தரையிலும், தண்ணீரிலும் செல்லும் ஆட்டோரிக்ஷா: பிலிப்பைன்ஸ் நிறுவனம் அசத்தல்

By Saravana

தரையிலும், தண்ணீரிலும் செல்லத்தக்க புதிய மூன்று சக்கர வாகனத்தை பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எச்2ஓ டெக்னாலஜீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாலமண்டர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய மிதக்கும் ஆட்டோரிக்ஷா கான்செப்ட் மாடலை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நில தகவமைப்புக்கு ஏற்ற சிறப்பான போக்குவரத்து சாதனமாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவ்வப்போது அங்கு ஏற்படும் வெள்ள பாதிப்புகளின்போது இதனை மீட்பு வாகனமாகவும், பயன்படுத்த முடியும் என்று இதனை உருவாக்கிய எச்2ஓ டெக்னாலஜீஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த மிதக்கும் ஆட்டோரிக்ஷாவின் சிறப்புகளை ஸ்லைடரில் காணலாம்.


கடின முயற்சி

கடின முயற்சி

5 ஆண்டுகள் கடின முயற்சியில் இந்த புதிய மிதக்கும் ஆட்டோரிக்ஷா கான்செப்ட் மாடலை உருவாக்கியுள்ளதாக எச்2ஓ டெக்னாலஜீஸ் தெரிவித்திருக்கிறது.

இருக்கை வசதி

இருக்கை வசதி

டிரைவர் உள்பட இந்த மிதக்கும் ஆட்டோரிக்ஷாவில் 6 பேர் பயணிக்க முடியும். ஆனால், தண்ணீருக்குள் செல்லும்போது 4 பேர் மட்டுமே பயணிக்கலாம்.

பைக் எஞ்சின்

பைக் எஞ்சின்

இந்த மிதக்கும் வாகனத்தில் 250சிசி மோட்டார்சைக்கிள் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த மிதக்கும் ஆட்டோரிக்ஷா எலக்ட்ரிக் மோட்டாரில் இயங்கும் மற்றொரு மாடலிலும் உருவாக்கியுள்ளனர்.

 வேகம்

வேகம்

தரையில் மணிக்கு 80 கிமீ வேகம் வரையிலும், தண்ணீரில் மிதந்து செல்லும்போது 6 நாட்டிக்கல் மைல் வேகத்திலும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இது ஏபிஎஸ் பிளாஸ்டிக் பாடியும், ஸ்டீல் ஹல் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

 விற்பனை

விற்பனை

இந்த புதிய மிதக்கும் வாகனத்தை வர்த்தக ரீதியில் தயாரிப்பதற்காக முதலீடு வேண்டி பிற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எச்2ஓ டெக்னாலஜீஸ். வரும் 2016ல் இதனை வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டிருக்கிறது எச்2ஓ நிறுவனம்.

விலை

விலை

இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம் விலையில் இந்த புதிய மிதக்கும் ஆட்டோரிக்ஷாவை விற்பனைக்கு அறிமுகம் செய்ய எச்2ஓ டெக்னாலஜீஸ் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #offbeat #ஆஃப் பீட்
English summary
Philippine based H2O Technologies took the electric auto rickshaw a step further by making an amphibious version. The company recently introduced the Salamander amphibious tricycle. 
Story first published: Wednesday, February 11, 2015, 12:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X