4.5 மணி நேரத்தில் மும்பை டு நியூயார்க்... புதிய சூப்பர்சானிக் விமானம் தயாராகிறது!

By Saravana Rajan

4.5 மணி நேரத்தில் மும்பையிலிருந்து நியூயார்க் சென்றடையும் பூம் என்ற புதிய சூப்பர்சானிக் பயணிகள் விமானத்தை தயாரிக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஒன்று களமிறங்கியிருக்கிறது.

விமான சேவையில் உலகின் புகழ்பெற்ற நிறுவனமான வெர்ஜின் உரிமையாளர் சர் ரிச்சர்டு பிரான்ஸன் இந்த பூம் நிறுவனத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொடுத்திருப்பதால், இந்த விமானம் ஓரிரு ஆண்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு விடும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கான்கார்டை விட வேகம்

கான்கார்டை விட வேகம்

உலகின் அதிவேக விமானம் என்ற பெருமைக்குரிய கான்கார்டு அதிகபட்சமாக 2.04 மேக் வேகத்தில் பயணிக்கும். ஆனால், புதிய பூம் சூப்பர்சானிக் விமானம் அதிகபட்சமாக 2.2 மேக் வேகத்தில் பயணிக்குமாம். அதாவது, மணிக்கு 3,210 கிமீ வேகத்தில் பயணிக்கும்.

மீண்டும் சூப்பர்சானிக்

மீண்டும் சூப்பர்சானிக்

"கான்கார்டு போன்ற புதிய சூப்பர்சானிக் விமானம் மீண்டும் வரும் என்று நம்புவதாகவும், ஆனால், புதிய விமானத்தில் பயணக் கட்டணம் மிக குறைவாக இருக்கும்," என்றும் வெர்ஜின் நிறுவனர் சர் ரிச்சர்டு பிரான்ஸன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆர்டர்

ஆர்டர்

புதிய பூம் சூப்பர்சானிக் விமானத் தயாரிப்பிற்கான தொழில்நுட்ப உதவிகளை தனது வெர்ஜின் கலாக்டிக் என்ற விண்வெளி ஓட ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்கு வெர்ஜின் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், விமானத்தின் சோதனை ஓட்டத்திற்கான ஒத்துழைப்புகளை நல்க இருக்கிறது. அத்துடன், முதல் 10 பூம் விமானங்களின் உடல்கூடுகளை வாங்கிக் கொள்ளவும் வெர்ஜின் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.

2017ல் அறிமுகம்

2017ல் அறிமுகம்

அடுத்த ஆண்டு புதிய சூப்பர்சானிக் விமானத்தின் புரோட்டோடைப் மாடலை அறிமுகம் செய்ய பூம் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த விமானத்தை வடிவமைக்கும் பணியில் நாசா, லாக்ஹீட் மார்ட்டின்மற்றும் போயிங் நிறுவனங்களை சேர்ந்த முன்னாள் எஞ்சினியர்கள் 11 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

கட்டணம்

கட்டணம்

கான்கார்டு விமானத்தின் கட்டணம் 20,000 டாலர்கள் என்று மிக அதிகமாக இருந்ததும், அதன் பராமரிப்பு செலவு கட்டுப்படியாகாததாலும்தான் சேவையிலிருந்து விலக்கப்பட்டது. இந்த நிலையில், கட்டணத்தை 5,000 டாலர்களுக்குள்[இந்திய மதிப்பில் ரூ.3.34 லட்சம்] நிர்ணயிக்க பூம் - வெர்ஜின் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கின்றன.

 எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

விமானத்தின் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பும்பட்சத்தில், சூப்பர்சானிக் விமானங்களை இயக்குவது சாத்தியம். எனவே, சரியான வடிவத்தில் விமானத்தை வடிவமைப்பது அவசியம் என்று பூம் நிறுவனத்தின் அதிகாரி ஸ்கால் தெரிவித்திருக்கிறார்.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

பூம் சூப்பர்சானிக் விமானத்தில் 40 பேர் பயணிக்க முடியும். அதாவது, இரண்டு வரிசையாக ஜன்னலோர இருக்கைகள் மட்டுமே கொண்டதாக இருக்கும். மேலும், 60,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும்போது பூமியின் உருளை வடிவத்தை பயணிகள் காணும் பாக்கியத்தையும் பெற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தக வாய்ப்பு

வர்த்தக வாய்ப்பு

நீண்ட தூர வழித்தடங்களில் இந்த விமானத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும், சூப்பர்சானிக் விமானங்களுக்கு ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் என்ற அளவில் மார்க்கெட் இருக்கிறது. எனவே, இந்த விமானத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று ஸ்கால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 குவியும் முதலீடு

குவியும் முதலீடு

பூம் விமான தயாரிப்புத் திட்டத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி தொழில்நுட்ப பூங்காவிலிருந்து இயங்கும் பல நிறுவனங்களின் அதிபர்கள் முதலீடு செய்து வருவதாக பூம் விமான தயாரிப்பு திட்டத்தின் தலைவரும், முன்னாள் விமானியுமான ஸ்கால் தெரிவித்துள்ளார்.

கான்கார்டு விமானத்திற்கு புது வாழ்வு... மீண்டும் பறக்கப் போகிறது!

கான்கார்டு விமானத்திற்கு புது வாழ்வு... மீண்டும் பறக்கப் போகிறது!

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
American Startup Firm Building New Supersonic Passenger Jet of the Future.
Story first published: Tuesday, July 19, 2016, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X