சொகுசுக் கார் விபத்தில் அமைச்சரின் மகன் இறந்ததற்கான காரணம் இதுதான்; வெளிச்சத்திற்கு வந்த விவரங்கள்

Written By:

ஆந்திர அமைச்சரின் மகன் நிதிஷ் நாரயணன் ஹைதராபாத்தில் சொகுசுக் கார் விபத்தில் மரணமடைந்தது தொடர்பான காரணத்தை தற்போது போலீசார் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 10ம் தேதி ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வேகமாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 63 ஏ.எம்.ஜி கார் அங்கியிருந்த மெட்ரோ ரயிலிற்கான தூணில் மோதி சிதைந்து போனது.

இதில் சம்பவ இடத்திலேயே நிஷித் நாராயணன் என்ற 23 வயது இளைஞர் மரணமடைந்தார். இவர் ஆந்திராவின் நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பி. நாராயணனின் மகனாவார்.

இதே விபத்தில் நிஷித் நாராயணின் நண்பரான ராஜ ரவிசந்திராவும் மரணமடைந்தார். தேசியளவில் கவனம் பெற்ற இந்த விபத்திற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கl தெரிவித்தனர்

மிகவும் பாதுகாப்பான காராக மெர்சிடிஸ் நிறுவனம் விளம்பரப்படுத்திய ஜி 63 ஏ.எம்.ஜி காரில் இப்படி ஒரு கோரமான விபத்து நிகழ்ந்தது பல தரப்பு மக்களிடமும், ஆட்டோமொபைல் வல்லுநர்களிடமும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

தானாக இயங்கும் பிரேக் அமைப்பு, மின்னணு உறுதிப்பாடு, சாலைக்கு ஏற்றவாறு வேகத்தை தீர்மானிக்கும் தொழில்நுட்பம் என பல பாதுகாப்பு அம்சங்கள் இந்த காரில் இருந்தும் கூட விபத்தில் எதுவும் பயனளிக்கவில்லை.

இந்நிலையில் தான் ஹைதாராபாத் போலீசாருக்கு விபத்து நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகள் கிடைத்தன. இதை ஆராய்ந்த போலீசார் காரில் செலுத்தப்பட்ட அதிவேகமே விபத்திற்கான காரணம் என கண்டறிந்தனர்.

இதற்கு பிறகு நடத்தப்பட்ட பலகட்ட விசாரணைக்கு பிறகு அமைச்சர் மகன் நிஷித் நாராயணன் இறப்பு குறித்த விவரங்களை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஹைதாராபாத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் ஒவ்வொரு மெட்ரோ தூணும் 75 அடி தொலைவில் கட்டப்பட்டு வருகிறது.  விபத்து நடைபெற்ற ஜூப்லி ஹில்ஸ் பகுதியிலும் இதே கட்டமைப்பு தான் மெட்ரோவிற்காக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நிஷித் நாரயணன் காரில் வந்த போது ஒரு தூணிலிருந்து மற்றொரு தூணை சுமார் 0.56 நொடிகளில் கடந்துள்ளார். இதன்மூலம் விபத்து நடந்த மே 10ம் தேதி நிஷித் நாராயணன், மெர்சிடிஸ் ஜி63 ஏ.எம்.ஜி கார் சுமார் 146 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றுள்ளார் என ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் மரணமடைந்த நிஷித் நாராயணன் எப்போதும் காரை வேகமாக ஓட்டக்கூடியவர். காரில் வேகமாக சென்று நிஷித் போக்குவரத்து விதி மீறல்கள் செய்ததற்கான ஆதாரங்கள் பல விபத்து நடந்த காரில் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. 

மரணமடைந்த நிஷித் நாராயணன் ஓட்டிசென்ற கார் மெர்சிடிஸ் ஜி 63 எஸ்.யூ.வி கார். இதில், ஆபத்துக்காலத்தில் துரிதமாக செயல்படக்கூடிய பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ஆனால் அவை எதுவும் பயனளிக்காமல் போனதற்கு காரணம் விபத்து நடந்த அன்று காரில் செலுத்தப்பட்ட அதிவேகம் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்திற்கு பிறகு ஆந்திரா மாநிலம் போக்குவரத்து விதிகளில் பல மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. அதில் முக்கியமாக வாகனங்களில் வேகக் கட்டுபாடு.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பேருந்துகளில் வேகக் கட்டுபாட்டை குறைக்க வலியுறுத்தப்போவதாக ஆந்திராவின் துணை போக்குவரத்து கமிஷனர் வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வாகனங்களின் உச்சவரம்பு வேகமும் மணிக்கு 80 கிமீ ஆகவும், பள்ளி வாகனங்களின் வாகன வேகம் 60கிமீ ஆகவும் குறைக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படாத வாகனங்களுக்கு பதிவுகளை புதுப்பிக்கவும் முடியாது என்றும் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Andhra minister son's death, Nishith was driving mercedes g63 at 146 kmph per speed. Says Police.
Please Wait while comments are loading...

Latest Photos