ்டியன் வெற்றி பெற்றிருந்தாலும், ஆய்வாளர் தயவு செய்து கிறிஸ்டியனை காபாற்றியுள்ளார் எனவும், போனால் போகிறது என அமெரிக்கா போக்குவரத்து துறை அவருக்கு உரிமம் வழங்கியுள்ளது எனவும் கிறிஸ்டியன் வைட்லீ வெற்றியை விமர்சித்து அமெரிக்க இணையதளங்கள் செய்தி வெளியிட்டன.

 32 முயற்சிகளுக்கு பிறகு கார் உரிமம் பெற்ற சாதனை நபர்

ஆனால், அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் "நேர்மையான முறையில் கார் உரிமம் பெற்றத்தில் மகிழ்ச்சியாக உள்ளது, வாழ்நாளில் இருந்த ஒரே வேட்கையை நிறைவேற்றியதில் பெருமை அடைகிறேன்" என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கிறிஸ்டியன் வைட்லே ஸ்டேட்டஸை மாற்றியுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Christian Whiteley, an american guy got his car driver license after failing 32 driving tests in over 25 years.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X