பாகுபலி நாயகி அனுஷ்காவின் கேரவன் வாகனம் பறிமுதல்: பொள்ளாச்சியில் திடீர் பரபரப்பு

Written By:

பாகுபலி படத்தின் 2ம் பாகம் கடந்த மாதம் வெளியாகி தற்போது வரை 1500 கோடிக்கும் உலகளவில் வசூல் சாதனை படைத்து ஓடி வருகிறது.

இதில் நடித்த பலரும் இந்தியளவில் சூப்பர் ஸ்டார்களாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிரபாஸ் மற்றும் அனுஷ்கா இருவரை இந்திய திரையுலகம் உற்றுநோக்கி வருகிறது.

இந்நிலையில் பாகுபலி படத்தில் நடித்தவர்களில் அனுஷ்கா மட்டும் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

தெலுங்கில் தயாராகும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பொள்ளாச்சியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அனுஷ்கா படப்பிடிப்பு நடப்பதை அறியும் பலர் படப்பிடிப்பு தளத்திற்கு தினமும் வந்து கூட்ட நெரிசல் ஏற்படுவதால், பணிகளை முடிக்க படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது

ரசிகர்களின் வருகை அதிகரித்து வருவதால் நடிகை அனுஷ்கா அவருக்காக இருந்த கேரவனில் தங்காமல், பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அனுஷ்காவிற்காக கொண்டுவரப்பட்ட கேரவனை தமிழ்நாடு போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு தளம் பரபரப்பானது. கேரவன் எதற்காக கைப்பற்றப்பட்டது என்பது குறித்த தகவல்களை படக்குழு அறிந்திருக்கவில்லை.

பின்னர் அவர்களிடம் பேசிய போக்குவரத்து போலீசார், பொள்ளாச்சியில் நடைபெறும் படப்பிடிப்பு தளங்களில் இந்த குறிப்பிட்ட வாகனத்தை பயன்படுத்த உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்வதாக தெரிவித்தனர்.

உரிய ஆவணங்களை காண்பித்து மீண்டும் கேரவனை பெற்றுக்கொள்ள படக்குழுவிற்கு போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவர்களிடம் கேரவனை கைப்பற்றி, பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

தயாரிப்பாளர் தரப்பில் கேரவனுக்கு உரிய வாடகைப் பணம் தராததால், அதன் உரிமையாளர் போக்குவரத்து போலீசிடம் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த போலீசார் கேரவனை கைப்பற்றி சென்றுள்ளனர் என மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலீசார் கேரவனை கைப்பற்றி செல்லும் போது அதில் அனுஷ்கா இல்லை. தற்போது கேரவன் இல்லாததால் அனுஷ்கா பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா என படக்குழு கவலையில் உள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Anushka's Caravan Confiscated by Pollachi traffic police. Click for Details..
Please Wait while comments are loading...

Latest Photos