பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டியது குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இங்கே காணலாம்.

ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் ஒவ்வொரு புதிய ஐபோன் மாடல் வருகையின்போதும், அவரது நினைவுகள் எல்லோருக்கும் வருவது இயல்பு. அவ்வாறு, இப்போது ஐபோன் 8 போன் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவரை பற்றியும் பல சுவாரஸ்யமான செய்திகள் உலா வரத் துவங்கி உள்ளன.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

மென்பொருள் துறை வல்லுனர் என்பதையும் தாண்டி, அவர் மென்பொருள் துறையின் ஜாம்பவானாக பார்க்கப்படுகிறார். வித்தியாசமான மூளைக்காரர் என்று உலகமே போற்றுகிறது. கில்லாடித்தனத்தை தனது கார் நம்பர் பிளேட்டிலும் அவர் காட்டியதுதான் பலரையும் ஆச்சரியப்படுத்திய விஷயம்.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஆம், ஸ்டீவ் ஜாப்ஸ் தினசரி பயன்பாட்டுக்கு வைத்திருந்த மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்55 ஏஎம்ஜி காரில் பதிவு எண் இல்லாமலேயே தொடர்ந்து பயன்படுத்தினார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ரகசியம் குறித்த தகவலும் ஆச்சரியம்தான்.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

சிறந்த மூளைக்காரராக புகழப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ், அவர் வசித்த கலிஃபோர்னியா நகரின் போக்குவரத்து விதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி, தனது காரில் பதிவு எண் இல்லாமலேயே ஓட்டி வந்துள்ளார். சரி, தன்னிடம் உள்ள பணத்தை வைத்து அவ்வப்போது அபராதம் செலுத்தி இருப்பார் என்று பலரும் நினைத்திருந்தனர்.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. கலிஃபோர்னியாவில் புதிதாக வாங்கப்படும் காருக்கு 6 மாதங்கள் வரை பதிவு எண் இல்லாமல் ஓட்ட முடியும். இந்த சட்டத்தை பயன்படுத்தியே, தனது காரில் பதிவு எண் இல்லாமலேயே ஓட்டி வந்துள்ளார்.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

இதற்காக, அங்குள்ள கார் லீஸ் நிறுவனத்தில் ஒவ்வொரு 6 மாதத்திற்கும் ஒருமுறை ஒரு புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்55 ஏஎம்ஜி காரை வாங்கி பயன்படுத்தி உள்ளார்.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

மேலும், அதே சில்வர் நிற காரையே தேர்வு செய்து வாங்கி இருக்கிறார். இதனால், அவர் ஒரே காரை பயன்படுத்துவது போன்ற மாயை உருவாக்கி உள்ளார். எல்லோருக்கும் இதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம்.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

இதனால், அவரது காரில் பதிவு எண் இல்லாமலேயே ஓட்ட முடிந்துள்ளது. போலீசாரிடம் அவர் ஒருமுறை கூட மாட்டாமல், அபராதம் செலுத்தாமல் அவ்வாறு செய்துள்ளார். மேலும், ஸ்டீவ் ஜாப்ஸ் இதுபோன்று நம்பர் இல்லாமல் ஓட்டியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனால், அவற்றை அவர் பொருட்படுத்தவில்லை.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

தனது காரை யாரும் அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் அவர் அப்படி செய்ததாக வழக்கம்போல் சில ஆதரவு குரல்களும் அவருக்காக எழுந்தன. அவருக்கு அச்சுறுத்தல்கள் இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

பதிவு எண் இல்லாமலேயே கார் ஓட்டிய 'கில்லாடி' ஸ்டீவ் ஜாப்ஸ்!

அவர் எத்தனை மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்55 ஏஎம்ஜி கார்களை பயன்படுத்தினார் என்பதுதான் இதுவரை தெரியாத ரகசியம்.

ஸ்டீவ் ஜாப்ஸ் எண்ணத்தில் உருவான கடைசி பொக்கிஷம்!!

Most Read Articles
English summary
Read in Tamil: Apple founder Steve Jobs drove a Mercedes without Number Plate.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X