லம்போர்கினியில் இருந்து மெர்சிடிஸ் காருக்கு மாறிய அனில் அம்பானி.. காரணம் என்ன..?

Written By:

இந்திய திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் கார் கலெக்‌ஷன்களை நம்முடைய டிரைவ் ஸ்பார்க் தளத்தில் கண்டிருக்கிறோம். இந்நிலையில் இந்திய நட்சத்திர கார் பிரியர்களில் ஒருவரான அனில் அம்பானியில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் கார் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியவின் விஐபி கார் பிரியர்கள் மத்தியில் அனில் அம்பானி குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒருவராக விளங்கி வருகிறார்.

அனில் அம்பானி

அம்பானி சகோதர்களில் இளையவரான அனில் அம்பானி அதிகமான ஊடக வெளிச்சங்களில் சிக்காதவர் ஆவார். அனில் திருபாய் அம்பானி குரூப்பின் தலைவரான இவர் இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்கிறார்.

ஃபைனான்ஸ், தொலைத்தொடர்பு, சினிமா, பவர் ஜெனரேஷன் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் அனில் அம்பானி.

இவரின் அண்ணன் முகேஷ் அம்பானியைக் காட்டிலும் சொத்து மதிப்பில் இவர் சற்று குறைவாக இருந்தாலும் முகேஷைக் காட்டிலும் அதிகமான கார்களை இவர் தன் கேரஜில் நிறுத்தியுள்ளார்.

இந்தியாவின் முக்கிய பிரமுகர்களில் அனில் அம்பானி குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு கார் பிரியர் ஆவார். மேலும் உடல் ஆரோக்கியத்திலும் இவர் அதிக ஈடுபாடு கொண்டவராக உள்ளார்.

அனில் அம்பானி என்னற்ற கார்கள் வைத்திருந்தாலும் அவரிடம் இருக்கும் கார் கலெக்‌ஷனில் மிகவும் குறிப்பிடத்தக்கது லம்போர்கினி கல்லார்டா சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

அனில் அம்பானி என்னற்ற கார்கள் வைத்திருந்தாலும் அவரிடம் இருக்கும் கார் கலெக்‌ஷனில் மிகவும் குறிப்பிடத்தக்கது லம்போர்கினி கல்லார்டா சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும்.

உலகில் இதுவரை தயாரிக்கப்பட்ட சூப்பர் கார்களில் லம்போர்கினி கல்லார்டோவுக்கு தனிப்பட்ட இடம் உள்ளது. 2003ல் அறிமுகமான இந்தக் கார் 2013 வரையிலும் தயாரிப்பில் இருந்தது.

லம்போர்கினி கல்லார்டோ காரில் 10 சிலிண்டர்கள் கொண்ட 5.2 லிட்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 570 பிஎஸ் ஆற்றலை அளிக்கவல்லதாகும். 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.4 வினாடிகளில் எட்டிப்பிடித்துவிடும் இந்தக் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிமீ ஆகும்.

அனில் அம்பானி இந்த லம்போர்கினி கல்லார்டோ மாடல் காரினை தான் அதிகமாக பயன்படுத்தி வந்தார். தற்போது மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ் (டபிள்யூ-222) மாடலின் புதிய தலைமுறை சொகுசுக் கார் ஒன்றினை இவர் வாங்கியுள்ளார்.

இவரிடம் ஏற்கெனவே ஒரு மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் பென்ஸ் கார் இருக்கும் நிலையில் தற்போது இதன் புதிய தலைமுறை காரை இவர் வாங்கியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

எண்ணற்ற தொழில்நுட்ப அம்சங்களும் ஆடம்பர வசதிகளும் நிரம்பிய இந்த எஸ்-கிளாஸ் பென்ஸ் காரில் பயணிப்பதை விருப்பமாகக் கொண்டுள்ளார் அனில் அம்பானி. இதன் சொகுசு காரணமாகவே லம்போர்கினி கல்லார்டோவில் இருந்து இந்தக் காருக்கு இவர் மாறியுள்ளதாக தெரிகிறது.

உலகின் அதிகம் விற்பனையாகும் ஆடம்பர சொகுசுக் கார் என்ற பெயரையும் இந்த மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் (டபிள்யூ-222) கார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் காரில் 4.0 லிட்டர் டிவின் ரர்போ வி8 இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 345 கிலோவாட் பவரையும் 700 என்எம் டார்க்கையும் வழங்கவல்லதாகும். 

இதன் விலை 1.2 கோடி ரூபாயிலிருந்து தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 2, 2017, 16:44 [IST]
English summary
Read in Tamil about Anil ambani gets brand new mercedes benz s-class car.
Please Wait while comments are loading...

Latest Photos